Skip to main content
பொதிகைச் சாரல்

பொதிகைச் சாரல்

By Jaya Ram

Available on
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

மெய்யைத் தொழுதல்-4 (4)

பொதிகைச் சாரல் Sep 03, 2020

00:00
04:50
கம்பராமாயணம்...


காண்டம்-யுத்த காண்டம்

படலம் -இராவணன் சோகப் படலம் .


பாடல் எண் -612


நாள்

கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள்

கம்பராமாயணம்...


காண்டம்-யுத்த காண்டம்

படலம் -இராவணன் சோகப் படலம் .


பாடல் எண் -612


நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள்.


கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர்
ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை .


விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை .


கு.பாஸ்கர் ....... அபுதாபி
Jan 28, 202407:13
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் : அண்டா மழை
ஆசிரியர் : உதயசங்கர்
பதிப்பகம் : வானம்
கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்
Jan 05, 202406:59
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் :அந்தியில் மலர்ந்த மொட்டுகள், தொகுத்தவர்: உமையவன்,
கதையாசிரியர் ரமணி,
பதிப்பகம்: நிவேதிதா பதிப்பகம்,
கதை சொல்பவர்: கார்த்திகா கவின் குமார்
Jan 05, 202404:56
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

கதை - பட்டாம்பூச்சிகள் எங்கே?
எழுத்தாளர் - விஷ்ணுபுரம் சரவணன்
புத்தகம் - வித்தைக்காரச்சிறுமி
பதிப்பகம் - வானம்
கதைசொல்லி - உதயசங்கர்
Jan 05, 202408:02
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் : ஒரு பூ ஒரு பூதம் ஆசிரியர் : மருதன் பதிப்பகம் : வானம் கதை சொல்லி : சரிதாஜோ
Jan 05, 202407:52
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

புத்தகம்: தாத்தா சட்டை
கதை : உருவத்தில் என்ன இருக்கிறது?
எழுத்தாளர்: யெஸ். பாலபாரதி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
கதைசொல்லி : சங்கீதா பிரகாஷ்
Jan 05, 202409:47
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் : குட்டிப் பாப்பாவின் அற்புத உலகம்
ஆசிரியர் : உதயசங்கர்
பதிப்பகம் : சுவடு
கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்
Jan 05, 202411:15
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் :இங்கிலீஷ் தவளை,
நூலாசிரியர்: ஆயிஷா இரா.நடராசன் பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்,
கதை சொல்பவர்: கார்த்திகா கவின் குமார்
Jan 05, 202405:49
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

கதை - சக்கு
எழுத்தாளர் - கதைசொல்லி சதீஷ்
புத்தகம் - கதை வண்டி
கதைசொல்லி - உதயசங்கர்
Jan 05, 202410:50
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் : மூக்கு நீண்ட குருவி ஆசிரியர் : கன்னி கோவில் ராஜா பதிப்பகம் : வானம் கதைசொல்லி : சரிதா ஜோ
Jan 05, 202408:31
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் : அலைகளின் அம்மா யாரு?
நூலாசிரியர்: கொ.மா.கோ. இளங்கோ,
பதிப்பகம்: வானம், கதை சொல்பவர்: கார்த்திகா கவின் குமார்
Jan 01, 202408:12
கம்பராமாயணம் 585

கம்பராமாயணம் 585

கம்பராமாயணம்..


கருடன் இராமனைத் துதித்தல்...


காண்டம் -யுத்த காண்டம்.

படலம் -நாகபாசப் படலம்.

பாடல் எண் -585

நாள் -ஐந்நூற்று எண்பத்து ஐந்தாவது நாள் .


எறிந்தாரும்,ஏறுபடுவாறும்,இன்ன
பொருள் கண்டு இரங்குபவரும்
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை
தெரிகின்றது ,உள்ளது இடையே
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி
பிறியாது நிற்றி பெரியோய்
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இல்
அதிரேக மாயை அறிவார் ?.

விளக்கம் -பெரியவனே -படைக்கலன்களை எறிபவரும்,அதனால் காயப் படுபவர்களும்,இத்தகைய செயலைக் கண்டு இரங்குபவரும் ,நெருங்கி இருந்து வாழ்பவர்கள் இடத்திலும் நீ ஒருங்கு கலந்திருப்பது உண்மை என்ற செய்தி உன்னில் தெரிகின்றது.அறிவில் இருந்து பிரிந்தவர்கள் நீக்கியுள்ள ஞானமாகிய பொருளுடன் நீயும் அவர்களிடம் இருந்து பிரிந்து போகிறாய் , அவ்வாறு பிரிந்தாலும் கூட அந்தர்மியாகப் பிரியாமல் இருக்கிறாய் ,தத்துவ ஞானிகள் உண்மை உணர்வால் ஆய்ந்து அறிந்த மெய் பொருளாகவும் விளங்குகிறாய் இந்த மிகுதியான மாயையை யார் அறிவார்?.


கு.பாஸ்கர் ....... அபுதாபி
Dec 09, 202307:02
கம்பராமாயணம் 584

கம்பராமாயணம் 584

கம்பராமாயணம்..

கருடன் இராமனைத் துதித்தல்..


காண்டம்-யுத்த காண்டம்.

படலம்-நாகபாசப் படலம்.


பாடல் எண்.584

நாள் -ஐந்நூற்று எண்பத்து நான்காவது நாள்.


வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி
அவை எய்தி என்றும் விளையா
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி
அறியாமை நிற்றி மனமா
முனைவர்க்கும் ஒத்தி ,அமரர்கும் ஒத்தி,
முழுமூடர் என்னும் முதலானோர்
அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை ஆர் இல்
அதிரேக மாயை அறிவார் ?.


விளக்கம்.

உயிர்களின் பாவ புண்ணியங்களாகிய இரு வினைகளுக்கு தகுந்தவாறு அந்த உயிர்களை உடனே தக்க உடல் எடுக்கச் செய்து அந்த உடம்புகளை அடைந்து உன் திருவடிகளையே நினைக்கும் பக்தர்களுக்கு எப்போதும் அவர்கள் மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி அறியாமல் நிற்கின்றாய் , முனிவர்களுக்கும் , தேவர்களுக்கும் மனமாக விளங்குகிறாய் ,முழு அறிவிலிகள் என்னும் மற்ற பிறருக்கும் அறியமுடியாதவனாக இருக்கிறாய் இந்த மாயச் செயலைச் யார் அறிவார்....


கு.பாஸ்கர் ... அபுதாபி
Dec 08, 202306:55
கம்பராமாயணம் 583

கம்பராமாயணம் 583

கம்பராமாயணம்...


கருடன் இராமனை துதித்தல்.

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் - 583.

நாள் - ஐந்நூற்று எண்பத்துமூன்றாவது நாள்.


மீளாத வேதம், முடிவின்கண், நின்னை
மெய்யாக மெய்யின் நினையும்
கேளாத என்று பிற என்று சொன்ன
கெடுவார்கள் சொன்ன கடவான்
மாளாத நீதி இகழாமை நின் கண்
அபிமானம் இல்லை வறியோர்
ஆளாயும் வாழ்தி, அரசாள்தி, ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்.


விளக்கம் - மெய்யில் இருந்து விலகி மீளுதல் இல்லாத வேதங்களின் முடிபொருளாய் உள்ள வேதச் சிகையாய் விளங்கும் உபநிடதங்கள் உன்னைப் பற்றி கூறும் இடத்து உண்மைப் பொருளாகக் கொண்டு உண்மை மெய்யுணர்வாகிய பதிஞானத்தால் ஆய்ந்து கூறும் அவ்வாறு இருக்கும் போது நான் கடவுளைக் கண்டேன் என்று ஒருவர் கூறும் கூற்று கேள்விப் படாத கூற்று எனவும் இக் கூற்று வேறு காரணத்திற்காக கூறப்பட்டது (கடவுள் உண்மையில் இல்லை) என்றும் கூறுகிற கூற்று அறிவில்லாத நாத்திகர்கள் சொன்னதாகும், தாங்கள் கூறிய கூற்றினைக் கடவாது அவர்கள் ஒரு போதும் பழுதுபடாத, சாத்திர, நீதி முறை பழுதுபடாமலும், உன்னிடம் பக்தி செலுத்தாமலும் கெட்டு அழிவார்கள், ஆனால் நீயோ பத்துடை அடியவர்க்கு எளிய ஏவல் ஆளாகவும் வாழ்கிறாய், அனைத்து உலகங்களையும் அரசாள்கிறாய், இந்த மாயச் செயலை யார் அறிவார்...


கு. பாஸ்கர்.... அபுதாபி
Dec 08, 202306:46
கம்பராமாயணம் 582

கம்பராமாயணம் 582

கம்பராமாயணம்....


கருடன் இராமனை துதித்தல்..


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் - 582


நாள் - ஐந்நூற்று எண்பத்திரண்டாவது நாள்.


வாணாள் அளித்தி முடியாமல் நீதி
வழுவாமல் நிற்றி மறையோய்
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று
பெறுவான் அருத்தி பிழையாய்
ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி
உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இவ்
அதிரேக மாயை அறிவார்?.


விளக்கம் - வேத வடிவானவனே உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் வினைக்குத் தகுந்த வாழ்நாளைக் கொடுக்கிறாய், எக்காலத்தும் அழியாமல், அறம் தவறாமல் நிற்கிறாய், குறைவிலா நிறைவாக இருப்பதால் உனக்கு வேறு பொருள் வேண்டும் என்று இல்லை, பிறர் பெறுவதற்கு விரும்பும் பொருளை தவறாமல் கொடுப்பாய்,, நுகர் பொருளாகவும், உயிருக்கு உயிராகவும், ஐம்புல உணர்வுகளுக்கு அரிய ஆய பெண்ணின் உருவாகியும்,, ஆணின் வடிவமாகியும், அலியின் வடிவமாக வும் நிற்கிறாய் இந்த அரிய மாயச் செயலை அறிபவர் யார்..


கு. பாஸ்கர்.... அபுதாபி
Dec 08, 202307:04
கம்பராமாயணம் 581

கம்பராமாயணம் 581

கம்பராமாயணம்...


கருடண் இராமனைத் துதித்தல்..


காண்டம் - யுத்த காண்டம்.


படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் - 581

நாள் - ஐந்நூற்று எண்பத்தொன்றாவது நாள்.


தேவாதிதேவர் பலராலும் முந்து
திருநாமம் ஓது செயலோய்
மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும்
அரசாளும் மேன்மை முதல்வா
மேவாத இன்பம் அவை மேவி மேவ
நெடு வீடு காட்டு அம் முடியாய்
ஆவாய் வருந்தி அழிவாய் கொல் ஆர் இல்
அதிரேக மாயை அறிவார்?.

விளக்கம் - தேவர், பிரமன், உருத்திரன் முதலிய தலைமைத் தேவர்கள் போன்ற பலரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு நின் திருநாமத்தை சொல்லித் துதிக்கும் படியாக உள்ளவனே மூப்படையாது எப்போதும் பதிநான்கு உலகங்களையும் பாதுகாத்து அரசு செய்கிற மேன்மை பொருந்திய தலைவனே உன்னை சரண் புகுந்தவர் பிறரால் அடைய முடியாத பேரின்பங்களை அடைந்து இறுதியில் உன்னை அடைய முத்தி உலகத்தை காட்டும் தலைவனாகிய நீ வருத்தம் கொண்டு அழிவாய் போலும் இந்த உன்னுடைய மிகுதியான மாயச் செயலை அறியத் தக்கவர் யார்?.


கு. பாஸ்கர்... அபுதாபி
Dec 08, 202307:05
கம்பராமாயணம் 580

கம்பராமாயணம் 580

கம்பராமாயணம்.

வீடணன் நிகழ்ந்தது கூறல்..


காண்டம் - யுத்த காண்டம்..

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் 580

நாள் - ஐந்நூற்று எண்பதாவது நாள்.


பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும்
இன் உயிர் துறந்தார் இல்லை, இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினைப் பாவம் என்றான்..


விளக்கம் - விடணன் எழுந்து நின்று வணங்கி எங்கள் தலைவனே இவர்களில் எவரும் தங்கள்இனிய உயிரை விட்டுவிடவில்லை, இறுகப் பிணைத்துள்ள நாகபாசம் நீங்கினால் உயிருடன் எழுவர் இவர்கள் புன்மையான முனையுடைய அம்புகளுக்கு வலி கெடும் தன்மையுடையவர்களா? புலம்பி வருந்தாதே அறத்தினைப் பாவம் எக்காலமும் வெற்றி கொள்ளாது என்றான்..


கு. பாஸ்கர்.... அபுதாபி
Dec 08, 202306:10
கம்பராமாயணம் 577

கம்பராமாயணம் 577

கம்பராமாயணம்...


இலக்குவன் நிலை கண்டு வீடணன் புலம்பல்.


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் - 577

நாள் - ஐந்நூற்று எழுபத்தேழாவது நாள்.


ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம்
கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன் கழிந்தும் இல்லேன்
அத் தலைக்கு அல்லேன் யான், ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற
இத் தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலைச் சூலம் போல்வேன்.


விளக்கம் - வானர வீரர்களுடன் ஒப்பாகப் பகைவர்களை வருத்தி அவர்கள் இறக்கும் நிலை வரின் நானும் அவர்களுக்கு ஒப்பாக இறந்து, வாழ்ந்து உய்யும் நெறிகள் இருப்பின் யானும் பிழைத்து அவர்களையும் பிழைப்பித்து என் பக்தியுள்ள மனத்தின் தன்மையை உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கிக் காட்டினேன் அல்லன் யான் இறந்து போகவுமில்லை, நான் இராவணன் பக்கத்துக்கு வைண்டாதவனானேன், இங்கு சரண் என்று சேர்ந்து நின்ற இராமன் பக்கத்துக்கும் வேண்டாதவனானேன் இரண்டு பிரிவாக உள்ள சூலத்தைப் போன்றவனானேன்...

கு. பாஸ்கர்.... அபுதாபி
Dec 08, 202306:60
கம்பராமாயணம் 576

கம்பராமாயணம் 576

கம்பராமாயணம்..

நாகபாசத்தால் கட்டுண்டவர் நிலை.


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் - 576

நாள் - ஐந்நூற்று எழுபத்தாறாவது நாள்.


ஆயிரம் கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மானத்
தீ எரி சிதறும் செங் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான்..


விளக்கம் - மான உணர்வினால் தீப்பொறி சிதறுகின்ற சிவந்த கண்களை உடைய அஞ்சனை பெற்ற சிங்கம் போன்றவனாகிய அனுமன் ஆயிரம் கோடி அம்புகள் தன் மார்பினுள் ஊடுருவிய போதிலும் ஒரு சிறிதும் வருத்தம் அடையவில்லை ஆனால் இலக்குவனுக்கு நேர்ந்த துன்பம் தன் நெஞசைச் சுட மன நடுக்கம் கொண்டான்...

கு. பாஸ்கர்... அபுதாபி
Nov 29, 202306:44
கம்பராமாயணம் 575

கம்பராமாயணம் 575

கம்பராமாயணம்...


இந்திரசித்தன் கவசத்தை இலக்குவன் பிளத்தல்

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் - 575


நாள் - ஐந்நூற்று எழுபத்தைந்தாவது நாள்.


நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால் கவசத்தை கழித்து வீழ்த்தான்..


விளக்கம் - பெய்த இடத்தில் பெய்யும் மழையை ஒத்தவன் ஆகிய இலக்குவன் விரைவாகச் சென்று நெருங்கி இராவணன் மகனாகிய இந்திரசித்தன் தளர்ச்சியடைந்த தன்மை கண்டு இவனை யான் விரைவாகக் கொன்று வீழ்த்துவேன் என்று ஒப்பற்ற சினம் மிகுந்து மாறுபாடு கொண்ட இயமனைப் போன்ற தனது கையில் உள்ள வில்லில் பூட்டிய பெரிய அம்புகளால் அவனது கவசத்தை அறுத்து வீழ்த்தினான்..


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 29, 202306:19
கம்பராமாயணம் 574

கம்பராமாயணம் 574

கம்பராமாயணம்...

இலக்குவன், வீடணன் உரையாடல்.


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - நாகபாசப் படலம்

பாடல் எண் - 574

நாள் - ஐந்நூற்று எழுபத்து நான்காவது நாள்.

பல் பதினாயிரம் தேவர் பக்கமா
எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால்.


விளக்கம் - பெருமை மிகுந்த அழகிய தோள்களை உடையவனே பதினாயிரக்கணக்கான தேவர்கள் பக்கபலமாக வர அளவில்லாத படைகளை கொண்டு இந்த இந்திரசித்தனை எதிர்த்த இந்திரன் அமுதம் உண்டதன் காரணமாக விரைவில் தோற்றவனாகியும் கூட உயிரை விடாமல் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளான்..


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 29, 202306:53
கம்பராமாயணம் 573

கம்பராமாயணம் 573

கம்பராமாயணம்...

இந்திர சித்தன் வஞ்சினம்..


காண்டம் - யுத்த காண்டம்..

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் 573

நாள் - ஐந்நூற்று எழுபத்து மூன்றாவது நாள்.


மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி
பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து பாரின்
இருந்தேன் எனின் நான் அவ் இராவணி அல்லென் என்றான்.

விளக்கம் - சாவா மருந்தைப் போன்ற என் தம்பியாகிய அதிகாயன் தன் அரிய உயிரை கவர்ந்தவனாகிய இலக்குவனை யமனுக்கு விருந்து கொடுக்காமல் என்னுடன் போரிடும் பகைவர்களான தேவர்கூட்டம் எள்ளி நகை செய்திட வில்லையும் கையில் ஏந்தி நான் நிலத்தில் பொருந்தி இருந்தேன் என்றால் அந்த இராவணனுடைய மகன் அல்லேன் என்று கூறினான்..

கு. பாஸ்கர்... அபுதாபி
Nov 29, 202306:48
கம்பராமாயணம் 572

கம்பராமாயணம் 572

கம்பராமாயணம்...
இந்திரசித்தன் இராவணன் உரையாடல்..

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - நாகபாசப் படலம்.

பாடல் எண் - 572

நாள் - ஐந்நூற்று எழுபத்திரண்டாவத நாள்.


அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை
விக்கல் பொரு, வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்
புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை புத்தி இல்லாய்
மக்கள் துணை அற்றனை, இற்றது உன் வாழ்க்கை மன்னோ.


விளக்கம் - அக்க குமாரன் என்ற பெயர் கொண்டவனை நிலத்தில் தேய்த்து அழித்தவனாகிய அனுமனை எச்சிலுக்கு சமமான எதிரியின் விருப்பமான சொற்களைச் சொல்லுகிற தூதன் என்று சொல்லி விட்டாய், அவனை விட்டதால் நம் பக்கச் செய்திகள் எதிர்ப் பக்கத்தில் புகுந்து நின்றதை நினைத்தாய் இல்லை, அறிவு அழிந்து போனவனே இப்போது நீ மக்களின் துணையை இழந்து விட்டாய் உன் வாழ்க்கை அழிந்து விட்டது...


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 29, 202307:10
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் : நட்சத்திரக் கண்கள். ஆசிரியர் : கொ.மா.கோ. இளங்கோ. கதை : இயற்கை வைத்தியர். கதை சொல்லி : சரிதா ஜோ
Nov 29, 202308:54
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

கதை - வானத்துடன் ட்டூ எறும்பின் ஆசை
எழுத்தாளர் - விஷ்ணுபுரம் சரவணன்
புத்தகம் - வானத்துடன் டூ
பதிப்பகம் - வானம்
கதைசொல்லி - உதயசங்கர்
Nov 29, 202307:01
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் : என்ன சொன்னது லூசியானா ?
ஆசிரியர் : மதிவதனி, செல்வ ஶ்ரீராம்,
பதிப்பகம் : பாரதி
கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்
Nov 27, 202309:18
கம்பராமாயணம் 571

கம்பராமாயணம் 571

கம்பராமாயணம்...

தானிய மாலி இராவணனிடம் பேசுதல்.

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 571

நாள் - ஐந்நூற்று எழுபத்தொன்றாவது நாள்.

உம்பி, உணர்வுடையான், சொன்ன உரை கேளாய்
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்
கும்பகருணனையும் கொல்வித்து என் கோமகனை
அம்புக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐய.

விளக்கம் - அறிவு உடையவனாகிய உன் தம்பி வீடணன் கூறிய சொற்களை கேளாதவனாயும், ஆடவரிற் சிறந்த குலத்தவனாகிய மாலியவான் கூறிய சொற்களில் நன்மையை எண்ணாதவனாயும் இருந்து பகைவர் கையால் கும்பகருணனைக் கொல்வித்து, என் சிறந்த மகனாகிய அதிகாயன் அம்புக்கு இரையாக கொடுத்து அரசு புரிந்தாய்..

கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 23, 202306:27
கம்பராமாயணம் 570

கம்பராமாயணம் 570

கம்பராமாயணம்..


இராவணன் நிலையும் செயலும்.


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 570

நாள் - ஐந்நூற்று எழுபதாவது நாள்.

மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும்
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி
புண்ணிடை எரி புக்கென்ன மானத்தால் புழுங்கி நையும்.


விளக்கம் - இராவணன் நிலவுலகை எடுக்க எண்ணுவான், வானத்தை இடிக்க நினைப்பான், உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் ஒரு கண நேரத்தில் அழிக்க எண்ணுவான், பெண் என்ற பெயரைக் கொண்ட பொருள்களை எல்லாம் பிளந்து அழிப்பேன் என்று நினைப்பான் அவ்வாறு நினைத்து புண்ணில் தீ புகுந்தது போல் மான உணர்வினால் புழுங்கி அழுவான்..


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 23, 202306:50
கம்பராமாயணம் 569

கம்பராமாயணம் 569

கம்பராமாயணம்..

இலக்குவன் அதிகாயனோடு போரிடல்...


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 569

நாள் - ஐந்நூற்று அறுபத்தொன்பதாவது நாள்.


நன்று என உவந்து வீரன் நான்முகன் படையை வாங்கி
மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான்
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டு அவ் வாளி
சென்றது விசும்பினூடு தேவரும் தெரியக் கண்டார்..


விளக்கம் - இலக்குவன் நன்று என்று மகிழ்ந்து சொல்லி நான்முகன் படைக் கலத்தை எடுத்து மின்னல் தனியே திரண்டு விட்டது என்று கூறும்படி அம்புடன் சேர்த்துச் செலுத்தினான் அந்த அம்பானது குன்றினும் உயர்ந்த தோள்களை உடைய அதிகாயனது தலையை அறுத்துக் கொண்டு ஆகாய வழியாகச் சென்றது அதனை தேவர்களும் தெளிவாகக் கண்டனர்..

கு. பாஸ்கர்..... அபுதாபி
Nov 23, 202306:37
கம்பராமாயணம் 568

கம்பராமாயணம் 568

கம்பராமாயணம்...

அதிகாயன் இலக்குவனோடு போரிடல்..


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் 568

நாள் - ஐந்நூற்று அறுபத்தெட்டாவது நாள்.


முற்றியது இன்றே அன்றோ, வானர முழங்கு தானை
மற்று இவன்தன்னை வெல்ல வல்லேனோ வள்ளல் தம்பி?
கற்றது காலனோடா, கொலை இவன்? ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே ! என்னா தேவரும் வெருவலுற்றார்...


விளக்கம் - ஒலிக்கின்ற வானரப் படை தீர்ந்து ஒழிவது இன்றே முடியுமல்லவா?, இராமன் தம்பி இவன் தன்னை வெல்ல வல்லவன் ஆவனோ? இந்த அதிகாயன் கொலையை கற்றுக் கொண்டது யமனிடம் தானோ? ஒப்பற்ற இவன் கற்றுள்ள வில்வித்தை என்ன சிறப்புத் தன்மை உடையது என்று கூறித் தேவர்களும் அஞ்சத் தொடங்கினார்கள்....

கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 23, 202307:06
கம்பராமாயணம் 566

கம்பராமாயணம் 566

கம்பராமாயணம்...

அதிகாயன் அனுமனோடு பேசுதல்..


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 566

நாள் - ஐந்நூற்று அறுபத்தாறாவது நாள்.

இன்று அல்லது நெடுநாள் உனை ஒரு நாளினும் எதிரேன்
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும்
வென்று அல்லது மீளாத என் மிடல் வெங் கணை மழையால்
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன்..

விளக்கம் - உன்னை இன்றைக்குக் கொன்றால் அல்லது இனிவரும் நீண்ட காலத்தில் ஒரு நாள் கூட எதிர்த்துப் போரிட மாட்டேன், நீ எனக்கு பல தீங்குகளை செய்தாய் அதனால் வெற்றி பெற்று அன்றி வீணாக மீளுதல் இல்லாத என்னுடைய வலிமை பொருந்திய கொடிய அம்புகளின் மழையால் உன்னைக் கொல்லாமல் மீள மாட்டேன் இதை நீ மனதில் உறுதியாக கொள் என்றான்...

கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 23, 202307:12
கம்பராமாயணம் 565

கம்பராமாயணம் 565

கம்பராமாயணம்...


இராமன் இலக்குவனுடைய வலிமை கூறல்.


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 565

நாள் - ஐந்நூற்று அறுபத்தைந்தாவது நாள்.

என் தேவியை வஞ்சனை செய்து எழுவான்
அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல்
குன்றேன் என ஏகிய கொள்கையினால்
நின்றான் உளன் ஆகி நெடுந் தகையாய்....



விளக்கம் - பெருமைப் பண்புள்ளவனே என் தேவியை வஞ்சனை செய்து எடுத்துச் சென்ற இராவணன் அன்றே இறந்திருப்பான், இந்த இலக்குவன் அந்தச் சீதையின் சொல்லை மீற மாட்டேன் என்று பாதுகாத்து இடத்தை விட்டு வெளியேறியதால் அந்த இராவணன் இது வரையில் உயிர் உள்ளவன் ஆகி வாழ்ந்து நின்றான் இல்லை என்றால் இறந்திருப்பான் என்றான்...


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 23, 202306:50
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் : இரு சகோதரர்கள்
தமிழில் : சு.கி. ஜெயசுரன்
மறுவரைவு : ஆதி வள்ளிப்பன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
கதை சொல்பவர் : பூங்கொடி பாலமுருகன்.
Nov 23, 202312:23
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

கதை - சொர்க்கம்
எழுத்தாளர் - சரிதாஜோ
புத்தகம் - கனவுக்குள் ஒரு கண்ணாமூச்சி
கதை சொல்லி - உதயசங்கர்
Nov 23, 202309:55
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

நூல் : கிளியோடு பறந்த ரோகிணி. ஆசிரியர் : சரிதா ஜோ. கதைசொல்லி : சரிதா ஜோ
Nov 23, 202309:02
கம்பராமாயணம் 564

கம்பராமாயணம் 564

கம்பராமாயணம்..

வீடணன் அதிகாயனது திறம் குறித்தல்.

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 564

நாள் - ஐந்நூற்று அறுபத்து நான்காவது நாள்.

அறன் அல்லது நல்லது மாறு அறியான்
மறன் அல்லது பல் பணி மாறு அணியான்
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான்.


விளக்கம் - இந்த அதிகாயன் நன்மை பயக்கும் அறன் இல்லாதது தவிர வேறு ஒன்றும் அறிய மாட்டான், பல அணிகலன்களாக வீரத்தைத் தவிர வேறு ஒன்றை அணிய மாட்டான், வலிமை இல்லாததகிய ஒப்பற்ற அருமையான உயிரையும் அழிக்க மாட்டான், பெரும் புகழே அடைதற்கு உரிய நல்லது என்று உணர்வான்..

கு. பாஸ்கர்...அபுதாபி..
Nov 17, 202307:07
கம்பராமாயணம் 563

கம்பராமாயணம் 563

கம்பராமாயணம்...


அதிகாயன் இலக்குவன்பால் தூது அனுப்புதல்.


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 563

நாள் - ஐந்நூற்று அறுபத்து மூன்றாவது நாள்.

தீது என்று அது சிந்தனை செய்திலெனால்
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ
தூது என்று இகழாது உன் சொல் வலியால்
போது என்று உடனே கொடு போதுதியால்..


விளக்கம் - நான் செய்யக் கருதிய செயல் தீமை பயப்பது என்று சிந்தனை செய்ய மாட்டேன் இதுவே எப்போதும் மன்னர்களுக்கு உரிய அறவழி ஆகும் என்று, நீ தூதுவன் தானே என்று அவ்விலக்குவன் இகழாதவாறு உன் சொல்லாற்றலால் உடனே உடன் வருவாய் என்று அவனை இங்கு அழைத்துக் கொண்டு வருவாய்...


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 17, 202306:06
சிறார் கதைகள் குட்டி முயல்

சிறார் கதைகள் குட்டி முயல்

கதை - குட்டி முயல்
எழுத்தாளர் - மீனா
புத்தகம்-வெள்ளைப்பூக்கள்
கதை சொல்லி -உதயசங்கர்
Nov 17, 202322:29
சிறார் கதைகள் பளிங்கினால் ஆன சிறுவன்.

சிறார் கதைகள் பளிங்கினால் ஆன சிறுவன்.

நூல் : பளிங்கினால் ஆன சிறுவன். ஆசிரியர் : ஜானி ரோடாரி தமிழில் : ஆயிஷா இரா. நடராஜன் கதை : சின்ன வெங்காயம் கதைசொல்லி : சரிதா ஜோ
Nov 17, 202309:20
கம்பராமாயணம் 562

கம்பராமாயணம் 562

கம்பராமாயணம்...

கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் வருந்துதல்.


காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 562

நாள் - ஐந்நூற்று அறுபத்திரண்டாவது நாள்.


எல்லே! இவை காணிய எய்தினேனோ
வல்லே உளராயின மானுடரைக்
கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில்
செல்லேன், எனின் இவ் இடர் தீர்குவெனோ?.

விளக்கம் - அந்தோ! இவற்றைக் காண்பதற்காகவா இங்கு வந்தேன், ஒருவனாகிய நான் விரைவாக உயிருடன் உளராகிய மனிதர்களைக் கொல்லாதவனும், அவர்களின் உயிரைக் கொள்ளுவதற்குரிய வழியில் செல்லாத வானும் ஆனேன் எனில் இந்தத் துன்பத்தை விட்டு நீங்குவேனோ?.


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 14, 202307:08
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

புத்தகம் - சிறகடித்து பற
கதை- நரியும் வெள்ளரி தோட்டமும்
எழுத்தாளர் - அஞ்சலி
பதிப்பகம்- சுடர் புக்ஸ்
கதைசொல்லி- சங்கீதா பிரகாஷ்
Nov 14, 202310:24
பறவை டாக்டர்             சிறார் கதைகள்

பறவை டாக்டர் சிறார் கதைகள்

நூல் :பறவை டாக்டர்,
ஆசிரியர் :லின் சாங்யிங், மொழிப்பெயர்ப்பு : ஆதி வள்ளியப்பன்,
கதை சொல்லி: கார்த்திகா கவின் குமார்
Nov 13, 202306:03
கம்பராமாயணம் 561

கம்பராமாயணம் 561

கம்பராமாயணம்...

இராவணன் அமைச்சர்களை கடிதல்...

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - அதிகாயன் வதைப் படலம்.

பாடல் எண் - 561

நாள் - ஐந்நூற்று அறுபத்தொன்றாவது நாள்.

அல்லது உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர்
வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி
வல்லது மடிதலே என்னின் மாறுதிர்
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான்..

விளக்கம் - உங்களுக்கு உரைப்பது என்னவென்றால் கொடிய போரில் வெற்றி பெறுவோம் என்றீராயின் போர் மேல் செல்லுங்கள், இனி இயல்வது போரில் இறத்தல் என்றால் மீள்வீராக நுமது கருத்து யாது எனச் சினந்து கூறினான்...

கு. பாஸ்கர்..... அபுதாபி
Nov 13, 202306:35
சிறார் கதைகள். பாம்பு இல்லாத பாம்புப் பட்டி.

சிறார் கதைகள். பாம்பு இல்லாத பாம்புப் பட்டி.

நூல் : பாம்பு இல்லாத பாம்புப் பட்டி. ஆசிரியர் : சாய் விட்டேகர் மொழிபெயர்ப்பு : அ .குமரேசன்
கதை சொல்லி : சரிதா ஜோ
Nov 11, 202311:28
கம்பராமாயணம் 560

கம்பராமாயணம் 560

கம்பராமாயணம்...

இராவணன் சீறி அகல்தல்.

காண்டம் - யுத்த காண்டம்.


படலம் - மாயா சனகப் படலம்


பாடல் எண் - 560

நாள் - ஐந்நூற்று அறுபதாவது நாள்.


அக் கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி
இக் கணத்து மானிடவர் ஈரக் குருதியால்
முக் கைப் புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான்.

விளக்கம் - எல்லா திசைகளிலும் சென்று போர் செய்து வெற்றி பெற்றவனாகிய இராவணன் அந்த நேரத்தில் அமைச்சர் ஆறுதல் கூறச் சிறிது சினம் தனிந்து இப்போது மனிதரான இராம இலக்குவருடைய பச்சை இரத்தத்தால் என் தம்பியாகிய கும்பகருணனக்கு மூன்று முறை கையால் இறைத்தல் ஆகிய நீர்க்கடனை செய்வேன் என்று சினந்து சினத்தால் தீ வெளிப்படும் கண்களை உடையவனாய்ச் சீதை இருக்கும் இடத்தை விட்டு அப்பால் போனான்.


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 11, 202306:53
கம்பராமாயணம் 559

கம்பராமாயணம் 559

கம்பராமாயணம்...

இராவணன் கதற சீதை மகிழ்தல்.

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - மாயா சனகப் படலம்.

பாடல் எண் 559

நாள் - ஐந்நூற்று ஐம்பத்தொன்பதாவது நாள்.

கண்டாள், கருணனை, தன் கண் கடந்த தோளானை
கொண்டாள், ஒரு துணுக்கம், அன்னவனைக் கொற்றவனார்
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள்..


விளக்கம் - தன் கண்ணுக்கு அடங்காத பேரழகு படைத்த தோளை உடைய இராமனையும், கும்பகருணனையும் முன்பு கண்டு ஒப்பற்ற அச்சம் கொண்டவளாகிய சீதை அத்தகைய பேருருவம் பெருவலியும் படைத்த அவனை வெற்றி பொருந்திய இராமபிரானது தவறாமல் அழிக்கும் தன்மை வாய்ந்த அம்பு அழித்த ஒப்பற்ற சொற்களை மிக விரும்பிக் கேட்டு உடல் பூரிப்பு அடைந்தாள் அதனாள் வேறு ஒருத்தி போன்றவள் ஆனாள்.

கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 10, 202306:58
கம்பராமாயணம் 558

கம்பராமாயணம் 558

கம்பராமாயணம்...

இராவணன் தன்னைத் தானே இகழ்தல்..


காண்டம் - யுத்த காண்டம்..

படலம் - மாயா சனகப் படலம்

பாடல் எண் - 558


நாள் - ஐந்நூற்று ஐம்பத்தெட்டாவது நாள்.


நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இந் நொய்து இலங்கை
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை கிடந்த
ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும்..


விளக்கம் - என் தம்பியர்கள் பார்பதற்கு கூட இல்லாமல் இறந்து படவும், இந்த இலங்கை எளிதாக பகைவர் கையில் பட்டு விடவும், மாமனாகிய மாரீசன் இறக்கவும், என் பின் பிறந்த சூர்ப்பனகை மூக்கை இழக்கவும், ஒரு பெண்ணின் முலையிடத்து கொண்ட ஆசையால் தாழ்ந்தேன் மானம் இன்றி இன்னும் உயிருடன் வாழ்கின்றனர் வாழ்கின்றேன், உன்னை இழந்தும் இன்னும் உயிருடன் இருக்க மாட்டேனோ?.


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 10, 202306:55
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

புத்தகம் - எவனஞ்சொன்னது ராஜான்னு
கதை- தப்பிக்குமா தங்கமீன்
எழுத்தாளர் - ஈரோடு சர்மிளா
கதைசொல்லி- சங்கீதா பிரகாஷ்
Nov 10, 202311:57
கம்பராமாயணம் 557

கம்பராமாயணம் 557

கம்பராமாயணம்...

இராவணன் அழுது அரற்றி கீழே விழுதல்..

காண்டம் - யுத்த காண்டம்.

படலம் - மாயா சனகப் படலம்

பாடல் எண் - 557

நாள் - ஐந்நூற்று ஐம்பத்தேழாவது நாள்.


தம்பியோ! வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ! நான்முகத்தோன் சேம்மதலை தோன்றாலோ
நம்பியோ! இந்திரனை நாமப் பொறி துடைத்த
எம்பியோ! யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ.


விளக்கம் - நீ எனக்கு தம்பி மட்டும் தானா? தேவர்களாகிய தாமரைக் காட்டை கலக்கி அழிக்கவல்ல மத யானை போன்றவனே, நான்கு முகங்களை உடைய பிரம்மன் மகனாகிய புலத்தியன் மகனான விச்சிரவசுவின் வழித் தோன்றலாகிய ஆடவர் திலகனே, இந்திரனது புகழுக்கு காரணமான நல்வினைப் பயனை முற்றும் துடைத்த என் தம்பியே நான் உன்னைப் பற்றிய இவ்வாறான சொற்களை கேட்கும்படி ஆனேனே..


கு. பாஸ்கர்.... அபுதாபி
Nov 08, 202306:56
சிறார் கதைகள்

சிறார் கதைகள்

கதை - றெக்க
எழுத்தாளர் - பிரசாந்த்.வே
புத்தகம் - பறக்கும் யானைகள்
பதிப்பகம் - புக் ஃபார் சில்ட்ரன்
கதை சொல்லி - உதயசங்கர்
Nov 07, 202309:18