Skip to main content
 ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

By Raja Nagarajan

Ainkaran, popularly known as Ganesha,
is a very popular God among all age groups.
This podcast uses Ainkaran as a
Narrator for telling Folklores and Fables
from all parts of the world .
These have been passed on from generation to
generation through word of mouth.
Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்”
Email your comments to:
ainkaran2020@gmail.com

Available on
Apple Podcasts Logo
Google Podcasts Logo
Overcast Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

இரு நூறாவது கதை: தோல் பை (The Leather Bag)

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)Apr 03, 2024

00:00
18:31
இரு நூறாவது கதை: தோல் பை (The Leather Bag)

இரு நூறாவது கதை: தோல் பை (The Leather Bag)

இது ஒரு கொரியா நாட்டுக்கதை.

ஒரு கொரியா நாட்டு பணக்காரரின்

ஒரே மகன்- ஜின்.ஒவ்வொரு நாள்

இரவும்,அவன் அப்பாவின்

வேலைக்காரன் - கிம்-

ஒரு கதை சொல்வான்.

அந்த கதைகளை ஜின் யாரிடமும்

பகிர்ந்து கொள்ள மாட்டான்.

அவன் சுயநலம்,அவனுக்கு பெரிய

ஆபத்தை கொண்டு வந்தது.

கிம் அவனை காப்பாற்றுகிறான்.

ஜின்னுக்கு அப்படி என்ன ஆபத்து?

கிம் எப்படி அவனை காப்பாற்றினான்?

கதையை கேளுன்கள்.......


Apr 03, 202418:31
நூற்றி தொண்ணூத்தி ஒன்பதாவது கதை:அலை (The Wave)

நூற்றி தொண்ணூத்தி ஒன்பதாவது கதை:அலை (The Wave)

இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை.

ஜப்பான் தேசத்து கிராமம் ஒன்றில் ஒரு

கோவில் இருக்காம். அதில் வழிபடும்

தேவன், ஹோகே ஹாமா கூச்சி,என்ற

ஒரு வயதான புத்திசாலியான,கருணை

உள்ளம் படைத்த மனிதர். அவரை மரியாதயாக

ஓஜிசான் (Grandfather) தாத்தா என்று தான்

அழைப்பார்கள்.

கடவுளாக கும்பிட,அப்படி என்ந செயதார்?

கதையை கேளுங்கள்....

Mar 27, 202413:60
நூற்றி தொண்ணூத்தி எட்டாவது கதை:சுண்டெலி சூத்திரம் (The Mouse Sutrra)

நூற்றி தொண்ணூத்தி எட்டாவது கதை:சுண்டெலி சூத்திரம் (The Mouse Sutrra)

இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை.

மந்திரங்கள் சொல்லி வழிபடுவது

எல்லா மதங்களிலும் உண்டு.

அர்த்தம் தெரிந்தோ தெரியாமாலோ

முழு நம்பிக்கையோடு சொன்னால்,

அதற்கு பலன் கிடைக்கும்'

என்று ஒரு நம்பிக்கை.

இந்த கதையில் ஒரு பாட்டி ,

ஒன்றும் தெரியாத ஒரு புத்த

சன்னியாசியிடமிருந்து அர்த்தமில்லாத

சூத்திரத்தை (மந்திரத்தை) கற்று கொண்டு

,நம்மிக்கையோடு ஜபிக்கிறாள்.'

அவளுக்கு பலன் கிடைத்ததா?

கதையை கேளுங்கள்....

Mar 20, 202411:30
நூற்றி தொண்ணூத்தி ஏழாவது கதை: ஒரு தங்க கட்டியும் 2 நண்பர்களும் (A Golden Nugget and Two Friends)

நூற்றி தொண்ணூத்தி ஏழாவது கதை: ஒரு தங்க கட்டியும் 2 நண்பர்களும் (A Golden Nugget and Two Friends)

இது ஒரு சீன நாட்டுக் கதை.

டாமன்-பிதியாஸ் மாதிரி

சீன தேசத்தி ல்,2 நண்பர்கள்-

கீ வூ-பா ஷூ -இருந்தார்கள்.

அவர்கள்,இணைபிரியாமல்.

ஒரு போதும், சண்டை போடாமலும்

வாக்குவாதம் செய்யாமலும் இருந்தார்கள்.

அவர்கள்,வாழ்க்கையில் நடந்த

ஒரு சம்பவத்தை இப்போது

கேட்க போகிறீர்கள்.

கதையை கேளுங்கள்.....

Mar 13, 202410:33
நூற்றி தொண்ணூத்தி ஆறாவது கதை:ட்ரவுசர் முகமதும் சுல்தானின் மகளும் ( (Trouser Mohamed and Sultan's Daughter))

நூற்றி தொண்ணூத்தி ஆறாவது கதை:ட்ரவுசர் முகமதும் சுல்தானின் மகளும் ( (Trouser Mohamed and Sultan's Daughter))

இது ஒரு அரேபிய நாட்டுக் கதை.

முகமது ஒரு ஏழை.அழகானவன்.புத்திசாலி.

அவன் அப்பா,அவனுக்கு விட்டு போன சொத்து

ஒரு தொள தொள ட் ரொவுசர்.பேண்ட்-

அதை ஒரு சாக்காக மாற்றி போர்டர் வேலை

செய்கிறான்.

ஒரு நாள், சுல்தானின் மகளை

பார்க்கிறான்.அவளுக்கும் அவனை பிடித்திருந்தது.

சுல்தான் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேட

ஒரு புதிர் போட்டி நடத்துகிறார்.

முகமதும் அதில் கலந்து கொள்கிறான்

.அவன் வெற்றி பெற்றானா?

கதையை கேளுங்கள்....

Mar 06, 202415:44
நூற்றி தொண்ணூத்தி ஐந்தாவது கதை:சபாத் சிங்கம்(The Sabbath Lion)

நூற்றி தொண்ணூத்தி ஐந்தாவது கதை:சபாத் சிங்கம்(The Sabbath Lion)

இது அல்ஜீரியா நாட்டில் வசித்த

ஒரு யூத குடும்பத்தை பற்றிய கதை.

சபாத் தினம்(Sabbath day)

யூதர்களுக்கு ஒரு முக்கியமான நாள்.

அது ஒவ்வோரு வாரமும்,

வெள்ளி கிழமை மாலையிலிருந்து

சனி கிழமை மாலை வரை

கொண்டாடப்படுகிறது.

அன்று யூதர்க ஒய்வொடுத்து கொண்டு ,

கடவுள் பிரார்த்தனைகளில்

நேரத்தை செலவழிப்பார்கள்.

நம்பிக்கையோடு செயபவர்களுக்கு

கடவுள்

அருள் கிடைக்கும் என்று நம்பிக்கை.

அப்படி நம்பின,,ஒரு 10 வயது

பையனை பற்றிய கதை இது.

கதையை கேளுங்கள்....


Feb 28, 202416:22
நூற்றி தொண்ணூத்தி நான்காவது கதை:ஏழு சீன சகோதரர்கள்(The Seven Chinese Brothers)

நூற்றி தொண்ணூத்தி நான்காவது கதை:ஏழு சீன சகோதரர்கள்(The Seven Chinese Brothers)

இது ஒரு சீன நாட்டுக் கதை.

7 சீன சகோதரர்கள் ஒரு கிராமத்தில்

வசிக்கிறார்கள்.

அவர்கள் 7 பேரும் ஒரே மாதிரி

உருவமுள்ளவர்கள்.

ஒவ்வொருவருக்கும் தனிதனியாக

ஒரு அபூர்வ சக்தி

Super Power உண்டு.

அவர்களுக்கு சீன சக்ரவர்த்தியிடமிருந்து

ஆபத்து வந்த போது,

எல்லோரும் தங்கள் சூப்பர் பவரை

உபயோகித்து , தங்களை

காப்பாற்றி கொள்கிறார்கள்..

எப்படி?

கதையை கேளுங்கள்....

Feb 22, 202414:41
நூற்றி தொண்ணூத்தி மூன்றாவது கதை(ராணியும் குடியானவனின் மனைவியும்(The Queen and the Farmer's Wife)

நூற்றி தொண்ணூத்தி மூன்றாவது கதை(ராணியும் குடியானவனின் மனைவியும்(The Queen and the Farmer's Wife)

இது இந்தியாவின் கர்னாடக மாகாணத்தில்

கன்னட மொழியில்சொல்லப்பட்ட நாடோடி கதை.

ஒரு நாட்டின் ராணி சொல்கிறாள்"

ஒரு வீட்டின் ஏழ்மை நிலைக்கு

கடவுளை பழி சொல்வது சரியாகாது.

வீட்டு தலைவி திறமையோடும் அன்போடும்

செயல்பட்டால், லஷ்மி தேவி வீடு தேடி வருவாள்." என்று.

அதை நிரூபிக்க ,ராஜாவிடம் ஒரு பந்தயம் வைக்கிறாள்.

என்ன பந்தயம்?

அவள் ஜயித்தாளா?

கதையை கேளுங்கள்...

Feb 15, 202414:54
நூற்றி தொண்ணூத்தி இரண்டாவது கதை:தந்திரகார மனிதன் பெட்ரோ (The Cunning Man-Pedro)

நூற்றி தொண்ணூத்தி இரண்டாவது கதை:தந்திரகார மனிதன் பெட்ரோ (The Cunning Man-Pedro)

இது ஒரு மாலாவி நாட்டுக்கதை.

இது ஒரு Trickster Tale.

பெட்ரோ ஒரு தந்திரகாரன்.

பஞ்ச காலத்தில், தனக்கு வேண்டிய

பொருள்களை, தன் புத்திசாலித்தனத்தை

உபயோகித்து,மற்றவர்களை ஏமாற்றி

அடைகிறான்.

எப்படி?

கதையை கேளுங்கள்...


Feb 08, 202414:13
நூற்றி தொண்ணூத்தி ஒன்றாவது கதை:பறவை அலகுகளினால் ஆன அரண்மனை(A Palace of Bird Beaks)

நூற்றி தொண்ணூத்தி ஒன்றாவது கதை:பறவை அலகுகளினால் ஆன அரண்மனை(A Palace of Bird Beaks)

இது ஒரு யூத நாட்டுக் கதை.

சாலமன் அரசர்,ஒரு அறிவு ஜீவி

என்று பாராட்ட படுபவர்.

அவர் ஒரு சமயம்,

ஒரு முட்டாளத்தனமான

காரியத்தை செய்ய முடிவு எடுக்கிறார்.

அதை அவர் முடித்திருந்தால்,அவருக்கு

கெட்ட பெயர் வந்திருக்கும்.

.கடைசி நிமிடத்தில் அதை

அவர் கைவிடுகிறார்.

ஏன்,எதற்காக கைவிடுகிறார்.?

கதையை கேளுங்கள்....


Jan 31, 202411:15
நூற்றி தொண்ணூறாவது கதை:ஶ்ரீ ராமர் சொன்ன கதை (A Story told by Sri Rama)

நூற்றி தொண்ணூறாவது கதை:ஶ்ரீ ராமர் சொன்ன கதை (A Story told by Sri Rama)

இது ஒரு ராமாயண கதை.

ஶ்ரீ ராமர்,

எப்போ, இந்த கதையை சொன்னார்?

யாரிடம் சொன்னார்?

எதற்காக சொன்னார்?

எல்லாவற்றிக்கும் விடை தெரிய

கதையை கேளுங்கள்.....

Jan 24, 202415:06
நூற்றி எண்பத்தி ஒன்பதாவது கதை:அபு காஸிமின் காலணிகள்:(Abu Kassim's Shoes)

நூற்றி எண்பத்தி ஒன்பதாவது கதை:அபு காஸிமின் காலணிகள்:(Abu Kassim's Shoes)

இது ஒரு மோராக்கா நாட்டுக் கதை.

அபு காஸிம் ஒரு பணக்காரர்.

ஆனால்,அவர் ஒரு கஞ்ச மஹா பிரபு.

அவர் நேசிப்பது எல்லாம்,

அவருடைய காலணிகளை தான்.

30 வருஷமாக அதை உபயோகிகிறார்.

யாருடைய கேலியையும்

பொருட்படுத்த மாட்டார்.

ஒரு சமயம் அந்த காலணிகளினால்,

அவருக்கு பெருத்த அவமானம்

ஏற்படுகிறது.

அதை தூக்கி எறிகிறார்.

அது திரும்ப அவரிடமே

வருகிறது.

அவர் தன்னுடைய முயற்சியில்

வெற்றி பெற்றாரா?

கதையை கேளுங்கள்....



Jan 17, 202416:49
நூற்றி எண்பத்தி எட்டாவது கதை:அரசருக்கே கடுக்காய் கொடுத்த ஒரு புத்திசாலி டெமரி (A Clever Temari giving the slip to a king)

நூற்றி எண்பத்தி எட்டாவது கதை:அரசருக்கே கடுக்காய் கொடுத்த ஒரு புத்திசாலி டெமரி (A Clever Temari giving the slip to a king)

இது ஒரு எதியோப்பிய நாட்டுக் கதை.

அந்த நாட்டில் உள்ள டெமரிகள் ,

ஒரு நாடோடிகள்.

கிழிந்த ஆடைகளுடன்,மேலே ஒரு

ஆட்டு தோலை போர்த்திக் கொண்டு ,

பசிக்கும் நேரத்தில் பிச்சை எடுத்து

மடங்களில் படுத்து உறங்குவார்கள்.

அவர்கள் ரொம்ப புத்திசாலிகள்.

பசிக்காக திருவார்கள்.

அகப்பட்டு கொள்ள மாட்டார்கள்.

அவர்களில் ஒருவரான ,ஒரு டெமரி,

அரசருடைய ஆட்டை திருடுகிறான்.

அதற்கு தண்டனை-மரணம்.

அதிலிருந்து தப்ப,

தன் புத்திசாலித்தனத்தால்,

அரசருக்கு "கடுக்காய் கொடுத்து"

தப்புகிறான்.

எப்படி?

கதையை கேளுங்கள்....

Jan 10, 202413:04
நூற்றி எண்பத்தி ஏழாவது கதை:சிறிய சிவப்பு சேவலும் சுல்தானும்(Little Red Rooster and Sulthan)

நூற்றி எண்பத்தி ஏழாவது கதை:சிறிய சிவப்பு சேவலும் சுல்தானும்(Little Red Rooster and Sulthan)

இது ஒரு ஹங்கேரிய நாட்டுக் கதை.

ஒரு ஏழை பெண்மணிக்கு ,சொந்தமான

ஒரு சிறிய சிவப்பு சேவல்,

ஒரு நாள்,குப்பையிலிருந்து

ஒரு வைர பித்தானை எடுக்கிறது.

அப்போது,அந்த ஊர், சுல்தான்,

அதை பிடுங்கி கொள்கிறார்.

சேவல் விடுவதாக இல்லை.

விடாமல்,சுல்தானை நச்சரிக்கிறது.

சுல்தானும் பல வழிகளில்,

அதை கொல்ல முயற்சிக்கிறார்.

சேவல்,எல்லா சோதனைகளையும் சமாளித்து,அந்த பட்டனை

திரும்ப பெறுகிறது.

எப்படி?

கதையை கேளுங்கள்....


Jan 03, 202412:02
நூற்றி எண்பத்தி ஆறாவது கதை-ஒரு நாய் சண்டை,ஜாதி கலவரமான கதை (Story of a dogfight becoming a caste riot)

நூற்றி எண்பத்தி ஆறாவது கதை-ஒரு நாய் சண்டை,ஜாதி கலவரமான கதை (Story of a dogfight becoming a caste riot)

இது ஒரு எதியோப்பியா நாட்டுக் கதை.

2 ஜாதிகள் சமாதனமாக வாழும்,ஒரு கிராமத்தில்

2 நாய்கள்.ஒரு எலும்பு துண்டுக்காக சண்டை

போடுகின்றன.அந்த சண்டையை நிறுத்த ஒரு பெரியவர் சொல்கிறார்.யாரும் கேட்கவில்லை.

அந்த சண்டை ஒரு ஜாதி கலவரமாக மாறி

நிறைய பேர்கள் கொல்லப்படுகிறார்கள்.

அப்புறம் என்ன ஆச்சு? சண்டை முடிந்ததா?

சமாதனமாக வாழ்ந்தார்களா?

கதையை கேளுங்கள்......

Dec 27, 202313:17
நூற்றி எண்பத்தி ஐந்தாவது கதை: மாதுளம் பழ விதை(Pomegranate Seed)

நூற்றி எண்பத்தி ஐந்தாவது கதை: மாதுளம் பழ விதை(Pomegranate Seed)

இது ஒரு அரேபியா நாட்டுக் கதை.

ஒரு ஏழை Cobbler,ஒரு பேக்கரி கடையிலிருந்து

ஒரு ரொட்டியை திருடுகிறான்.கடைக்காரர்,அவன்

திருடியதை பார்த்து கூச்சல் போட,காவல் வீரர்கள்,

காப்லரை சிறைச்சாலைக்கு கூட்டி செல்கிறார்கள்.

அந்த நாட்டில்,திருடினால்,மரண தண்டனை.அந்த

காப்லர்,தன் புத்திசாலித்தனை உபயோகித்து

அந்த தண்டனையிலிருந்து தப்புகிறான்.

எப்படி?

கதையை கேளுங்கள்......

Dec 20, 202315:03
நூற்றி எண்பத்தி நாலாவது கதை:பலி கொடுக்க விற்கப்பட்ட பையன்(The Boy who was sold to be sacrificed)

நூற்றி எண்பத்தி நாலாவது கதை:பலி கொடுக்க விற்கப்பட்ட பையன்(The Boy who was sold to be sacrificed)

இது ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டுக் கதை.

ஒரு ராஜா,புதிய தலை நகரம் கட்ட

விரும்புகிறார்.

அவர் கட்ட நினைத்த இடம்

கெட்ட சக்திகளால் சபிக்கப்பட்ட இடம்

என்று ஜோசியர் சொல்கிறார்.

அதே இடத்தி கட்ட வேண்டுமானால்,

ஒரே பையன் இருக்கும் ஒரு தாயார்,

தன் மகனை பலி கொடுக்க

முன் வரவேண்டும்.

ஒரு ஏழை விதவை,பணக்கத்திற்காக

தன் ஒரே மகனை

கொடுக்க முன் வருகிறாள்.

பையன் பலி இடப்பட்டானா?

நகரம் கட்டப்பட்டதா?

கதையை கேளுங்கள்..

Nov 22, 202310:58
நூற்றி எண்பத்தி மூன்றாவது கதை:அரசனும் ஆட்டிடயனும் (The King and the Shepherd)

நூற்றி எண்பத்தி மூன்றாவது கதை:அரசனும் ஆட்டிடயனும் (The King and the Shepherd)

இது ஒரு ஆர்மீனிய நாட்டுக் கதை.

ஒரு ராஜா-அவருக்கு புதிர்

போடுவதில் ரொம்ப விருப்பம்.

அடிக்கடி புதிர் போடுவார்.

விடை தெரியாதவர்களின்

தலைகளை எடுப்பார்.

ஒரு சமயம், தன் 3 பிரபுக்களிடம்,

3 கேள்விகள் கேட்கிறார்.

7 நாள்,அவகாசம்.

சரியான விடையோடு வர வேண்டும்.

தவறினால்,தலைகள் வெட்டப்ப்டும்.

அரசருடைய கேள்விகள் என்ன?

பிரபுக்கள் சரியான விடைகள்

சொல்லி தங்கள் தலைகளை

தக்க வைத்துகொணடார்களா?

கதையை கேளுங்கள்....

Nov 14, 202312:10
நுற்றி எண்பத்தி இரண்டாவது கதை.கொசுக்கள்,ஏன்,நம் காது பக்கம் வந்து ஒலி எழுப்புகின்றன.(Why Mosquitoes buzz our ears)

நுற்றி எண்பத்தி இரண்டாவது கதை.கொசுக்கள்,ஏன்,நம் காது பக்கம் வந்து ஒலி எழுப்புகின்றன.(Why Mosquitoes buzz our ears)

இது ஒரு நைஜீரியா நாட்டுக் கதை.

இங்கு சொல்லப்படும் கதைகளில்,

எல்லா மிருகங்களுக்கும்

பேச்சு திறன் உண்டு என்று

சொல்வார்கள்.

ஒரே ஒரு மிருகத்தை தவிர.

அது,கொசு தான்.

அது செய்த தவறினால்,

காட்டி ஒரு களேபரம் உண்டாகி,

4 நாள்கள்,இருட்டாகிறது.

அதற்கு விதிக்கப்பட்ட

தண்டனையினால்,அதற்கு

பேச்சு திறன் போய்,

வெறும் ஒலி மட்டும் தான்

எழுப்புகிறது.

அது என்ன கதை?

கதையை கேளுங்கள்....

Nov 08, 202317:01
நூற்றி எண்பத்தி ஒன்றாவது கதை:சாலமன் அரசர் சொன்ன கதை (Story told by King Solomon)

நூற்றி எண்பத்தி ஒன்றாவது கதை:சாலமன் அரசர் சொன்ன கதை (Story told by King Solomon)

இது ஒரு யூத நாட்டுக்கதை.

சாலமன் அரசர், ஒரு மேதை.

அவர் வழக்குகளை விசாரிப்பதில்

திறமைசாலி.அவர் விசாராணை

புதுமையாகவும் வித்தியாசமாகவும்

இருக்கும்.

ஆனால்,தீர்ப்பு நியாயாமாக

இருக்கும்.

இந்த கதையில்,

2 சகோதரர்கள்,அப்பாவின்

சொத்துக்காக சண்டை போட்டுக்

கொள்கிறார்கள்.

அரசரிடம் வழக்கு வந்தது.

அரசர் எப்படி விசாரித்தார்?

என்ன தீர்ப்பு வழங்கினார்?

கதையை கேளுங்கள்.....


Nov 01, 202315:11
நூற்றி எண்பதாவது கதை:விதியும் பிரம்மாவும் மதியால் தோற்கடிக்கப்பட்ட கதை(Story of Fate and Bramma being defeated by Intellect)

நூற்றி எண்பதாவது கதை:விதியும் பிரம்மாவும் மதியால் தோற்கடிக்கப்பட்ட கதை(Story of Fate and Bramma being defeated by Intellect)

இது ஒரு இந்திய நாட்டுக் கதை.

இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடம் ஒரு நம்பிக்கை.குழந்தை பிறந்தவுடன்,அதன் நெற்றியில், அதன்வாழ்க்கை எப்படி அமையும் என்று பிரம்மா எழுதி விடுவாராம்.

அதை தான் நாம்.விதி,தலை எழுத்து,Fate என்று

அழைக்கிறோம்.அதை மாற்ற யாராலும் முடியாது

என்றும் நம்பி செயல் படுகிறார்கள்.

அதை மாற்றியதாக,சில பேர் கதைகளிலிருந்து

தெரிந்து கொள்கிறோம்.

அந்த சிலரில்,ஒருவருடைய கதையை

கேளுங்கள்....

Oct 25, 202318:14
நூற்றி எழுபத்தி ஒன்பதாவது கதை:ஒரே ஒரு சோள தானியத்திற்கு மணமகள் -(A Bride for a Grain of Corn)

நூற்றி எழுபத்தி ஒன்பதாவது கதை:ஒரே ஒரு சோள தானியத்திற்கு மணமகள் -(A Bride for a Grain of Corn)

அநான்சி-மேற்கு ஆப்ரிக்கா,மற்றும்

கரீபியன்பகுதிகளின்

Folk Hero-

இந்த சிலந்தி மனிதனை பற்றி ,

94,95 கதைகளில் கேட்டிருக்கிறோம்.

இந்த கதை,கானா நாட்டுக் கதை.

அநான்சிக்கு ஆகாய கடவுள்-நீயாமானா-

ஒரு சவால் விடுகிறார்

"7 நாட்களில்,அநான்சி,

ஒரே ஒரு சோள விதையை வைத்து

ஒரு மணமகளை கொண்டு வரவேண்டும்"

அநான்சி சவாலை ஏற்கிறான்.

சவாலில் ஜயித்தானா?

கதையை கேளுங்கள்....


Oct 18, 202317:24
நூற்றி எழுபத்தி எட்டாவது கதை: புனிதமான குதிரை (The Hallowed Horse)

நூற்றி எழுபத்தி எட்டாவது கதை: புனிதமான குதிரை (The Hallowed Horse)

இது ஒரு இந்திய நாட்டுக் கதை.

ஒரு ராஜாவின் நாட்டுக்கு,ஒரு பாம்பு

அரக்கனிடமிருந்து ஆபத்து வருகிறது.

அந்த பாம்பை கொல்ல கூடியது,

ஒரு புனிதமான குதிரை தான்.

அதை தேட அந்த ராஜா முயற்சிக்கிறார்.

குதிரை கிடைத்ததா?

பாம்பின் ஆபத்து விலகியதா?

நாடு காப்பாற்றப்பட்டதா?

கதையை கேளுங்கள்.....

Oct 11, 202314:14
நூற்றி எழுபத்தி ஏழாவது கதை:தாய் சொல்லை தட்டாத ஜாக்(Obedient Jack)

நூற்றி எழுபத்தி ஏழாவது கதை:தாய் சொல்லை தட்டாத ஜாக்(Obedient Jack)

இது ஒரு ஐரோப்பா நட்டுக் கதை.

ஜாக்,தன் ஏழை தாயாருடன்,வசித்து

வருகிறான்.அவர்கள்,ஏழைகள்..

ஜாக்குக்கு மன வளர்ச்சி இல்லை.

ஆனால்,அவன் அம்மா எது சொன்னாலும்

அதன்படி நடப்பவன்.

ஒவ்வொரு நாளும்.வேலைக்கான,கூலியை

கொண்டுவரும் போது ஏதாவது,முட்டாள்தனமான

காரியத்தை செய்வான்.

ஒரு நாள்,அந்த முட்டாள்தனமான காரியம்

அவனுக்கு புது வாழ்வை கொடுக்கிறது.

அது என்ன?

கதையை கேளுங்கள்....

Oct 03, 202312:25
நூற்றி எழுபத்தி ஆறாவது கதை:ஐங்கரனின் கதை (Story of Ainkaran)

நூற்றி எழுபத்தி ஆறாவது கதை:ஐங்கரனின் கதை (Story of Ainkaran)

இது ஐங்கரனை பற்றிய கதை.

அவர்,வாழ்க்கை சம்பத்தப்பட்ட,

நான்கு விஷயங்கள்,இங்கே

சொல்லப்பட்டிருக்கின்றன.

1.ஏன்,அருகம்புல் அர்ச்சனை?

2.ஏன்,கொழுக்கட்டை படைப்பு?

3.ஏன்,தோப்புகரணம்?

4.கடவுள்,எல்லோரிடத்திலும் வசிக்கிறார்.

கதையை கேளுங்கள்........

Sep 20, 202317:41
நூற்றி எழுபத்தி ஐந்தாவது கதை: தர்மத்திற்கும் தர்மத்திற்கும் போர் (A War between Dharma and Dharma)

நூற்றி எழுபத்தி ஐந்தாவது கதை: தர்மத்திற்கும் தர்மத்திற்கும் போர் (A War between Dharma and Dharma)

இது ஒரு இந்திய நாட்டுக் கதை.

மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர்,

எழுதிய 18 புராணங்களில்,ஒரு புராணமான,

மார்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்ட கதை.

வழக்காமாக,தர்மத்தை கடைபிடிக்கும்,

ஹீரோவுக்கும் அதர்மத்தை தழுவுகிற

வில்லனுக்கும் தான் போர் நடக்கும்.

இந்த கதையில்,தர்மத்தை கடை பிடிக்கும்,

2 ஹீரோக்கள்போரிட தயாராகிறார்கள்.

எப்படி ஏற்பட்டது,இந்த சம்பவம்?

யார் ஜயித்தார்கள்?

கதையை கேளுங்கள்....

Sep 13, 202313:25
நூற்றி எழுபத்தி நாலாவது கதை:ஒரு அடிமையின் கனவு (A Slave's Dream)

நூற்றி எழுபத்தி நாலாவது கதை:ஒரு அடிமையின் கனவு (A Slave's Dream)

இது ஒரு இந்திய நாட்டுக் கதை.

ஒரு ராஜாவிடம் வேலை பார்க்கும் அடிமை

ஒரு கனவு கண்டு,உரக்க சிரிக்கிறான்.

அரசர் என்ன கனவு என்று கேட்கிறார்.

அடிமை சொல்லாமல் அமைதியாக

இருக்க, அரசர்,அவனை சிறையில்

அடக்கிறார்.அப்படி இருந்தும்,

நாட்டுக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன்,

அவன்,தனக்கு தெரிந்த எல்லா

திறமைகளையும் உபயோகித்து

நாட்டை காப்பாற்றுகிறான்.

எப்படி?

கதையை கேளுங்கள்....

Sep 08, 202317:35
நூற்றி எழுபத்தி மூன்றாவது கதை:அதிர்ஷ்ட தேவதை (The Goddess of Luck)

நூற்றி எழுபத்தி மூன்றாவது கதை:அதிர்ஷ்ட தேவதை (The Goddess of Luck)

இது ஒரு நேபாள நாட்டுக் கதை.

ஒரு ஏழை தாய்,தன் மகனுடன்

வாழ்கிறார்.மகன்,அம்மாவிடம்

கேட்கிறான்,"அம்மா,நாம் ஏன்

ஏழையாக இருக்கோம்"என்று.

அம்மாவின் பதில்"அது நம் விதி.

நாம் பொறுத்து கொண்டுதான்

இருக்க வேண்டும்" என்று.

மகனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை.

உலகத்தை படைத்த கடவுளை நேரில்

பார்த்து,அம்மாவிடம் கேட்ட கேள்வியை

கேட்க புறப்படுகிறான்.

அவன்,கடவுளை பார்த்தானா?

அவனுக்கு விடை கிடைத்ததா?

கதையை கேளுங்கள்....

Aug 30, 202316:08
நூற்றி எழுபத்தி இரண்டாவது கதை:விசுவாசத்தை வாங்குதல் (Buying Loyalty)

நூற்றி எழுபத்தி இரண்டாவது கதை:விசுவாசத்தை வாங்குதல் (Buying Loyalty)

இது ஒரு சீன நாட்டுக் கதை.

சீன தேசத்து பிரபு ஒருவர்,

தனக்கு வர வேண்டிய கடன் பாக்கியை

வசூல் பண்ண ,அவரிடம் வேலை

பார்க்கும்,ரிடயர்ட் ராணுவ வீரரை

அனுப்புகிறார்.

அந்த வீரர் கேட்கிறார்.

'பிரபுவே! நான்,உங்களுக்கு

என்ன வாங்கி வர வேண்டும்" என்று.

பிரபு சொல்கிறார்."என் வீட்டில் இல்லாத

பொருளை வாங்கி வாரும்"எண்று.

ராணுவ வீரரும்,ஒரு பொருளை வாங்கி

வருகிறார்.

அது என்ன பொருள்?

அது பிரபுவுக்கு பிடித்ததா?

கதையை கேளுங்கள்...

Aug 24, 202315:14
நூற்றி எழுபத்தி ஒன்றாவது கதை:வாட்டர் மெலன்-தர்பூசணி-விதைகள்(Watermelon Seeds)

நூற்றி எழுபத்தி ஒன்றாவது கதை:வாட்டர் மெலன்-தர்பூசணி-விதைகள்(Watermelon Seeds)

இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை.

அந்த நாட்டு மக்களுக்கு ,இந்த பழம்,

அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று

ஒரு நம்பிக்கை.இந்த இனிப்பான

பழம்,வாழ்க்கையில் செழிப்பையும்

நிறைவையும் கொடுக்கும் என்பார்கள்.

இது எப்படி,அந்த நாட்டுக்கு வந்தது

என்பது தான் கதை

கதையை கேளுங்கள்...

Aug 16, 202316:36
நூற்றி எழுபதாவது கதை: அங்குலி மாலாவின் கதை-Story of Anguli Mala)

நூற்றி எழுபதாவது கதை: அங்குலி மாலாவின் கதை-Story of Anguli Mala)

இது ஒரு இந்திய நாட்டுக்கதை.

புத்த மதத்தின்,தேர்வாடா முறையை

பின்பற்றும் புத்த குருமார்கள் சொல்லும் கதை.

யார் இந்த அங்குலிமாலா?

அவன் பெற்றோர்கள் வைத்த பெயர் இல்லை.

அங்குலிமாலா என்றால்,அவன் கழுத்தில்,அவன்

கொன்ற 100 ஆட்களின் சுண்டு விரல்களை

மாலையாக போட்டு கொண்டிருப்பவன் என்று

அர்த்தம்.

அந்த கொடியவனுக்கு பாவ மன்னிப்புகிடைக்கிறது.

எப்படி கிடைகிறது?

யாரால் கிடைக்கிறது?

கதையை கேளுங்கள்....

Aug 10, 202319:22
நூற்றி அறுபத்தி ஒன்பதாவது கதை:ஒரு தெரு வியாபாரியின் கனவு (A Peddler's Dream)

நூற்றி அறுபத்தி ஒன்பதாவது கதை:ஒரு தெரு வியாபாரியின் கனவு (A Peddler's Dream)

இங்கிலாந்து நாட்டில் உள்ள,ஸ்வாப்பாம்

என்ற ஊரில், மார்கெட்டில்,

ஜான் சாப்மான் என்பவருடையை

சிலை இருக்கிறது.

அதன் அடியில் உள்ள கல்லில்,

"கனவுகளும் தங்கமாக மாறும்"-

"Even Dreams can turn into gold"

என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

சிலைக்கும் வாசகத்திற்கும்

என்ன சம்பந்தம்?

கதையை கேளுங்கள்.......


Aug 02, 202312:03
நூற்றி அறுபத்தி எட்டாவது கதை:விலை மதிப்பற்ற பரிசு (Precious Gift)

நூற்றி அறுபத்தி எட்டாவது கதை:விலை மதிப்பற்ற பரிசு (Precious Gift)

இது ஒரு கிழக்கு ஆசிய

நாட்டுக் கதை.

ஒரு வியாபார கப்பல்,

ஒரு துறைமுகத்திலிருந்து

புறப்பட தயாராக இருந்தது.

எல்லா வியாபாரிகளும் பேசி

கொண்டிருந்தார்கள்.

அங்கே சற்று தூரத்தில்,

ஒருவர் தனியாக நின்று

கொண்டிருந்தார்.

அவரை பற்றி,வியாபாரிகள்

பேசி கொண்டனர்.

"யார் இவர்? இதற்கு முன்

இவரை பார்த்ததில்லயே!

இவர் வியாபாரி என்றால்,

ஒரு பொருளையும்

கப்பலில் ஏற்ற வில்லையே!

எதற்காக இந்த பயணம்?

இப்படி பல கேள்விகள்...

பதிலுக்கு கதையை

கேளுங்கள்....

Jul 26, 202313:16
நூற்றி அறுபத்தி ஏழாவது கதை: கடவுள் படி அளப்பார்:(God will provide)

நூற்றி அறுபத்தி ஏழாவது கதை: கடவுள் படி அளப்பார்:(God will provide)

இது ஒரு சூடான் நாட்டுக் கதை.

ஒரு பணக்கார பிரபு,கோபத்தில்,தன் 2வது

மகளை,வெளியே தள்ளுகிறார்.

அப்போது வாசலில் ஒரு பிச்சைக்காரன் வருகிறான்.

பிரபு,அவனை பார்த்து "இவள் என் பெண்.உனக்கு சொந்தம்.

அழைத்து கொண்டு போ"

என்கிறார்.

பிச்சைக்காரன் "நான் எழை,எப்படி இவளை

காப்பாற்றுவேன்" என்கிறான்.

பிரபு சொல்கிறார்."கடவுள் படி அளப்பார்." என்று

கடவுள் படி அளந்தாரா?

கதையை கேளுங்கள்...

Jul 19, 202314:47
நூற்றி அறுபத்தி ஆறாவது கதை: துறவியும் இரண்டு புழுக்களும்:(The Hermit and the Two Worms)

நூற்றி அறுபத்தி ஆறாவது கதை: துறவியும் இரண்டு புழுக்களும்:(The Hermit and the Two Worms)

இது ஒரு பிலிபெய்ன் நாட்டுக் கதை.

வாழ்க்கையில்,நிறைய பேர்கள்,குருட்டு

அதிர்ஷ்டத்தில்,பெரிய பணக்காரர்களாக

ஆகிறார்கள்.அவர்களில்,பெரும்பாலானோர்,

அட்ட்காசமான வாழ்க்கயை வாழ்கிறார்கள்.

விளைவு?... பயங்கரமானது.

இந்த கதையில்,ஒரு துறவியின் கருணையினால்,

2 புழுக்குகளுக்கு,மனித உருவம் கிடைக்கிறது.

அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?

கதையை கேளுங்கள்....

Jul 12, 202312:04
நூற்றி அறுபத்தி ஐந்தாவது கதை:ஸ்டார்லிங் பறவையின் பதில்(The Starling's Answer)

நூற்றி அறுபத்தி ஐந்தாவது கதை:ஸ்டார்லிங் பறவையின் பதில்(The Starling's Answer)

இது ஒரு யூத நாட்டுக் கதை.

சாலமன் அரசர்,ஒரு சிறந்த அறிவாளி.

பறவை மொழிகள் தெரிந்தவர்.

அவரையே ஒரு சாதாரண, சிறு ஸ்டார்லிங்

பறவை ,தன் புத்திசாலித்தனத்தினால்,

ஏமாற்றுகிறது.

எப்படி?

கதையை கேளுங்கள்....

Jul 05, 202313:60
நூற்றி அறுபத்தி நாலாவது கதை:அமீரும் தேவ தூதரும் (The Emir snd the Angel)

நூற்றி அறுபத்தி நாலாவது கதை:அமீரும் தேவ தூதரும் (The Emir snd the Angel)

இது ஒரு ஆப்கானிஸ்தான்

நாட்டுக் கதை.

நாட்டு அரசர்-அமீர்-ஒரு கெட்டவர்.

கொடுங்கோல்ஆ ட்சி செய்பவர்.

மக்கள் நலனை பற்றி

கவலைபடாதவர்.

ஒரு நாள்,அவர் கனவில்,

ஒரு தேவ தூதர்தோன்றி,

அவர் நல்ல ,நியாயமான அமீராக

மாற வேண்டும் என்கிறார்.

அமீர்,அந்த கனவை பெரிதாக

எடுத்து கொள்ளாமல். வேட்டைக்கு

போகிறார்.

அங்கே அவருக்கு பெரிய

ஆபத்துக்கள் வருகின்றன.

என்ன நடந்தது?

அமீர் தப்பினாரா?

கதையை கேளுங்கள்....

Jun 28, 202312:57
நூற்றி அறுபத்தி மூன்றாவது கதை:நோவாவும் சாத்தானும் (Noah and The Devil)

நூற்றி அறுபத்தி மூன்றாவது கதை:நோவாவும் சாத்தானும் (Noah and The Devil)

நோவாவின் ஆர்க் (கப்பல்) கதை

நிறைய பேருக்கு தெரிந்த கதை.

கடவுள் கட்டளைப்படி கட்டப்பட்ட

அந்த கப்பலில்,நோவாவின் குடும்பத்தோடு

உலகத்தில் உள்ள எல்லா பறவை-மிருக

இனத்திலிருந்து ஆண்-பெண் ஜோடியை

நோவா அழைத்து கொள்கிறார்.

சாத்தான் எப்படி அங்கே வந்தார்?

சாத்தான் திருட்டுத்தனமாக கப்பலுக்குள்

வந்து கப்பலை மூழ்க அடிக்க முயற்சிக்கிறார்.

நோவா சாத்தானின் திட்டத்தை முறியடிக்கிறார்..

எப்படி?

இந்த ருமேனியா நாட்டு நாடோடி கதையை

கேளுங்கள்..




Jun 21, 202316:41
நூற்றி அறுபத்தி இரண்டாவது கதை:உண்மையான கருணை(True Kindness)

நூற்றி அறுபத்தி இரண்டாவது கதை:உண்மையான கருணை(True Kindness)

இது ஒரு பாலஸ்தீன நாட்டுக் கதை.

நாட்டு அரசருக்கும் அவருடைய

பிரதம மந்திரிக்கும் ஒரு விவாதம்-

உண்மையான கருணையை பற்றி-

அரசர் சொன்னார்-கருணை உள்ளம்

படைத்தவர்கள் பெரும்பாலும்

ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

மந்திரி சொண்ணார்-ஏழைகள்,

முட்டாள்கள்.கெட்ட குணம்

படைத்தவர்கள்-என்றார்.

அரசர்,அதற்கு பதில் சொல்லாமல்

மறு நாள்,நீதிபதியோடு,மாறு

வேடத்தில் ,ஊர் சுற்றினார்

அவர் தேடலில்,அவருக்கு

உணமையான கருணையை

பற்றி விளக்கம் கிடைத்ததா?

கதையை கேளுங்கள்...


Jun 14, 202313:22
நூற்றி அறுபத்தி ஒன்றாவது கதை: அடுத்த சுல்தான் (The Next Sultan)

நூற்றி அறுபத்தி ஒன்றாவது கதை: அடுத்த சுல்தான் (The Next Sultan)

இது ஒரு ஏமன் நாட்டுக் கதை.

ஏமன் நாட்டு சுல்தானுக்கு 3 மகன்கள்.

3 பேரும் நல்ல கெட்டிகாரர்கள்.

அவர்களில் ஒருவரை சுல்தானாக

ஆக்க அவர் முடிவு செயதார்.

யாரை சுல்தானாக்குவது?

கடினமான் முடிவு..

சுல்தான் எப்படி முடிவு செயதார்?

கதையை கேளுங்கள்.....

Jun 07, 202310:12
நூற்றி அறுபதாவது கதை:பெர்சிபனியும் மாதுளம் பழமும் (Persephone and The Pomegranate)

நூற்றி அறுபதாவது கதை:பெர்சிபனியும் மாதுளம் பழமும் (Persephone and The Pomegranate)

இது கிரேக்க புராணங்களில்

சொல்லப்பட்டிருக்கும் கதை.

கடவுள்களின் தலைவரான்

ஜீயஸுக்கும் விவசாய கடவுளான,

டெமெடருக்கும் பிறந்த மகள் தான்,

பெர்சிபனி.

அவளை,பாதாளஉலகத்தின்

அதிபதியான,ஹேடிஸ்,கடத்தி

செல்கிறார்.

அவளை மீட்க,அம்மா,டெமெடர்,

ஒரு போராட்டமே நடத்துகிறார்.

அதில் வெற்றி பெற்றாளா?

அம்மாவும் பெண்ணும் மறுபடி

சேர்ந்தார்களா?

கதையை கேளுங்கள்...


Jun 01, 202315:42
நூற்றி ஐம்பத்தி ஒன்பதாவது கதை: மந்திரிக்கப்பட்ட குடை(The Enchanted Umbrella)

நூற்றி ஐம்பத்தி ஒன்பதாவது கதை: மந்திரிக்கப்பட்ட குடை(The Enchanted Umbrella)

இது ஒரு பிரான்ஸ் நாட்டுக் கதை.

படோவ் என்ற வாலிபன்,

ஏமாற்றப்படுகிறான்.

அவனுக்கு ,நியாயமாக

சேர வேண்டிய சொத்துக்கு பதில்,

ஒரு கிழிந்த பழைய குடை மட்டும்

கிடைக்கிறது.

அந்த குடை,மழைக்கு

அவனுக்கு உபயோகமாக

இருந்ததோடு,இன்னும் பல

வழிகளில் அவனுக்கு உதவி

செய்கிறது.

எப்படி?

கதையை கேளுங்கள்....


May 24, 202315:42
நூற்றி ஐம்பத்தி எட்டாவது கதை:ஒரு தங்க நாணயம் (One Gold Coin)

நூற்றி ஐம்பத்தி எட்டாவது கதை:ஒரு தங்க நாணயம் (One Gold Coin)

இது ஒரு போலந்து நாட்டுக் கதை.

யூதர்களின் புனிதமான சாபாத்(Sabbath) அன்று

ஒரு பக்தியுள்ள ஏழை யூதர்,தேவாலயம் செல்லும்

வழியில்,ஒரு தங்க குவியலை பார்க்கிறார்.

சாபாத் அன்று பணத்தை தொட கூடாது என்ற

நியதி படி அவர் மேலே செல்கிறார்.

சாபாத் முடிந்து திரும்பி வந்த போது

அந்த பணத்தை யாரோ எடுத்திருந்தார்கள்.

ஒரே ஒரு தங்க நாணயம் மட்டும் அங்கே

இருந்தது.அதை அவர் எடுத்து வீட்டில்

தன் மனைவியிடம் கொடுக்கிறார்.'

அப்புறம் என்ன ஆச்சு?

கதையை கேளுங்கள்....

May 18, 202316:07
நூற்றி ஐம்பத்தி ஏழாவது கதை: மானும் நத்தையும் (The Deer and The Snail)

நூற்றி ஐம்பத்தி ஏழாவது கதை: மானும் நத்தையும் (The Deer and The Snail)

இது ஒரு பிலிப்பைன்

நாட்டுக்கதை.

வேகமாக ஓடும் மானுக்கும்,

மெதுவாக செல்லும்

நத்தைக்கும்

ஒரு ஓட்ட பந்தயம்.

யாருக்கு வெற்றி?

கதையை கேளுங்கள்....

May 10, 202313:21
நூற்றி ஐம்பத்தி ஆறாவது கதை:கடவுள் மேல் நம்பிக்கை-2 கதைகள்(Trust in God-2 Stories)

நூற்றி ஐம்பத்தி ஆறாவது கதை:கடவுள் மேல் நம்பிக்கை-2 கதைகள்(Trust in God-2 Stories)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

என்பது காலம் காலமாக சொல்லப்படும்

அறிவுரை.

கடவுளை நம்ப வேண்டும்:

கடவுளை மட்டும் நம்பவேண்டும்.

அந்த நம்பிக்கை முழுமையாக

இருக்க வேண்டும்.

அப்படி செயதால்,

கடவுள்அருள் நிச்சயம்

கிடைக்கும்.

இந்த கருத்தை விளக்க

2 கதைகள்

1.2 பிச்சைகாரர்கள்(2 Beggars)

2.நம்பிக்கை (Faith)

Listen to the story...

May 03, 202312:32
நூற்றி ஐம்பத்தி ஐந்தாவது கதை:பாட்டியும் பெரிய சுரைக்காயும்(Grandma & The Big Gourd)

நூற்றி ஐம்பத்தி ஐந்தாவது கதை:பாட்டியும் பெரிய சுரைக்காயும்(Grandma & The Big Gourd)

இது வங்காள மாகணத்தில்

சொல்லப்படும்ஒ ரு நாடோடி கதை.

இதை ஆங்கிலத்தில்எழுதி பிரபல படித்தியவர்,

சித்ரா பானர்ஜி திவாகருனி என்ற கதாசிரியர்.

ஒரு பாட்டி,காட்டுக்கு மறுபக்கத்தில்

இருக்கும் தன் மகளை பார்க்க

அந்த காட்டு வழியாக் சென்று

பத்திரமாக திரும்பி வருகிறாள்.

காட்டில் அவள்பல பயங்கர

மிருகங்களை சந்திக்கிறாள்.

தன் புத்திசாலித்தனத்தால்,

அவள்அவைகளிடமிருந்து

தப்புகிறாள்.

எப்படி?

கதையை கேளுங்கள்.......,


Apr 26, 202317:01
நூற்றி ஐம்பத்தி நாலாவது கதை:காட்டில் சிப்பாயும் ரஷ்ய நாட்டு அரசரும் (Soldier and Tsar in the Forest)

நூற்றி ஐம்பத்தி நாலாவது கதை:காட்டில் சிப்பாயும் ரஷ்ய நாட்டு அரசரும் (Soldier and Tsar in the Forest)

இது ஒரு ரஷ்ய நாட்டு நாடோடி கதை.

அண்ணன் தளபதியால் அவமான பட்ட

தம்பி சிப்பாய்,காட்டுக்கு ஓடி போகிறான்.

அங்கே வேட்டையாட வந்த

அரசருடன், அரசர் என்று தெரியாமல்,

ஒரு இரவை கழிக்கிறான்.

அங்கே நிறைய சம்பவங்கள்

நடக்கின்றன.

என்ன சம்பவங்கள்?

கதையை கேளுங்கள்.....

Apr 20, 202319:34
நூற்றி ஐம்பத்தி மூன்றாவது கதை: உண்மையும் பொய்யும்-2 கதைகள் (Truth&Falsehood-Two Stories)

நூற்றி ஐம்பத்தி மூன்றாவது கதை: உண்மையும் பொய்யும்-2 கதைகள் (Truth&Falsehood-Two Stories)

உண்மையுக்கும் பொய்க்கும்,

காலம் காலமாக,போர்

நடந்து கொண்டிருக்கிறது.

எப்போது எல்லாம்,உண்மை

வாய் திறக்காமல்.அமைதியாக

இருக்கிறதோ,அப்போது எல்லாம்,

பொய்க்குத்தான் வெற்றி.

இதை விளக்க 2 கதைகள்:

1.உண்மையும் பொய்யும்

2.நெருப்பு,தண்ணீர்,உண்மை,பொய்

கதையை கேளுங்கள்.......


Apr 13, 202314:17
நூற்றி ஐம்பத்தி இரண்டாவது கதை:போர்வையில் இருந்த ஒரு பிச்சைக்காரன் (A Beggar in The Blanket)

நூற்றி ஐம்பத்தி இரண்டாவது கதை:போர்வையில் இருந்த ஒரு பிச்சைக்காரன் (A Beggar in The Blanket)

இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை.

அண்ணன் தம்பி உறவுகளை பற்றி

அநேக கதைகள் இருக்கின்றன.

அண்ணன் மனைவியால்,சண்டைகள்

ஏற்பட்ட கதைகளும் உண்டு.

இந்த கதையில் வரும் அண்ணி

ஒரு நல்ல பெண்.

பணக்கார நண்பர்களை நம்பி,

ஏழை தம்பியை அலட்சிய படுத்தும்

கணவருக்கு, ஒரு நல்ல பாடம்

கற்று கொடுக்கிறாள்.

எப்படி?

கதையை கேளுங்கள்....


Apr 06, 202315:50
நூற்றி ஐம்பத்தி ஒன்றாவது கதை:யாங்கின் புத்தாண்டு (Yang's New Year)

நூற்றி ஐம்பத்தி ஒன்றாவது கதை:யாங்கின் புத்தாண்டு (Yang's New Year)

இது ஒரு சீன நட்டுக் கதை.

சீன நாட்டுக்காரர்களுக்கு,அவர்களுடைய

புத்தாண்டு ஒரு விசேஷமான பண்டிகை.

குறிப்பாக,New Year Eve dinner,

சிறப்பாக கொண்டாடுவார்கள்.

ஒரு பள்ளிகூட ஆசிரியர்,தன் ஒரு

வருஷ சேமிப்பை,வெள்ளி கட்டியாக

மாற்றி தன் ஊருக்கு திரும்பிகிறார்.

மனவியுடன்,புது வர்ஷத்தை கொண்டாட

போகிறோம் என்ற அவர் எதிர்பார்ப்பு,

ஒரே நிமிடத்தில் தகர்ந்தது.

பணத்தை இழந்து,ஏழையாக ஆகி,

சாப்பட்டுக்காக திருடும் அளவுக்கு

போகிறார்.

என்ன நடந்தது?

கதையை கேளுங்கள்...

Mar 30, 202319:37