Skip to main content
Thagaval 360D

Thagaval 360D

By S.P.Senthil Kumar

Welcome to our Thagaval 360D Tamil Podcast fm. An Infotainment Tamil Podcast Channel.
Available on
Overcast Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

Dogs Care 3 நம் வீட்டில் நாய்களுக்கான இடம் எது தெரியுமா?

Thagaval 360DJun 06, 2020

00:00
06:12
Sri Sai Saritham in Tamil | Episode - 1

Sri Sai Saritham in Tamil | Episode - 1

இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய வரலாறு அல்ல.

அவரது உடை கிழிந்த கஃப்னி, தலையணைக்கு பழைய செங்கல், படுக்கைக்கு நைந்துபோன சணல் கோணி, உணவோ பலர் வீட்டில் பிச்சையெடுத்த கலவையான உணவு. அவர் ஒருபோதும் தானாக உண்டதில்லை. காக்கை, பூனை, நாய்கள், பறவைகள் அந்த உணவிற்காக காத்துக்கிடக்கும். அவர் மயமந்திரம், தந்திரங்கள், எதுவும் செய்யவில்லை. ஆனால், அவர் கண்களில் கருணை ஒளி பொங்கி வழிந்தது. அவர் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளில் சக்தி பிறந்தது. ஏழை எளியமக்களின் நோய்களுக்கு, கொடுத்த பொருட்கள் எல்லாம் அருமருந்தாய் நோய் தீர்த்தது. ஷீர்டி மக்கள் மட்டுமே அவரை அப்போது 'பாபா.. பாபா..' என கொண்டாடினார்கள். பின்பு அவரின் அற்புதங்களால் உலகம் போற்றும் பெருங்கடவுளாக போற்றி வணங்கினார்கள்.

பாபாவின் சரித்திரம் என்பது, ஒரு சாதாரண சரித்திரம் அல்ல. அது பரவசங்கள் நிறைந்த ஆன்மிகப் பொக்கிஷம்.

Sri Sathya Sai Baba life History in Tamil

Written by Sai Bharathy

Narrated by S.P.Senthil Kumar

Jan 06, 202410:57
பரிகாரம் முழுமையாக பயன்தர இதை செய்யுங்கள்..!

பரிகாரம் முழுமையாக பயன்தர இதை செய்யுங்கள்..!

பரிகாரம் என்பது நமது பிரச்னைக்கு தீர்வு சொல்லும் ஒரு ஆன்மிக வழி. அதனை முறையாக செய்யவேண்டும். பலரும் அதை சரியாக செய்யாமல் பரிகாரம் பலன் தரவில்லை என்று புலம்புகிறார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காகவே இந்தக் காணொளியை வழங்கியுள்ளார் ஆன்மிகச் சொற்பொழிவாளர் முனைவர் சண்முக திருக்குமரன்.

Jun 10, 202009:17
Thanks sir

Thanks sir

Thank-you very much
Jun 06, 202000:11
Dogs Care 3 நம் வீட்டில் நாய்களுக்கான இடம் எது தெரியுமா?

Dogs Care 3 நம் வீட்டில் நாய்களுக்கான இடம் எது தெரியுமா?

நாய் வளர்ப்பவர்களுக்கான சிறந்த வழிகாட்டுத்தொடராக இங்கு பதிவிடப்படுகிறது. முந்தைய பதிவுகளில் நாய்களை வளர்ப்பதற்கான தகுதிகள் என்னென்ன? எப்படிப்பட்ட நாய்க்குட்டிகள் வளர்ப்பதற்கு ஏற்றது? போன்ற விவரங்களை பார்த்தோம். இந்த பதிவில் நமது வீட்டில் நாய்களுக்காக ஒதுக்கப்படும் இடம் எப்படி இருக்க வேண்டும்? அதை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி விளக்குகிறார் கால்நடை மருத்துவர் உமாராணி அவர்கள். முழுமையாக கேட்டு பயன்பெறுங்கள்.

Jun 06, 202006:12
Dogs Care - 2 நாய்க்குட்டியை வாங்கும்போது அவசியம் செய்ய வேண்டிய சோதனைகள்..!

Dogs Care - 2 நாய்க்குட்டியை வாங்கும்போது அவசியம் செய்ய வேண்டிய சோதனைகள்..!

வீட்டில் வளர்க்க ஏற்ற நாய் ஆணா.. பெண்ணா? வீட்டில் எப்படிப்பட்ட நாய்களை வளர்க்க வேண்டும் என்று மிக விரிவாக விளக்குகிறது இந்த பதிவு. புதிதாக நாம் நாய்க்குட்டிகளை வாங்கும் பொது என்னென்ன சோதனை செய்ய வேண்டும்? எந்த வகை நாய்க்குட்டிகளை வாங்க வேண்டும் என்பவற்றை மிக விளக்கமாக சொல்லியிருக்கிறார் கால்நடை மருத்துவர் உமாராணி.  

Jun 03, 202005:43
Dogs Care - 1 இது தெரியாமல் நாய்களை வளர்க்க முயற்சிக்க வேண்டாம்?

Dogs Care - 1 இது தெரியாமல் நாய்களை வளர்க்க முயற்சிக்க வேண்டாம்?

நாய்களை வளர்க்கும் முன் இதெல்லாம் உங்களிடம் இருக்கான்னு பார்த்துக்கோங்க   நாய்களை வளர்ப்பது என்பது மனிதனுக்கு மிகவும் பிடித்தமான செயல். பலரும் வீடுகளில் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல் நாய்களை வளர்த்து வருகிறார்கள். அதேவேளையில் நாய்களை முறையாக வளர்க்கத் தெரியாமல் கொஞ்ச நாட்களிலேயே அந்த நாயை வெறுக்கும் நிலைக்கு வந்து விடுகிறார்கள். அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை இந்த தொடர் விளக்குகிறது. நாய்கள் வளர்ப்பு தொடர்பான பதிவுகளை வெளியிட இருக்கிறோம். கால்நடை மருத்துவர் உமா ராணி அவர்கள் விரிவான விளக்கம் தருகிறார். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு இந்த தொடர் பதிவு மிக உபயோகமாக இருக்கும்.

Jun 03, 202009:20
How to get more marks even for the unknown questions in NEET Exam

How to get more marks even for the unknown questions in NEET Exam

நீட் தேர்வில் தெரியாத கேள்விகளுக்கு இனி மதிப்பெண்கள் குறையாது!    மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வான 'நீட்'டில் தவறாக விடையளிக்கும் கேள்விகளுக்கு மைனஸ் மதிப்பெண்கள் கிடைக்கும். இதனால் பல மாணவர்களும் சரியான விடைதெரியாத கேள்விகளை அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால், இனி விடைதெரியாத கேள்விகளுக்கும் மதிப்பெண்கள் பெரும் அபூர்வமான டிப்ஸை இந்தக் காணொளி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Jun 03, 202011:31
India's first passenger train live report

India's first passenger train live report

இந்தியாவில் ரயிலை இயங்க வைக்கவேண்டும் என்பது அவரின் தீவீர கனவு. ஆனால், இந்திய மக்களுக்கு ரயில் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. அதோடு அன்றைக்கு ரயில்வே துறை தனியார் வசமே இருந்தது. இந்தியா போன்ற கரடுமுரடான நில அமைப்பு கொண்ட ஒரு நாட்டில் ரயிலுக்காக முதலீடு செய்ய யார் முன்வருவார்கள்? இப்படி சிக்கல்கள் பல இருந்தாலும் தனது கனவில் தீவிரமாக இருந்தார் ஸ்டீவன்சன்.

Jun 02, 202013:03