Skip to main content
 Ignatian Thoughts- புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்

Ignatian Thoughts- புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்

By Antony Inigo

Have a spiritual insight everyday from the sources of Ignatian Spirituality.

Thank you.
Wishing you all a very happy journey ahead in life!

புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீக ஊற்றுகளிலிருந்து நாளும் நல்ல சிந்தனை பெறுவோம்.

D Antony Inigo SJ
Available on
Google Podcasts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

Corpus Christi Homily - Michael Panimayaraj SJ , St Joseph Church, Dindigul, 03 July 2022,

Ignatian Thoughts- புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்Jul 03, 2022

00:00
20:58
Corpus Christi Homily - Michael Panimayaraj SJ , St Joseph Church, Dindigul, 03 July 2022,

Corpus Christi Homily - Michael Panimayaraj SJ , St Joseph Church, Dindigul, 03 July 2022,

Corpus Christi Homily - Michael Panimayaraj SJ
Jul 03, 202220:58
இலையைக் கேள்! இறைவனுக்கு ஆண்டிறுதி – ஆண்டுத் தொடக்கநாளில் நன்றி சொல்வோம். - தனராசு சே ச.

இலையைக் கேள்! இறைவனுக்கு ஆண்டிறுதி – ஆண்டுத் தொடக்கநாளில் நன்றி சொல்வோம். - தனராசு சே ச.

இலையைக்  கேள்! இறைவனுக்கு ஆண்டிறுதி – ஆண்டுத் தொடக்கநாளில் நன்றி சொல்வோம். - தனராசு சே ச.

- Fr Dhananraj SJ, Retreat Talk God’s love

Dec 31, 202117:06
மண்ணைக் கேள்! இறைவனுக்கு ஆண்டிறுதி – ஆண்டுத் தொடக்கநாளில் நன்றி சொல்வோம். - தனராசு சே ச.

மண்ணைக் கேள்! இறைவனுக்கு ஆண்டிறுதி – ஆண்டுத் தொடக்கநாளில் நன்றி சொல்வோம். - தனராசு சே ச.

மண்ணைக் கேள்! இறைவனுக்கு ஆண்டிறுதி – ஆண்டுத் தொடக்கநாளில் நன்றி சொல்வோம். - தனராசு சே ச.

Fr Dhananraj SJ, Retreat Talk God’s love – 

Dec 30, 202127:56
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 30, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 30, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்

அனைவரும் புலன் உறுப்புகளை (குறிப்பாக கண்கள், காதுகள் மற்றும் நாக்கு) மிகுந்த விடாமுயற்சியுடன் அனைத்து முறையற்வைகளிலிருந்தும் காத்துக்கொள்ளச் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். மனத் தாழ்மையோடு மற்றவர்களை தங்களிலும் உயர்ந்தவராகக் கருத வேண்டும். (பிலி 2 : 3), மேலும், கனிவோடும் எளிய துறவு மனப்பான்மையோடும், மற்றவரைத் தங்களைவிட மேலாக மதித்தல் வேண்டும். ஒவ்வொருவரின்; நிலைக்கு ஏற்ப மதிப்பும்; மாண்பும் வெளிப்படையாகக் கொடுக்கவேண்டும். இதனால், ஒருவரையொருவர் பார்த்து அவர்கள் இறையுணர்வில் வளர்கிறார்கள்; ஆண்டவராகிய கடவுளைப் போற்றுகிறார்கள். - இயேசு சபைச் சட்டம் 155

தனி ஒருவரின் நடத்தையின் தரம் உயர்வதற்கான நோக்கம் என்பது ஒன்றாக வாழும் மக்களிடையே அமைதியை நிலைநாட்டுவது மட்டும் அல்ல. அதோடு கூட, நம் வாழ்க்கை மற்றவர்கள் கடவுளை இன்னும் பேரார்வத்துடன் அன்பு செய்யத் தூண்ட வேண்டும் - உண்மையிலேயே உயர்ந்த நோக்கமும் அளவீடும் ஆகும்.

கடவுள் மீது இன்னும் பெரிய ஆர்வம் காட்ட யாருடைய முன்மாதிரி உங்களைத் தூண்டுகிறது? இதே போல் மற்றவர்களைத் தூண்டுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ்

தமிழாக்கம்: சகோ. அனிதா கேத்ரின் மஊச

தொகுப்பு: பணி. தே. அந்தோணி இனிகோ சேச

--------- --------------- -------------

இன்றைய 30.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

https://youtu.be/T9L1Aj3q33k

Jun 29, 202102:11
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 29, எப்போதையும் விட அதிகமாமாக

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 29, எப்போதையும் விட அதிகமாமாக

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 29, எப்போதையும் விட அதிகமாமாக

அருட்பணியாளர் பேதுரோ அருப்பே அவர்கள் இயேசு சபையின் முன்னாள் தலைவர் (1965 – 1983) ஆவார். அவர் மிகக் கடினமாக முடக்கிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இத்துன்பங்களைத் தம் வாழ்வின் இறுதிப் பத்தாண்டுகள் பொறுமையோடு தாங்கிக்கொண்டார். அவர் பின்வரும் இறைவேண்டல் செய்தார்.

முன்னெப்போதையும் விட அதிகமாக நான் என்னைக் கடவுளின் கரங்களில் காண்கிறேன்.

இதைத்தான் என் இளமை முதல் விரும்பியிருக்கிறேன்.

ஆனால் இப்போது ஒரு வேறுபாடு;

முதல் முயற்சி முழுவதும் கடவுளிடம் இருக்கிறது.

கடவுளின் கரங்களில் என்னை இவ்வளவு முழுமையாக அறிவதும் உணர்வதும்

உண்மையில் ஆழ்ந்த ஆன்மிக அனுபவமாக இருக்கிறது.

– தந்தை அருப்பே சே.ச., நெருப்பில் இதயங்கள், மைக்கேல் ஹார்ட்டர் சே.ச.

இறைச்சொல் கேட்போம்: தந்தையே முடிந்தால் இந்தத் துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உம் விருப்படியே நிகழட்டும். – மத்தேயு 26 : 39

எண்ணிப் பார்ப்போம்: தந்தை அருப்பேயின் இறைவேண்டலை நீங்கள் செய்யும்போது உள்ளத்தில் எழும் எண்ணங்களைச் சுவைத்துப் பாருங்கள்.

நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ்

தமிழாக்கம்: சகோ. அனிதா கேத்ரின் மஊச

தொகுப்பு: பணி. தே. அந்தோணி இனிகோ சேச

--------- --------------- -------------

இன்றைய 29.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

https://youtu.be/LbbP5DGtsfY

Jun 28, 202102:03
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 28, சிலுவையின் மொழி - தமிழாக்கம்: சகோ. அனிதா கேத்ரின் மஊச தொகுப்பு: பணி. தே. அந்தோணி இனிகோ சேச

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 28, சிலுவையின் மொழி - தமிழாக்கம்: சகோ. அனிதா கேத்ரின் மஊச தொகுப்பு: பணி. தே. அந்தோணி இனிகோ சேச

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 28, சிலுவையின் மொழி

இயேசுவின் திருப்பாடுகள், வன்முறையும் வேதனையும் நிறைந்த உலகை அது இருப்பது போலவே தழுவிக்கொள்ள நம்மை இட்டுச் செல்கிறது. நம்மைச் சுற்றியுள்ள உண்மையான துன்ப துயரங்களை நாம் உணர விடாமல் சமயமும், அருளும் எளிய வலிநீக்கிகள் ஆகித் நம்மைத் தடுப்பதை நாம் புறக்கணிக்கிறோம். மாறாக, நம் வாழ்க்கையில் நுழையும் எந்தத் துன்பத்தையும் தழுவிக்கொள்கிறோம். நம் துன்பங்களுக்கு சிலுவையின் ஒளியிலும் மொழியிலும் பொருள் உண்டு. நாம் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் துன்பங்களோடு, அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட மானுடத்தின் ஏன் படைப்பனைத்தின் துன்பங்களையும் சேர்க்கிறோம். – ஜோசப் டெட்லோ, சே.ச., கிறிஸ்துவில் தேர்வுகள் செய்தல்.

இறைச் சொல் கேட்போமா? ‘நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால் அதற்காக வெட்கப்படலாகாது. அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள். ஆகவே கடவுளின் திருவுளப்படி துன்பப்படுகிறவர்கள் நன்மை செய்வதில் நிலைத்திருந்து படைத்தவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக. அவர் நம்பத்தக்கவர். – 1 பேதுரு 4:16, 19

இன்று இறைவேண்டலில், ஆன்மிகப் பயிற்சிகளில் புனித இஞ்ஞாசியார் எழுதியுள்ளதைப் போலச் செய்யுங்கள்

‘அவல நிலையில் சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கும் கிறிஸ்துவைப் பார்ப்பேன். அப்போது என் உள்ளத்தில் எழும் எண்ணங்களை ஆழ்ந்து உணர்வேன்.’ (ஆப 53)

நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ்

தமிழாக்கம்: சகோ. அனிதா கேத்ரின் மஊச

தொகுப்பு: பணி. தே. அந்தோணி இனிகோ சேச

--------- --------------- -------------

இன்றைய 28.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

https://youtu.be/vC-N_HO3rFw

Jun 27, 202102:34
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 27, கோபமூட்டும் அருள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 27, கோபமூட்டும் அருள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 27, கோபமூட்டும் அருள்

கடைசி இருக்கை அல்லது கோவிலுக்கு வெளியில் நிற்கும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இல்லையா? அவர்கள் நல்ல நடத்தை உடையவர்கள், எல்லாவற்றையும் சிறப்பாக செய்பவர்கள்; ஆனால் அறிவிப்பு மற்றும் திருத்தூது ஆர்வத்தின் வழியாக மக்களைத் திருச்சபைக்கு அழைத்து வர முடியாதவர்கள். இன்று, நம் அனைவருக்கும் தூய ஆவியானவரிடம் கேட்போம்: திருத்தூது உற்சாகம் மற்றும் திருச்சபை மிக அமைதியாக இருக்கும் போது கோபமூட்டும் அருளைத் தரக் கேட்போம்; வாழ்வில் விளிம்புக்குத் தள்ளப்பட்டவரிடம் செல்லும் அருள் வேண்டுவோம். திருச்சபைக்கு இது மிகவும் தேவை. புதிதாகப் பரவும் நாடுகளில் உருவாகி வரும் இளம் திருச்சபைகளில் மட்டுமல்ல, நன்கு வேரூன்றிய நாடுகளிலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறியாத மக்களிடையே, கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க வேண்டியுள்ளது. ஆகவே திருத்தூது ஆர்வம் என்னும் அருளை நாம் தூய ஆவியானவரிடம் கேட்போம்; திருத்தூது வேட்கையுடன் இருப்போம். மக்களை நாம் கோபப்படச் செய்தால் கடவுள் போற்றப்படுவாராக. முன்னேறுவோம், ஆண்டவர் பவுலுக்கு கூறுவது போல ‘துணிவுடன் இருங்கள்’. - திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான் வானொலி

இறைச்சொல் ஒன்று கேட்போம்: சகோதர சகோதரிகளே, நன்மை செய்வதில் நீங்கள் மனம் தளர வேண்டாம். - 2 தெசலோனிக்கர் 3 : 13

வாழ்க்கையில் புறந்தள்ளப்பட்ட ஒருவருக்கு கருணை மற்றும் அன்பைக் காட்ட இன்று ஒரு வாய்ப்பைத் தேடுங்கள்.

நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ்

--------- --------------- -------------

இன்றைய 27.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

https://youtu.be/hQEEXuPW_xY

Jun 26, 202102:29
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 26, அப்படி இருப்பது போல் செய்யுங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 26, அப்படி இருப்பது போல் செய்யுங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 26, அப்படி இருப்பது போல் செய்யுங்கள்

நம் வாழ்க்கையில் சில நேரங்களில் நம்பவோ, இறைவேண்டல் செய்யவோ, அன்புப் பணியாற்றவோ தோன்றாது. அப்போதும், அப்படித் தோன்றுவது போல் செயல்பட வேண்டும். நாம் மானிட உருவான, அருளடையாள நம்பிக்கையின் ஆழத்தில் இங்கே இருக்கிறோம். நமக்கு இறைவேண்டல் செய்யத் தோன்றாத போதும், சிலுவையைப் பற்றிக்கொண்டு முத்தமிட்டிருக்கிறோம். தேவையிலிருப்போரை வெறுத்து விட்டு விலகி ஓடத் தோன்றும் போதும், அவர்களை அணுகி அவர்களுக்கு உதவி செய்திருக்கிறோம். இவை வெளிவேடமான நேர்மையற்ற செயல்கள் அல்ல. மாறாக, தற்பொழுது இதைச் செய்ய உந்துதல் இல்லை எனினும், நாம் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கைக்கு ஏற்றவாறே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவே நம்பிக்கை முதிர்ச்சி - நாம் ஆழ்ந்த நம்பிக்கையை, எப்போதும் உணர்வதைப் போலச் செயல்படும் முதிர்ச்சி பெற்ற நம்பிக்கை ஆகும். – ஜார்ஜ் அஷென்;பிரென்னர் சே.ச., அதிமிக மகிமைக்காக நீட்டிக்கப்படல்

இந்தப் புரிதல் ‘இருப்பது போலச் செய்யும் செயல்கள்’ பற்றிய எண்ணத்தைப் புரட்டிப் போடுகிறது. பெரும்பாலும் இவை பாசாங்குத்தனமான மற்றும் நம்பகத்தன்மையற்றதாகக் கருதப்படுகின்றன. ஆனால், உண்மையில் இது முதிர்ச்சி பெற்ற நம்பிக்கையின் அடையாளம்.

நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் உறுதியும் எதிர்நோக்கும் உணராத பொழுது இந்தப் பரிந்துரையைப் பற்றிக் கொள்ளுங்கள்.

நன்றி: ஜிம் மேனி அவர்களின் அன் இக்னேசியன் புக் ஆஃப் டெய்ஸ்

--------- --------------- -------------

இன்றைய 26.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

https://youtu.be/d0IgqZk5L6g

Jun 25, 202102:10
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 25, உங்கள் இதயத்தை வெளிப்படுத்துங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 25, உங்கள் இதயத்தை வெளிப்படுத்துங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 25, உங்கள் இதயத்தை வெளிப்படுத்துங்கள்

அனைவரும் தங்கள் தலைவர்களிடம் இயேசு கிறிஸ்துவைக் கண்டு, சிறப்பாக உள்ளார்ந்த முழு மரியாதை கொண்டிருக்க வேண்டும்; மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுடைய இதயத்திலிருந்து தங்கள் தலைவர்களைத் தந்தையாக இறைவனில் அன்பு செய்ய வேண்டும். இவ்வாறு எல்லாவற்றிலும் அன்புடன் தொடர வேண்டும். தலைவர்கள் தங்களை இன்னும் நன்றாக, மீட்பு மற்றும் நிறைவின் பாதையில், அனைத்திலும் வழிநடத்த இயலும் பொருட்டு, அவர்களிடமிருந்து தங்களைப் பற்றியவை, உள்ளும் புறமும் எதையும் மறைக்காமல், எல்லாவற்றையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். - இயேசு சபைச் சட்டங்கள் 551.

இந்தச் சட்டம் துறவு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட பரந்த பயன்பாட்டைக் கொண்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவவும், மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ளவும் நாம் நம் இதயத்தை வெளிப்படுத்த வேண்டும். இதைக் கவனமாகவும், விவேகமாகவும் செய்ய வேண்டும். ஆனால் அது மிகவும் தேவையானது.

உங்கள் இதயத்தை யார் மிக நன்கு அறிவார்கள்? அவரிடம் உங்கள் இதயத்தை இன்னும் திறக்க முடியுமா?

--------- --------------- -------------

இன்றைய 25.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/In

https://youtu.be/HUDeEQNoqRc

Jun 24, 202101:60
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 24. நன்கு முயற்சி எடுங்கள். மீதியை அவரிடம் விட்டுவிடுங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 24. நன்கு முயற்சி எடுங்கள். மீதியை அவரிடம் விட்டுவிடுங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 24. நன்கு முயற்சி எடுங்கள். மீதியை அவரிடம் விட்டுவிடுங்கள்

பற்பல வேலைகள் செய்து முடிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படித் தங்களது வேலைப் பளுவை எதிர் கொள்ள வேண்டும் என்று புனித இனிகோ ஒரு கடிதத்தில் எழுதி உள்ளார்.

ஒருவர் தம் வேலைகளின் நோக்கம் நல்லதாகவும், தூய்மையானதாகவும் கொண்டுள்ளார். இருப்பினும், அவர் விரும்பிய அனைத்தையும் செய்ய முடியாவிட்டாலும், தம்மையே நொந்து கொள்ளாமல் தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

நல்ல மனச்சான்றின் கட்டளைப் படிச் செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து முடித்த பின், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஒருவரால் நிறைவேற்ற முடியாத ஒன்றை நம்முடைய ஆண்டவராகிய கடவுள் எதிர்பார்ப்பதாகவோ, ஒருவர் மனவருத்தத்துடன் இருப்பதை அவர் விரும்புவதாகவோ நினைத்து வருந்தாதிருங்கள்.

நீங்கள் உழைத்துத் தேய்ந்து போகத் தேவை இல்லை. ஆனால், ஒரு திறமையான மற்றும் போதுமான முயற்சியை மேற்கொண்டு மீதியை அவரிடம் விட்டு விடுங்கள் என்று இஞ்ஞாசியார் அறிவுறுத்துகிறார். – (இஞ்ஞாசியாரின் கடிதங்கள், வில்லியம் யங்)

இந்த எளிமைக்கான அழைப்பின் மையமாக இருப்பது இறைவனிடம் அனைத்தையும் கையளித்து ஒப்படைத்தல் ஆகும். கடவுள் நமக்குக் கொடுத்ததை அவருக்குத் திரும்பக் கொடுத்து நமக்குத் தேவையானதை அவர் தருவார் என்ற நம்பிக்கையோடு இருக்க வேண்டும்

இன்று உங்களுக்கு எங்கே பளுவாக உணர்கிறீர்கள்? நீங்கள் எப்படி ஒரு நல்ல முயற்சி செய்த பின் மற்றதைக் கடவுளிடம் விட்டுவிட முடியும்?

--------- --------------- -------------

இன்றைய 24.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

https://youtu.be/bUKqaEnWNqk 

Jun 23, 202102:27
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 23, ஆண்டவரே எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என எமக்குக் கற்றுத்தாரும்

செபம் எளிதானது அல்ல. இது பல சொற்களைப் பேசுவதோ அல்லது மனனம் செய்த இறைவேண்டல்களை அரைத் தூக்க மயக்க நிலையில் சொல்வதோ அல்ல. தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட அன்பின் செயல்களால் இதயத்தையும் மனதையும் கடவுளை நோக்கி உயர்த்துவதாகும். யாக்கோபு இறைத்தூதருடன் கட்டி உருண்டு சண்டையிட்டதைப் போல நாமும் இறைவேண்டலுடன் சண்டையிட முன்னேற வேண்டும். செபம் என்றால் என்ன அதன் ஆற்றல் மற்றும் மேன்மை என்ன என்பதைக் காணும் வண்ணம் நமது நம்பிக்கை விளக்கை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இருளுக்குள் நாம் நம்முடைய இறைவேண்டலை முனுமுனுக்க வேண்டும் - ‘ஆண்டவரே எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என எமக்குக் கற்றுத் தாரும். – கார்ல் ராஹ்னர் சே.ச., இறைவேண்டல் பற்றி.;

இறைச்சொல் கேட்போம்: நீங்கள் இறைவனிடம் வே;ணடும்போது பிற இனத்தாரைப் போல பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்கவேண்டாம். நீஙகள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவேண்டல் செய்யுங்கள். விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோரிடமிருந்து எங்களை விடுவியும். - மத்தேயு 6 : 7 - 13

ஆண்டவரின் இறைவேண்டலை உணர்ந்து மெதுவாகச் செய்ய இன்று சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 23.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 22, 202102:38
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 22, மறைந்துள்ள சிலைகள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 22, மறைந்துள்ள சிலைகள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 22, மறைந்துள்ள சிலைகள்

நமக்குள் நாம் தஞ்சம் அடைந்து பாதுகாப்புத் தேடும் பல சிறிய அல்லது பெரிய சிலைகள் உள்ளன. இவற்றை நீக்கி விட்டு நாம் நம்மையே வெறுமையாக்க வேண்டும். அவை பெரும்பாலும் நாம் நன்கு மறைத்து வைத்துள்ள சிலைகள். அவை இலட்சியம், தொழில்முனைப்பு, வெற்றிச் சுவை, நம்மையே மையப்படுத்துதல், பிறரை அடக்கி நடத்தும் போக்கு, நம் வாழ்வின் ஒரே எஜமானர்கள் என்று சிலவற்றை வைத்துக்கொள்வது, நம்மைக் கட்டுப்படுத்தும்; அதே பாவங்கள் என இன்னும் பல இருக்கலாம். இன்று உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் எதிரொலிக்கும் வண்ணம் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அதற்கு நீங்கள் நேர்மையாகப் பதிலளிக்க வேண்டு;ம் எனவும் விரும்புகிறேன். எனது வாழ்க்கையில் எந்தச் சிலை மறைக்கப்பட்டுள்ளது என நான் எண்ணிக் கருத்தில் கொண்டிருக்கிறேனா? – திருத்தந்தை பிரான்சிஸ், இரக்கத்தின் திரு அவை.

இறைச் சொல் கேட்போம்: ‘உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? - மத்தேயு 7 : 3

திருத்தந்தையின் கேள்வியை நீங்கள் கேட்டுப்பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த எந்தச் சிலை மறைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கருத்தில் கொண்டுள்ளீர்களா?

--------- --------------- -------------

இன்றைய 22.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 21, 202101:46
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 21, புனித அலாய்சியஸ் கொன்சாகா சே.ச.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 21, புனித அலாய்சியஸ் கொன்சாகா சே.ச.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 21, புனித அலாய்சியஸ் கொன்சாகா சே.ச.

இன்று (1568 முதல் – 1591 வரை வாழ்ந்த) இயேசு சபைத் துறவி, புனித அலாய்சியஸ் கொன்சாகா சே.ச. அவர்களின் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவர் தான் ஒரு இயேசு சபைத் துறவியாக வேண்டும் என்று தமது பெருமைமிகு குடும்பத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் முற்றிலும் துறந்தார். உரோமையில் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் காப்பாற்றும் பணியில், இளம் வயதிலேயே இறையடி சேர்ந்தார். ராபர்ட் பெல்லார்மின் சே.ச. அவர்களின் ஆன்மிக வழிகாட்டுதலின் கீழ் கொன்சாகா தமது கடுமையான இறுக்கமான ஆன்மிகப் பழக்கங்களை விட்டுவிட்டு, கடவுளின் இரக்கத்தைப் பாராட்டுவதில் வளர்ந்தார்.

இவர் இறக்கும் தருவாயில் இருந்தபோது தன் தாய்க்கு இவ்வாறு எழுதினார்: இறை நன்மை பற்றிய என் அனுபவத்தைப் உங்களுடன் பகிர விரும்புகிறேன். இறை நன்மை என்பது ஆழம் காண முடியாத கரையற்ற ஒரு பெருங்கடல். இந்த நினைவுகளுக்குள் என் மனம் பாயும் போது தன்னையே இழந்து அதன் அளப்பரிய தன்மையில் எதுவும் விளங்கமுடியாமல் திக்குமுக்காடிப் போகிறது. எனது குறுகிய பற்றும் நலிந்த உழைப்புக்கு ஈடாக, கடவுள் என்னை நிலையான ஓய்வுக்கு அழைக்கிறார். விண்ணகத்திலிருந்து அவரது குரல், நான் சோர்வாகத் தேடிய எல்யைற்ற பேரின்பத்திற்கு என்னை அழைக்கிறது. – புனிதர்களின் குரல், பெர்ட் கெட்சி

இறைச் சொல் கேட்போம்: மறைநூலில் எழுதியுள்ளவாறு ’தம்மிடம் அன்பு கொள்கிறவர்க்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்கு புலப்படல்லை. செவிக்கு எட்டவில்லை”. – 1 கொரிந்தியர் 2 :9

புனித அலாய்சியஸ் கொன்சாகாவின் மேற்கோளைப் படித்து விண்ணகம் பற்றித் தியானியுங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 21.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 20, 202102:45
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 20, ஒரே இலக்கிற்குப் பல வழிகள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 20, ஒரே இலக்கிற்குப் பல வழிகள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 20, ஒரே இலக்கிற்குப் பல வழிகள்

இலக்குகள் வழிகளை நியாயப்படுத்துகின்றன என்று இஞ்ஞாசியாசியார் கற்பிப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அவர் அவ்வாறு கற்பிக்கவில்லை. இலக்கை அடைய பல நல்ல வழிகள் உள்ளன; மிக அரிதாக ஒரே ஒரு வழிமட்டும் இருக்கலாம் என்று அவர் நம்பினார். தரப்பட்ட எந்தச் சூழலிலும் இறை மகிமை வளர ஒரு வழி மற்றதை விட அதிகப் பயனுள்ளதாக இருக்கலாம். அது ஒருவரின் தனிப்பட்டவிருப்பு வெறுப்புளுக்கு முரணாக இருந்தாலும் அதையே விரும்பித்தேர்ந்து கொள்ளவேண்டும். - பிராங்க் மஜ்கா சே.ச., ஒரே இலக்குக்கு பல சாலைகள், பாலம் வலைப்பதிவு

இங்கே இதோடு ஒரு தொடர்புடைய சிந்தனை ஒன்று: நாம் விரும்பும் வழியைத் தவிர்த்து வேறு வழியைத் தேர்ந்தெடு;ப்பவரை நாம் குறை சொல்லக்கூடாது.

நீங்கள் தற்போது எதிர்கொள்ளும்; நெருக்கடி ஒன்றைக் கருத்தில் கொள்க. இதனை தீர்க்க, நீங்கள் விரும்பும் வழி அல்லாமல், வேறு ஒரு வழியைத் தேர்வு செய்க

--------- --------------- -------------

இன்றைய 20.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 19, 202101:41
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 19, அதை அவசரப்படுத்த வேண்டாம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 19, அதை அவசரப்படுத்த வேண்டாம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 19, அதை அவசரப்படுத்த வேண்டாம்

இஞ்ஞாhசியார்pன் புரிதலில், அகஆறுதல் என்பது, நம்மைக் கடவுளையும் மற்றவர்களையும் நோக்கி இட்டுச்செல்லும் உணர்ச்சிகள், வழிநடத்தல்கள் மற்றும் பிறபல இயக்கங்கள் ஆகும். அகஆறுதல் தெளிந்து தேர்தலுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நாம் இதை எளிதாக தெளிந்து தேர்தலுக்கு வெளியேயும் உணர முடியும்.

ஆக ஆறுதல் உணர்வுகள் கடவுளிடமிருந்து வரும் கொடைகள். அவசரப்பட வேண்டாம். ஒரு சிறந்த அறிவுரை என்னவென்றால், அந்நேரத்தில் தங்கி அமர்ந்து, அருளைச் சுவைத்து ‘ஆன்மிகச் சுவை’யை அடர்த்தியாக்குங்கள். அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அந்த அக ஆறுதல் உணர்வுகள் உங்களைச் சூழ்ந்து நிறைக்கட்டும். நமது அக ஆறுதல் நேரங்களை, இனிமேல் நமக்கு நேரக் கூடிய அகவறட்சியை எதிர் கொள்ள ஒரு ஏற்பாடாகப் பார்க்கவேண்டும் என்று புனித இஞ்ஞாசியார் கூறுகிறார். இன்னொரு வகையில் சொல்ல வேண்டும் என்றால், அந்த அக ஆறுதலின் ஆன்மிகச் சுவையை நாம் பின்வரும் நாட்களுக்கு சேமித்து வைக்கவேண்டும். – ஆண்டி ஓட்டோ, எல்லாவற்றிலும் கடவுள், வலைப்பதிவு.

இன்று, ஆறுதல் உணர்வுகளில் கவனமாய் இருங்கள். அவை வரும் போது விழிப்பாய் இருக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளுக்காக கடவுளுக்கு நன்றி கூறுங்கள். அவற்றில் மகிழுங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 19.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 18, 202102:13
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 18, ‘செயலில் ஆழ்ந்த தியானம்’, ‘செயலில் காட்சித்தியானம்’ ‘செயலில் காட்சியாளர்’

‘செயலில் ஆழ்ந்த தியானம்’ வேண்டும் என்ற இஞ்ஞாசியாரின் கருத்தை எப்படிப் புரிந்து கொள்ளலாம்? நீண்ட நாள் பழகும்; இருவரின் நட்புடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் பிரிந்திருந்தாலும் அல்லது ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இல்லையென்றாலும் அவர்கள் உள்ளத்தின் ஆழத்தில் தொடர்பில் இருக்கிறார்கள். இஞ்ஞாசியாரின் செயலில் ஆழ்ந்த தியானம், கடவுளோடு இத்தகைய உறவைக் கொண்டது. காலப்போக்கில் கடவுளோடு நெருக்கமாக ஈடுபாடு கொள்வதன் வழியாக நாம் படைக்கப்பட்டது போல கடவுளின் சாயலாக, அதாவது, செயலில் ஆழ்ந்த தியானம் செய்யும் இயேசுவின் உருவாக நம்மை ஆவியானவர் உருமாற்றுகிறார். - வில்லியம் பாரி சே.ச., மற்ற எவரையும் போல் இல்லாத ஒரு நட்பு.

செயலில் காட்சித்தியானம் என்பது ஒரு முரண் - எதிரும் புதிரும் ஆகும். - பிரிக்கப்பட்டது மற்றும் ஈடுபாடு உடையது. தியானம் மற்றும் செயல்பாடுடையது. இயேசுவே ஒரு முன்மாதிரி.

ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை இன்னும நன்கு அறிய விரும்புகிறேன். இன்று உம்முடன் எனது தொடர்பை-இணைப்பை ஆழமாக்கும்.

--------- --------------- -------------

இன்றைய 18.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 17, 202101:57
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 17, நாம் உண்மையில் இவ்வாறு உணர்கிறோம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 17, நாம் உண்மையில் இவ்வாறு உணர்கிறோம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 17, நாம் உண்மையில் இவ்வாறு உணர்கிறோம்

ஒவ்வொருவரும் புண்படுத்துகிறார்கள். என் வலியை அல்லது வெறுப்பை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் இல்லாதபோது, நான் முரடனாகிறேன். ஆனால் அடக்கி வைப்பதை விட முரடனாவது மேலானது. எனவே, அவலத்தைக் கண்டு கோபத்தின் உச்சியில் ‘நாசமாகட்டும், உருப்படாமல் போகட்டும்” ஒன்றுமில்லாமல் போகட்டும்’ கடவுளே என்று புலம்புகிறேன். இதுவே என் புலம்பல் திருப்பாடல். இது மிதமிஞ்சியதாகத் தோன்றுகிறதா? அல்லது இது ஒரு இறைவேண்டலா? புலம்பல் என்பது ஆரோக்கியமான இறைவேண்டல் மற்றும் அமைதி ஏற்படுத்தம் முறை ஆகும் என்ற ஒரு எளிய உண்மையை நாம் புறக்கணிக்கிறோம். இப்புறக்கணிப்பு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதை நாம் உண்மையாகவே உணர்வோம். இந்தப் புலம்பல் வழியாக நாம் கடவுளிடம் உண்மையாக நாம் எப்படி உணர்கிறோம், அவரிடம்; இருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை அப்படியே சொல்கிறோம். அதை அப்படியே அவர் கையில் ஒப்படைத்துவிட்டு நமக்காக நீதியோடு நல்முடிவை எடுக்க விட்டுவிடுகிறோம். - பிரையன் புஸே சே.ச., இயேசு சபையாளனின் கடிதம், வலைப்பதிவு

உலகின் நீதிபதியே எழுந்தருளும். செருக்குற்றோருக்கு உரிய தண்டனையை அளியும். எத்தனைக்காலம், ஆண்டவரே எத்தனைக் காலம் பொல்லார் அக்களிப்பர் - திருப்பாடல் 94: 2-3

நீங்கள் எதனால் வெறுப்படைகிறீர்கள்? எதனால் கோபமடைகிறீர்கள்? இவையெல்லாம் இறைவேண்டலில் எப்படி இடம்பெறுகின்றன?

--------- --------------- -------------

இன்றைய 17.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 16, 202102:23
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 16, இறைவேண்டல் என்பது...

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 16, இறைவேண்டல் என்பது...

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 16, இறைவேண்டல் என்பது . . .

இறைவேண்டல் என்பது ஒரு போட்டி அல்லது வெற்றி இலக்கை நோக்கிய செயல்பாடு அல்ல. இறைவேண்டல் என்பதே ஏற்கெனவே வெற்றி பெற்றதாகும். இறைவேண்டல் இது பதவி உயர்வு பெறுவது அல்லது இலக்கை அடைவது அல்லது ஒரு திறமையில் வல்லுநராவது போன்றது என்பதை விட இது தம்பதியருக்கு இடையேயான அன்புறவு போல, அல்லது அது ஒரு பந்தாட்ட விiளாயாட்டு போல, அல்லது அது ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வது (சில நேரங்களில் சத்தமாகவும், சில நேரங்களில் மோசமாகவும் ஒலிப்பது) போன்றது ஆகும். இறைவேண்டல் என்பது ஓரிடத்திற்குச் சென்றடைய ஆற்றலுடன் துடுப்பு வலிப்பது போல் அல்லாமல் நீரில் மிதப்பது போன்றது ஆகும். இறைவேண்டல் என்பது பற்றிக்கொள்வது என்பதை விட விட்டுவிடுவது ஆகும். - ரிக் மல்லாய், சே.ச., ஒரு இயேசு சபையாளரின் வலைப்பதிவு.

‘நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக் கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு கைம்மாறு அளிப்பார்” . - மத்தேயு 6 : 5 - 6

உங்கள் இறைவேண்டல் அனுபவத்தை ஆழப்படுத்த இறைவனிடம் வேண்டுங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 16.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 15, 202102:19
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 15, ஒரு படபடப்பு கொள்பவரின் இறைவேண்டல்;

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 15, ஒரு படபடப்பு கொள்பவரின் இறைவேண்டல்;

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 15, ஒரு படபடப்பு கொள்பவரின் இறைவேண்டல்;

ஓ தூய ஆவியானவரே, ஆன்மாவின் அமைதியை உம்மில் எனக்குக் கொடும்

உம் அமைதியின் மென்மையுடன் என்னுள் இருக்கும் கொந்தளிப்பை அமைதிப்படுத்தும்

உம் மீது ஆழ்ந்த நம்பிக்கை அளித்து, என் படபடப்பைத் தணியச்செய்யும்.

உம் மன்னிப்பின் மகிழ்ச்சியால் என் பாவத்தின் அகக் காயங்களைக் குணமாக்கும்

உம் இருப்பைப் பற்றிய விழிப்புணர்வில் என் நம்பிக்கையைப் உறுதிப்படுத்தும்

உம் ஆற்றல் பற்றிய அறிவைத் தந்து, என் எதிர்நோக்கை உறுதிப்படுத்தும்

உம் அன்பின் மழையால் என்னுள் அன்பை முழுமையாக்கும்.

ஓ தூய ஆவியானவரே, உம் அழைப்பை இன்னும் தெளிவாகக் கேட்க,

தாராள உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றும் வண்ணம்

நீர் எனது ஒளி, ஆற்றல் மற்றும், வலிமையின் ஊற்றாக இருந்தருளும்

- வில்லியம் பிரவுனிங், படபடப்பு உள்ளவரின் இறைவேண்டல்;

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாய் உள்ளது - மத்தேயு 11: 28 – 30

இந்த இறைவேண்டலை நீங்களும் பயன்படுத்தி தேவைப்படும் ஒருவருக்குக் கொடுங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 15.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 14, 202102:27
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 14, வேறொரு கோட்பாடு நமக்குத் தேவையில்லை

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 14, வேறொரு கோட்பாடு நமக்குத் தேவையில்லை

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 14, வேறொரு கோட்பாடு நமக்குத் தேவையில்லை

பணியடிமைத்தனம் மற்றும் வேலை ஏய்ப்பு இவை இரண்டுமே தற்காலப் பெருந்தொற்றுகள். நாம் அன்றாடம் அலுவலகங்களில், சட்டசபைகளில், கடைத்தெருக்களில் காணலாம். மெய்யியலார்களும் அறிவுரையாளர்களும் பற்பல பணிஒழுக்கநெறியை ஒன்றன் பின் ஒன்றாக முன் வைக்கிறார்கள். ஒவ்வொன்றும் தோன்றி மறையும் நீர்க்குமிழிகளாக கடந்து போய்விடுகின்றன. இஞ்ஞாசியாருக்குத் தெரியும். – நாம் கற்றுக்கொள்ள வேண்டும். – பணியிடத்திற்கு என்ன தேவை என்பது மற்றொரு கோட்பாடு அல்ல, மற்றொரு அமைப்பு அல்ல. ஆனால் இயேசுவின் வாழும் உடனிருப்பு - பிரசன்னம். – மைக் அக்கிலினா மற்றும் கிரிஸ் ஸ்டுப்னா, ஐந்து எடுங்கள்: வேலையில் இஞ்ஞாசியாரின் தியானங்கள்

வாழும் கடவுளை எதிர்நோக்கி இருப்பதால்தான் நாம் வருந்தி உழைத்து வருகிறோம். அவரே எல்லோருக்கும் சிறப்பாக நம்பிக்கை கொண்டோருக்கும் மீட்பர். 1திமோ 4 : 10

உங்கள் பணித்தளத்தில் இயேசுவின் வாழும் பிரசன்னம் எப்படி உள்ளது?

--------- --------------- -------------

இன்றைய 14.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 13, 202101:59
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 13, கடவுள் நம்மோடு

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 13, கடவுள் நம்மோடு

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 13, கடவுள் நம்மோடு

உலகில் ஏன் இத்தனை துன்பங்கள் உள்ளன என்பதற்கு கிறிஸ்தவர்களான நமக்கு எந்த நிறைவு தரும் விளக்கமும் இல்லை. ஆனால், நம்மிடம் அதைவிடச் சிறந்தது ஒன்று உண்டு: நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளோம். துன்பத்தில் நம் கடவுள் எங்கே இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அப்போது கடவுள் நம்மோடு இருக்கிறார்: வதை முகாமின் தூக்கு மேடையில் யூதச் சிறுவனுடன், நோயில் இவான் இலிச்சுடன், துன்பத்தில் யோபுவுடன், ஆற்றலின்மை மற்றும் துன்பத்தில் பவுலுடன், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுடன் கடவுள் இருக்கிறார். நமது வாழ்வில் ஏற்படும் விளக்கமுடியாத விபத்துக்கள், உடைந்த உறவுகள், நொறுங்கிய இதயங்கள் என அனைத்திலும் நம்மோடு இருக்கிறார் - ரிச்சர்ட் ஹவுசர் சே.ச., துன்ப நேரங்களில் கடவுளைக் காணல்

நாங்கள் எல்லா சூழ்நிலையிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்கு சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து கொள்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு, எந்நேரமும், சாவின் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறோம் - 2கொரிந்தியர் 4 : 8 - 11

மாற்ற முடியாத ஒரு கடினமான சூழலை கண்முன் கொண்டு வாருங்கள். இயேசு உங்களோடு அந்தச் சூழலில் நிற்பதாகக் காட்சிப்படுத்திப் பாருங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 13.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 12, 202102:37
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 12, சின்னஞ் சிறியவற்றில் கடவுளை நோக்கி மனதை உயர்த்துதல்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 12, சின்னஞ் சிறியவற்றில் கடவுளை நோக்கி மனதை உயர்த்துதல்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 12, சின்னஞ் சிறியவற்றில் கடவுளை நோக்கி மனதை உயர்த்துதல்

புனித இஞ்ஞாசியார் செய்யும் காட்சி தியானம் பற்றி பேதுரோ ரிபடினேரா என்ற அவரது நெருங்கிய தோழர்களில் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: சிறியவற்றிலும் கூட புனித இனிகோ தமது மனதை கடவுளை நோக்கி - சிறியவற்றில் கூட பெரியவராக இருக்கும் கடவுளை நோக்கி - உயர்த்துவதை நாங்கள் அடிக்கடிப் பார்த்திருக்கிறோம். அவை, ஒரு சிறிய செடி, பசுமையான ஒரு இலை, ஒரு மலர், ஏதோ ஒரு வகைப் பழம், ஒரு சிறிய புழு அல்ல ஏதாவது ஒருவகை விலஙகாக இருக்கலாம். பார்க்கும் எல்லாவற்றிலும் உற்று நோக்கி, அவர் தம்மை விண்ணோக்கி உயர்த்தி, மிக ஆழ்ந்த எண்ணங்களை ஊடுருவி, ஒவ்வொரு சிறியவற்றிலிருந்தும் கோட்பாடுகளையும், ஆன்மீக வாழ்க்கைக்கு மிக உயர் உதவியான அறிவுரைகiளையும் கண்டுகொண்டார். - பேதுரோ ரிபடினேரா சே. ச, செயல்பாடுகளில் ஆழ்ந்த தியானம், ஜோசப் கான்வெல் சே.ச.,

ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும் அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும். - மத்தேயு 13 : 31 - 32

பழக்கப்பட்டவற்றின் நுணுக்கமான அமைப்புகள், சைகைகள், குரலின் ஒலி போன்ற சின்னஞ் சிறியவற்றில், இன்று கடவுளின் இருப்பை (பிரசன்னத்தை)க் கண்டு கொள்ள உறுதிகொள்ளுங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 12.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 11, 202102:30
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 11, நாம் ஏன் தளர்ச்சி அடைகிறோம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 11, நாம் ஏன் தளர்ச்சி அடைகிறோம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 11, நாம் ஏன் தளர்ச்சி அடைகிறோம்

புனித இனிகோ தனது கடிதம் ஒன்றில் தளர்ச்சி பற்றிய சிறந்த பகுப்பாய்வு ஒன்றைத் தருகிறார். நம்முடைய பழமையான எதிரியான அலகை, நாம் நுழைந்த வழியிலிருந்து நம்மைத் திசை திருப்புவதற்கு முடிந்த எல்லா வகைத் தடைகளையும் உருவாக்குவான். நமக்கு எரிச்லூட்ட அனைத்தையும் பயன்படுத்துவான். ஏன் என்று காரணம் தெரியாமலேயே நாம் சோர்வாக இருப்போம். நம்மால் பக்தியோடு வேண்டவோ, சிந்திக்கவோ, காட்சி தியானம் செய்யவோ, அல்லது கடவுளைச் சார்ந்தவை பற்றி உள்ளார்ந்த சுவை மற்றும் மகிழ்ச்சியுடன் கேட்கவோ பேசவோ முடியாமல் இருப்போம். இத்தகைய நேரங்களில், அவன் நம்மிடம் ஆறுதல் கூறுவது போல ‘ஆண்டவராகிய கடவுள் நம்மை முழுவதும் மறந்துவிட்டார், மேலும் நாம் செய்திருப்பவைகளும் செய்ய விரும்புபவைகளும் அனைத்தும் பயனற்றவை’ என்று தொடர்ந்து கூறுவான். இவ்வாறு அவன் நம்மைச் சோர்வுற்றுத் தளர்ந்த நிலைக்குக் கொண்டு வர கடினமாக முயல்வான். நாம் நமது பயம் மற்றும் வலுவின்மையின் காரணங்களைக் காண முடியும்: நமது துன்பங்களையே தொடர்ந்து கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதே ஆகும். - இக்னேஷியஸ் லொயோலா, புனித இக்னேஷியஸ் லொயோலாவின் கடிதங்கள், வில்லியம் து. யங், சே.ச.

ஆழ்ந்த தளர்ச்சி நிலையிலிருந்து மீண்டு, முன்னோக்கிச் செல்ல, நீண்ட நேரம் ஆகலாம். மேலும், இது கடினமான பல முடிச்சுக்களை அவிழ்க்க வேண்டியிருக்கலாம். ஆனால், இது நமது பார்வையை - மனதை நம்மை விட்டும், நமது துன்பங்களை விட்டும் விலக்குவதில் இருந்துதான் தொடங்குகிறது.

நீங்கள் தளர்ச்சியான ஏதாவது அனுபவம் இஞ்ஞாசியாரின் பகுப்பாய்வோடு பொருந்துகிறதா? இது எப்படி வேறுபடுகிறது? இதுகுறித்து இறைவனிடம் பேசுங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 11.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 10, 202102:42
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 10, தேர்ந்து தெளிதலின் இரு துருவங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 10, தேர்ந்து தெளிதலின் இரு துருவங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 10, தேர்ந்து தெளிதலின் இரு துருவங்கள்

கடவுள் நம்மைச் சரியான பாதைக்கு எவ்வாறு அழைக்கிறார்? இறையழைத்தல் தூண்டுதல்கள் இருவகைளில் வருகின்றன: 1. ஒருவரது இதயத்தில் உள்ளிருந்து வருகின்றன. 2. வாழும் புறச்சூழ்நிலைத் தேவைகளிலிருந்து வருகின்றன. இந்த உள்ளார்ந்த மற்றும் உலக இறையழைத்தல் முனைகளைத் தெளிந்து தேர்வதன் வழியாக ஒருவர் அதைப் பற்றி அறிகின்றார். கடவுளின் ஆவியானவர், மானிட உள்ஆழத்தில் செயல்பட்டு, நாம் பெற்ற கொடைகளையும், விருப்பங்களையும் பற்றிய விழிப்புணர்வு பெற உதவுகிறார். அதே ஆவியானவர், நமது அனுபவங்கள் வழியாக உலகிற்கு நம்மிடம் இருந்து என்ன தேவைப்படுகிறது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். அவர் நமது தனிப்பட்ட திறமைகளால் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளைக் கண்டுணர உதவுகிறார். இறையருள் இந்த இரு துருவங்களையும் ஒரு தீப்பொறி வளைவு போல் இணைக்கிறது. - வில்லியம் ஸ்போன் சே.ச., தேர்ந்தெடுக்கப்ட்ட பாதை, அமெரிக்கா

பிள்ளாய் நீ ஞானத்திற்குச் செவிசாய்த்து, மெய்யறிவில் உன் மனதை செலுத்தி, என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள். ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு. செல்வத்தை நாடுவதுபோல், ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு. அப்பொழுது ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய். - நீதிமொழிகள் 2 : 1 - 5

உலகின் எந்தப் பிரச்சனைகள் உங்கள் கனிவிரக்கம் நிறைந்த கவனத்தை ஈர்க்கின்றன? ஒருவேளை, அவை உங்கள் தனிப்பட்ட திறமைகளால் எதிர்கொண்டு நிறைவேற்றக் கூடியவைகளாக இருக்கலாமா?

--------- --------------- -------------

இன்றைய 10.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 09, 202103:01
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 09, அலகையோடு உரையாடல் ஒருபோதும் வேண்டாம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 09, அலகையோடு உரையாடல் ஒருபோதும் வேண்டாம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 09, அலகையோடு உரையாடல் ஒருபோதும் வேண்டாம்

இந்த உலகத்தின் இளவரசனுடன் எந்த உரையாடலும் இருக்கமுடியாது. இது தெளிவாக இருக்கட்டும்;. மனிதர்களாகி நம்மிடையே உரையாடல் வேண்டும். இது அமைதி உறவுக்கு மிகவும் இன்றியமையாதது. உரையாடல் ஒரு மனநிலை. இது நாம் ஒருவர்க்கொருவர் புரிந்துகொள்ளவும் உணரவும் இந்த உரையாடல் தேவையானது. எனவே, என்றென்றும் வேண்டும். இது உதவி செய்வதிலிருந்து, அன்பிலிருந்து வருகிறது. ஆனால், இவ்வுலகத்தின் இளவரசனுடன் உரையாடல் ஒருபோதும் சாத்தியமில்லை. அவன் இயேசுவுக்குச் செய்ததுபோல் நமக்கும் செய்வான். ‘இங்கே, இதை மட்டும் பாருஙகள்”, ‘இந்தச் சின்னஞ் சிறிய ஏமாற்று வேலை மட்டும் செய்யுங்கள், இது மிகச் சிறியது, உண்மையில் இது ஒரு பொருட்டே அல்ல” என்று அவன் நம்மிடம் கூறுவான். இவ்வாறு அவன் நம் பாதையை விட்டுச் சற்றே விலக்கி விடுவான். இது ஒரு புனிதமான பொய். இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள், இதில் ஒரு குற்றமும் இல்லை என்று சொல்லிச் சொல்லி சிறிது சிறிதாகத் தொடங்குகிறது. நாம் ஒவ்வொரு முறையும் முடியாது என்போம் என்றால், அவன் சொல்வான்: ‘ஆனால் நீங்கள் நல்லவர், மிகவும் நல்லவர். எனவே இதைச் செய்வது உங்களுக்குப் பொருந்தாது, இதை விட்டுவிடுங்கள்’ என்று முகஸ்துதி பாடி நம் எதிர்ப்புகளை மென்மையாக்குவான். நாம் மயங்கி, பொறியில் சிக்கி விடுகிறோம். –திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கான் வானொலி

எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள். அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும் - யாக்கோபு 4 :7

திருத்தந்தையின் வார்த்தைகளை எண்ணிப் பாருங்கள். அவை உண்மையானதாக ஒலிக்கின்றதா? அவரது எச்சரிக்கை எப்படி உங்கள் அனுபவத்தோடு இணைகிறது?

--------- --------------- -------------

இன்றைய 09.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 08, 202102:37
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 08, ஜெரார்டு மேன்லி ஹாப்கின்ஸ் சே.ச.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 08, ஜெரார்டு மேன்லி ஹாப்கின்ஸ் சே.ச.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 08, ஜெரார்டு மேன்லி ஹாப்கின்ஸ் சே.ச.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் முன்னனிக் கவிஞர்களில் ஒருவரான ஜெரார்டு மேன்லி ஹாப்கின்ஸ் சே.ச., 1889 ஆம் ஆண்டு இதே நாளில் டப்ளினில் இறந்தார். அவரது கவிதைகள் வியக்கத்தக்கவை, புதுமையானவை. பாரம்பரியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டு வந்த காலத்தில் புதிய வார்த்தை வடிவமைப்புக் கொண்டிருந்தன. ஹாப்கின்ஸ் பல நோய்களாலும் மனஅழுத்தத்தாலும் இன்னலுற்றார். இதனால் வாழ்க்கை முழுதும் போராடினார். இருப்பினும் அவரது 44ம் வயதில் இறந்த போது அவர், ‘நான் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறேன், நான் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறேன், என் வாழ்க்கையை நான் அன்பு செய்தேன்” என்று கூறினார்.

ஹாப்கின் அவர்களின் பெரும்பாலான கவிதைகள் ‘கடவுளின் அரும் பெரும் மாட்சி;” என்ற கவிதையில் வடிக்கப்பட்டுள்ளது போல, பருப்பொருள் உலகில் இறை இருப்பை - கடவுளின் தெய்வீக பிரசன்னத்தை உணர்த்துவதாக உள்ளன. கடவுளின் அரும் பெரும் மாட்சி என்ற கவிதை இதோ!

கடவுளின் மகத்துவத்தால் உலகம் நிறைந்திருக்கிறது.

அது ஒளியில் அசையும் உலோகம் போல நெருப்பு நாக்கினை பாய்ச்சி ஒளிர்கிறது

அரைத்துப் பிழிந்தால் கசியும் எண்ணெய் போல அது தன் பெருமையைச் சேர்க்கிறது.

மனிதர்கள் ஏன் அவரது செங்கோண்மையைக் கண்டு கொள்ளவில்லை.

தலைமுறைகள் நடந்திருக்கின்றன நடந்திருக்கின்றன நடந்திருக்கின்றன

எல்லாமே வியாபரத் தேடல், மானிட வீணான உழைப்பு வியர்வையால் பூசப்பட்டுள்ளது

இயற்கைச் சீரழிப்பு, மனிதனின் அழுக்கு நாற்றம் எங்கும்

மண் இப்போது வெறுமையாக உள்ளது. இருந்த வளங்களை உணர முடியவில்லை

இருப்பினும் ஒருபோதும் இயற்கை செலவாகிடுவதில்லை

நெருக்கமான புத்துணர்ச்சிகள் பொருள்களின் ஆழத்தில் வாழ்கிறது

இருளான மேற்கிலிருந்து இறுதி ஒளியும் மறைந்தாலும்

ஓ காலைப்பொழுதே, பொன் சிவந்த கீழ்வானத்தில், எழுகிறது

ஏனெனில் தூய ஆவியார் வளையத்துக்கு மேல்

இதமான மார்புடனும், ஒளிநிறை இறக்கைகளுடன் உலகை அடைகாக்கிறார்

- எரிதணலில் இதயங்கள், மைக்கேல் ஹார்ட்டர் சே. ச.

கவிதையை மீண்டும் மெதுவாகப் படியுங்கள். என்ன நினைவுக்கு வருகிறது?

--------- --------------- -------------

இன்றைய 08.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 07, 202103:42
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 07, உலகம் ஒரு புனித இடம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 07, உலகம் ஒரு புனித இடம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 07, உலகம் ஒரு புனித இடம்

பியரே தெயார் தெ ஷார்டின் சே.ச., இறைமை யுகம் - தெய்வீகக் காலம் என்ற தமது நூலில் எழுதுகிறார்.; படைக்கப்பட்டவை அனைத்தின் வழியாக இறைமை நம்மைப் பேராற்றலுடன் தொடுகிறது; நம்மை ஊடுருவுகிறது; நம்மை உருவாக்குகிறது. இதற்கு எவ்வகை விதிவிலக்கும் இல்லை. ஆனால், நாம் இறைமையை மிகத் தொலைதூரத்தில் உள்ளது போலவும், நம்மால் அதை அடைய முடியாதது போலவும் எண்ணிக்கொள்கிறோம், உண்மையாகவே நாம் அதன் எரிதணல் படுகையில் மூழ்கி வாழ்கிறோம். (இன் எயொ விவிமுஸ் - அவரில் நாம் வாழ்கிறோம்). யாக்கோபு தனது கனவிலிருந்து விழித்தெழுந்து கூறியதைப்போல், இந்த ஆழமான தொட்டு உணர முடிந்த உலகிற்குள் நாம் அசுத்தமான இடத்திற்குரிய சலிப்பு மற்றும் வன்முறைகளை கொண்டு வந்திருக்கிறோம்; உண்மையில் இந்த உலகம் புனிதமானது. அதை நாம் அறியவில்லை. வெனித்தே அடொரெமுஸ் - வாருங்கள் ஆராதிப்போம்! -

எல்லாம் இருளாக, ஏமாற்றமாக, தோல்வியாகத் தோன்றும் போது இதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ‘கடவுள் தொலைவில் இல்லை. இருள் என்பது ஒரு வெறும் தோற்றம் தான். கடவுள் இங்கு இருக்;கிறார். நாம் அவரில் வாழ்கிறோம்.”

கடவுளே நாங்கள் வாழும் உமது உலகின் மாட்சியைக் காண இன்று என் கண்களைத் திறந்துவிடும்.

--------- --------------- -------------

இன்றைய 07.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 06, 202102:08
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 06, நம் வாழ்க்கையில் சிலுவை

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 06, நம் வாழ்க்கையில் சிலுவை

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 06, நம் வாழ்க்கையில் சிலுவை

மனித வாழ்க்கை ஏராளமான துன்பங்களையும் எல்லாம் பயனற்றவை என்ற உணர்வையும் கொடுக்கிறது. இவை எல்லாவற்றையும் நாம் வெறும் வீரத்தால் மட்டும் கையாள முடியாது. கிறிஸ்தவகளாகிய நாம் நம் வாழ்வில் நம் ஆண்டவர்க்காகத் மீட்கும் ஆற்றலுடைய ஆண்டவரின் கையளிப்பினைத் தொடர அழைக்கப்பட்டுள்ளோம். அதுவே, நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பின் செயல் ஆகும். புதிய உடன்படிக்கையின் மானிடர் என்பவர் கிறிஸ்து ‘மேலும் படவேண்டிய வேதனையைத்’ தனது உடலில் ஏற்கவேண்டும் (கொலோ 1 : 24). கிறிஸ்துவின் இறப்புத் தழும்புகளை, நாம் தேர்ந்தெடுக்கப்பட்டதின் அடையாளமாக நமது உடலில் சுமக்கிறோம் என்று சொல்ல முடியுமா? – கார்ல் ரானர் சே.ச., ஆன்மீகப் பயிற்சிகள்.

இப்பொழுது உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழுஞானத்தோடு கற்பித்து வருகிறோம். – கொலோசையர் 1: 24, 28

நீங்கள் கிறிஸ்து மேலும் படவேண்டிய வேதனைகளை உங்கள் வாழ்வில் தொடர அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்த இறைவாக்கை எண்ணிப் பாருங்கள். இதை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? இது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பத்தைப் பார்க்கும் விதத்தை மாற்றி இருக்கிறதா?

--------- --------------- -------------

இன்றைய 06.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 05, 202102:20
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 05 தங்கி நிலைத்திருத்தலும் நினைத்துப் பார்த்தலும்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 05 தங்கி நிலைத்திருத்தலும் நினைத்துப் பார்த்தலும்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 05 தங்கி நிலைத்திருத்தலும் நினைத்துப் பார்த்தலும்

கடவுளின் தொடுதல் ஒரு கணப் பொழுதில் நிகழ்ந்தாலும், அது நமக்குள் என்றென்றும் வாழ்கிறது. பெற்ற கடவுளின் அனுபவத்தைப் பின்சென்று நினைத்துப் பார்த்து அதில் நிலைத்திருப்பதன் வழியாக அது நமக்குள் தொடர்ந்து கனிதரச் செய்யலாம். இந்த நினைவு கூர்தல், நிலைத்திருத்தல் மற்றும் மீண்டும் வாழ்தல் என்ற செயல்பாடுகள் வழியாக நாம் கடவுளுக்கு நம்மை நாமே திறந்து வைக்கிறோம். கடவுளை நமக்குள் செயல்படவும், இதயங்களைத் தொடவும் அனுமதிக்கிறோம். அதனால் நமது இறையனுபவங்ளை நமக்குள் ஆழமாக அலைபரப்பி நாம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் - மவுரின் கான்ராய் , தெளிந்து தேர்ந்திடும் இதயம்

அன்றாட ஆன்ம ஆய்வு என்ன செய்கிறது என்பதற்கு இது ஒரு அழகான விளக்கம். இது கடவுள் மீண்டும் நம் இதயங்களைத் தொட அனுமதிக்கிறது.

கடவுள் உங்களுக்குப் பெரிதாக அருள்வழங்கிய நேரங்களை எண்ணிப்பாருங்கள். விரிவாக ஆழமாக அவற்றை நினைத்துப்பாருங்கள். இந்த நினைவுகளில் நிலைத்திருந்து உங்களுக்கான கடவுள் நன்மைத் தன்மைமையைச் சுவைத்துப் பாருங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 05.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 04, 202101:45
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 04, கடவுள் இல்லாமல் இல்லை

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 04, கடவுள் இல்லாமல் இல்லை

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 04, கடவுள் இல்லாமல் இல்லை

யோவான் தே பொலாங்கோ என்பவர் இஞ்ஞாசியாரின் செயலர். அவர் செயல்பாடுகளில் ஆழ்ந்த தியானம் பற்றி இவ்வாறு கூறுகிறார். “சில சமயங்களில் கடவுளை அவர் இல்லாதது போலத் தேடுகிறோம். ஆனால் அது உண்மையல்ல. அவர் நம்மிலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் மிகவே இருக்கிறார். கட்டளைகள், மற்றும் நமது சட்ட அமைப்புகளின் படி நாம் ஆற்ற வேண்டிய செயல்கள் ஆகியவற்றில் சிறப்பாக இருந்து தமது இருத்தல், ஒளி, மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் வெளிப்பாடுகளை அருள்கிறார்.

பொலாங்கோவிற்கு இஞ்ஞாசியாரின் மனதைப் பற்றி; மற்ற எவரையும் விட நன்கு தெரியும். இங்கு இஞ்ஞாசியாரின் சாராம்சமிக்க கருத்துக்களில் ஒன்றை வெளிப்படுத்துகிறார். அது கடவுள் இந்த உலகத்தில் இருக்கிறார் அவர் இல்லாமல் இல்லை, கடவுளின் இருத்தலை நமது அன்றாட வாழ்க்கையில் கண்டுகொள்ளலாம் என்பதாகும்.

நீங்கள் முன்னால் கடவுளைப் பார்த்திராத ஒரு இடத்தில், சூழலில் இன்று கடவுளைப் பாருங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 04.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 03, 202101:33
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 03, தொலைந்துபோன குழந்தைகள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 03, தொலைந்துபோன குழந்தைகள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 03, தொலைந்துபோன குழந்தைகள்

எல்லா தேவையிலும் ஒருவருக்கொருவர் நிறை செய்து மகிழ்வாக இருக்கும் தம்பதியினரை எடுத்துக்கொள்வோம். தாரள மனப்பான்மையையும், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் ஆசையையும் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள் அல்லது தத்தெடுக்கிறார்கள். அன்றிலிருந்து, அவர்களது வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகிறது. இப்போது அவர்கள் வலுக்குறைந்தவர்கள் ஆகின்றனர். அவர்களின் மகிழ்ச்சி, அந்தக் குழந்தைகளின் நலனில் பொதிந்துவிடுகிறது. நடக்கும் எதுவும் ஒரே மாதிரி இருக்காது.

பிள்ளைகள் வளர்ந்தபிறகு, பெற்றோரை விட்டுத் தனியாக இருக்க, தங்கள் வழியில் செல்ல ஆரம்பிக்கும்போது, அவர்களின் மனதைப் பாதிக்கும். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கெஞ்சுவார்கள், தங்களைத் தாழ்த்திக்கொள்வார்கள். அளவுக்கு மீறித் தியாகம் செய்வார்கள். இது அவர்கள் வீடு, தாங்கள் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது என்பதைப் புரியவைக்க அவர்கள் தங்களையே இழப்பார்கள்.

இத்தம்பதிகளின் வாழ்வு மீட்பைப் பற்றிய உள்ளொளி தருகிறது. கடவுள் தமது தொலைந்து போன பிள்ளைகளை மீட்டெடுக்கத் தம்மை வெறுமையாக்கினார், இழந்தார் என்பதன் மறைபொருளை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் இதைத்தான் தந்தை விரும்புகிறார். இதுதான் அவரது காயங்களுக்கு மருந்து ஆகும். கடவுள் ஒருபோதும் கலப்பு இல்லாத இறைமையில் மட்டும் இல்லை. மாறாக அவர் இதயத்தில் மனிதம் கொண்ட கடவுள் -ரூத் பரோஸ் கார்மல் துறவி. இறைவேண்டலின் சாரம்.

நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார். உரோமையர் 5 : 8

உங்களை கதையில் வரும் தம்பதியினரைப் போல் பார்க்கிறீர்களா? அல்லது தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் குழந்தைகளைப் போல் பார்க்கிறீர்களா? ஏன்?

--------- --------------- -------------

இன்றைய 03.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 03, 202102:50
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 02, அந்தோணி டிமெல்லோ சே.ச.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 02, அந்தோணி டிமெல்லோ சே.ச.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 02, அந்தோணி டிமெல்லோ சே.ச.

அந்தோணி டிமெல்லோ சே.ச., ஒரு உளவியலார் மற்றும் ஆன்மிக வழிகாட்டி. இவர் 1987ஆம் ஆண்டு இந்த நாளில் இறையடி சேர்ந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற ஆன்மிக எழுத்தாளர். அவரது உளவியல் அனுபவத்தில் எழுதிய புத்தகங்களும், தனது தாய் நாடான இந்தியாவின் ஆன்மீகத்திலிருந்து பெற்றுக்கொண்ட உள்ளொளியுமே இதற்குக் காரணம். அவருடைய நூல்களில் மிகவும் புகழ்பெற்றது சாதனா – கடவுளிடம் செல்லும் வழி. பின்வருபவை அவர் கூறியவைகள்

- இதோ கடவுள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்… உங்களைப் பார்த்துப் புன்னகைக்கிறார்

- நீங்கள் விலக்கி ஒதுக்கி விடவிரும்புவதும், ஏங்கித் தவித்து எதிர்பார்த்திருப்பதும் - இந்த இரண்டும் உங்களுக்குள் உள்ளது

- கடவுள் உங்களை அன்பு செய்ய வேண்டும் என்பதற்காக நீங்கள் மாற வேண்டியதில்லை

- உங்கள் பாவங்களுக்காக நன்றியோடு இருங்கள். அவைகள் அருள் தாங்கியுள்ளன.

- பொன்னான இறந்தகாலத்திற்கு விடை கொடுங்கள். இல்லையேல் உங்கள் இதயம் நிகழ் காலத்தை ஒருபோதும் அன்பு செய்யக் கற்றுக்கொள்வதில்லை.

- ஆகட்டும் என்பதில் மட்டும் தான் அமைதியைக் கண்டடைய முடியும்.

இதில் ஏதாவது ஒன்றை எடுத்து தியானிப்போம்.

--------- --------------- -------------

இன்றைய 02.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

Jun 01, 202102:06
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 01, இயேசுவின் நண்பர்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், ஜுன் 01, இயேசுவின் நண்பர்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்  ஜுன் 01,

இயேசுவின் நண்பர்கள் (சக தோழர்கள்)

இயேசு சபையாளராக இருப்பது என்றால் என்ன? இஞ்ஞாசியார் கன்னி மரியாவிடம், தம்மை ‘அவரது மகனோடு வைக்க வேண்டும்’ என்று இரந்து மன்றாடினார். பின்பு தந்தை கடவுளே சிலுவை சுமந்துகொண்டிருக்கும் தம் மகனிடம் இந்தத் திருப்பயணியை அவர் தம் தோழமையில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வதைக் காட்சியில் பார்த்தார். இயேசு சபையாளராக இருப்பது என்பது, இத்தகைய அனுபவம் கொண்ட இஞ்ஞாசியாரைப் போல, தான் ஒரு பாவியாயினும் இயேசுவின் தோழராக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று அறிவது ஆகும்.

இன்றைய சூழலில் இயேசுவின் நண்பர்கள் என்பதன் பொருள் என்ன? சிலுவை விருதுக் கொடியின் கீழ், தற்கால மக்களின் போராட்டங்களில் இணைத்துக்கொள்வது ஆகும். இந்தப் போராட்டம் என்பது நம்பிக்கைக்கான போராட்டத்தையும், நீதிக்கான போராட்டத்தையும் உள்ளடக்கியது. - இயேசு சபையின் 32வது பொதுஅமர்வு.

கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள். அவரில் வேரூன்றியவர்களாகவும், அவர்மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்றி மிக்கவர்களாகத் திகழுங்கள். - கொலோசையர் 2 : 6 - 7

என்னென்ன சூழ்நிலைகளில் உங்களை இயேசுவின் நண்பர்களாக உணர்கிறீர்கள்? இப்படி உணர உதவுவது என்ன?

------ ------------ -------------

இன்றைய 01.06.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 31, 202102:09
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 31 கடவுள் விரும்புவதை விரும்ப…

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 31 கடவுள் விரும்புவதை விரும்ப…

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 31 கடவுள் விரும்புவதை விரும்ப…

இவர்கள் தங்கள் பணத்தின் மேலுள்ள பற்றுதலை உதறித் தள்ளிவிட விரும்புகின்றனர். ஆனால் அதை உதறித் தள்ளுவதும் அல்லது வைத்துக்கொள்வதும் அவர்களது தன் விருப்பமாயிராது. அவர்கள் விரும்புவதும் விரும்பாததும் கடவுள் அவர்களது உள்ளத்தில் உருவாக்கும் பற்றுதலைப் பொருத்தும், இறைமகத்துவத்தின் பணிக்கும் மாட்சிக்கும் எது அதிகப் பயனுள்ளதாக அவர்களுக்குத் தோன்றுகிறது என்பதைப் பொருத்தும் இருக்கும். அதுவரை அப்பொருள் மீது தங்களுக்கு எவ்விதப் பற்றுதலும் இல்லாதது போல் நடக்க முயல்வர். அந்தப் பொருளையோ வேறு எந்தப் பொருளையோ, நமது ஆண்டவராகிய இறைவனின் ஊழியத்திற்காகத் தவிர, வேறு எந்தக் காரணத்திற்காகவும் விரும்பாதிருக்க முழு முயற்சி செய்வர். இவ்வாறு எந்தப் பொருளையும் அவர்கள் வைத்துக்கொள்வதற்கோ விட்டு விடுவதற்கோ ஒரே காரணம், நமது ஆண்டவராகிய இறைவனின் அதிமிகப் பணியே ஆகும். - ஆன்மீகப் பயிற்சிகள் 155

ஆன்மீகப் பயிற்சிகளின் இந்த தியானம் எதிர்பாராத செல்வத்தைப் பயன்படுத்தும் மூன்று வகை மக்கள் மற்றும் அவர்கள் தத்தம் பற்றுகளால் அதனைக் கையாளும் வழிகளைக் குறித்து அமைந்துள்ளது. முதல் குழு கடவுளின் நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்துவதைப் பற்றி பேசுகிறது, ஆனால் அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை. இரண்டாவது குழு அதைப் பற்றிக் கடவுளிடம் பேரம் பேசுகிறது. மூன்றாவது ஒரு குழு உள்ளது – அது கடவுள் விரும்புவதை மட்டுமே விரும்புபவர்களைக் கொண்ட குழு ஆகும்.

உங்கள் பற்றுகள் சுதந்திரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கவனியுங்கள். அவற்றால் நீங்கள் எங்கு கட்டுப்படுத்தப்படுகிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்?

--------- --------------- -------------

இன்றைய 31.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

rss Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 30, 202102:42
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 30 நாம் என்ன நல்லது செய்திருக்கிறோம் என்று பார்க்க கடவுள் உற்று நோக்குகிறார்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 30 நாம் என்ன நல்லது செய்திருக்கிறோம் என்று பார்க்க கடவுள் உற்று நோக்குகிறார்

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 30 நாம் என்ன நல்லது செய்திருக்கிறோம் என்று பார்க்க கடவுள் உற்று நோக்குகிறார்

தந்தை இனிகோ கூறுகிறார், உலக மானிடரை விட வேறுபட்டு கடவுள் நம்மை நடத்துகிறார். மனிதர்கள் நம்மில் கெட்ட அல்லது குறையானவற்றைக் கண்டுபிடிக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் அதைக் கவனித்து மனதில் வைத்துக்கொண்டு அவற்றை நமக்கு எதிராக நிறுத்துகிறார்கள். ஆனால், கடவுள், நாம் என்ன நன்மை செய்திருக்கிறோம் என்று அறியப் பார்க்கிறார். மேலும் அவர் நமது குற்றங்களுக்கு ஒரு கண்ணை மூடிக்கொள்கிறார். - ஜெரோம் நடால், எஸ்.ஜே., இக்னேஷியஸ் ஆஃப் லயோலா: தி பில்கிரிம் செயிண்ட், ஜே. இக்னாசியோ டெல்லீச்சியா இடிகோராஸ்

இனிகோ ஆன்மீக புரிதுல், ‘கடவுள் எப்படிப்பட்டவர்’ என்ற அவரது பார்வையில் இருந்து வருகிறது. அவர் கடவுளை கொடுப்பவராகக் கருதினார், ‘சூரியனின் கதிர்கள் சூரியனில் இருந்து இறங்குவது போல’ நமக்குக் கொடைகளை வழங்குகிறார்.

இனிகோ புரிந்து கொண்ட கடவுளை நாம் பின்பற்றுவது எப்படி? அதாவது, பிறர் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது, அவர்களது குறைபாடுகளுக்கு கண்ணை மூடிக்கொள்வது எப்படி?

--------- --------------- -------------

இன்றைய 30.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 29, 202101:42
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 29 உங்கள் ஆன்மாவில் உள்ள முறையற்றவைகளை வெறுக்கவும்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 29 உங்கள் ஆன்மாவில் உள்ள முறையற்றவைகளை வெறுக்கவும்

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்,  மே 29 உங்கள் ஆன்மாவில் உள்ள முறையற்றவைகளை வெறுக்கவும்

நீங்கள் அமைதி என்று நினைப்பதை அன்பு செய்வதற்குப் பதிலாக, பிறரை அன்பு செய்யுங்கள்; அனைத்திற்கும் மேலாக கடவுளை அன்பு செய்யுங்கள். போர் வெறியர்கள் என்று நீங்கள் கருதுபவர்களை வெறுப்பதற்குப் பதிலாக, உங்கள் சொந்த ஆன்மாவில் உள்ள போருக்குக் காரணமான பேராசை மற்றும் சீர்கேட்டை வெறுத்து ஒதுக்குங்கள். நீங்கள் அமைதியை விரும்புகிறீர்கள் என்றால், பிறரில் இருப்பவற்றை விட்டுவிட்டு, உங்களுக்குள் இருக்கும் அநீதி, கொடுங்கோன்மை மற்றும் பேராசையை வெறுத்திடுங்கள், - தாமஸ் மெர்டன், அமைதிக்கான பேரார்வம்: போர் மற்றும் அகிம்சை பற்றிய பிரதிபலிப்புகள்

நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? - லூக் 6:41

திருத்தம் தேவைப்படும் உங்கள் இதயத்தில் உள்ள பேராசை, தன்னலம் போன்ற சீர்கேடுகளை உங்களுக்குக் காட்டுமாறு தூய ஆவியாரைக் வேண்டுங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 29.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 28, 202101:34
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 28 பொறுமையாக உங்கள் காரணங்களைக் கொடுங்கள்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 28 பொறுமையாக உங்கள் காரணங்களைக் கொடுங்கள்

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 28 பொறுமையாக உங்கள் காரணங்களைக் கொடுங்கள்

நாம் யாருடனும் பிடிவாதமாக வாக்குவாதம் செய்யக்கூடாது. பேச்சின் நோக்கம் நம் கையே ஓங்கி இருக்க வேண்டும் என்பதல்ல, மாறாக, நம் அடுத்திருப்போர் பிழையை விடுத்து உண்மையை அறிய வேண்டும் என்பதாகும். எனவே, பொறுமையாக, உங்கள் காரணங்களைக் கூறுங்கள், — லயோலாவின் செயின்ட் இக்னேஷியஸின் கடிதங்கள், வில்லியம் ஜே. யங், எஸ்.ஜே.

நாம் ஒன்றைப் பற்றிக் கருத்துப் பகிரும் போது ‘நாங்கள் வெல்ல வேண்டும்’ என்ற தற்பெருமை தலைதூக்குவதைப் பற்றிப் பேசுகிறார்.

கருத்துப் பகிர்வு போன்றவற்றில், உங்கள் கை ஓங்கி இருக்க வேண்டும் என்று நீங்கள் எங்கு, எப்போது, எப்படி இயக்கப்படுகிறீர்கள்?

--------- --------------- -------------

இன்றைய 28.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள்,  

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 27, 202101:20
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 27 நாம் விரும்புவதை வைத்திருக்க முடியாத பொழுது

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 27 நாம் விரும்புவதை வைத்திருக்க முடியாத பொழுது

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 27 நாம் விரும்புவதை வைத்திருக்க முடியாத பொழுது

இது மனித இருப்பில் ஒரு பதற்றம்: - இப்போது மற்றும் இன்னும் இல்லை, தற்போதைய தருணத்தின் யதார்த்தத்தையும் முற்றிலும் சாத்தியமற்றதாகத் தோன்றும் கடவுள் நம் இதயங்களில் வைக்க விரும்பும் ஆசைகளையும் புரிந்துகொள்வது மிகப் பெரிய பதற்றமான நேரம். புனித இனிகோ, இந்தப் பதற்றத்தை கையாள்வதற்கான வழிமுறை ஒன்று கூறுகிறார். இறைவேண்டலில் மனதைச் செலுத்தி, தற்போதைய யதார்த்தத்தையும் எதிர்கால விருப்பத்தையும் அறிந்து கொள்தல். அவற்றை அனைத்துக் திசைகளிலும் கோணங்களிலும் இருந்து பாருங்கள் - அவற்றுள் கடவுளின் அழைப்பைத் தேடுங்கள். இவை அனைத்திலும் கிறிஸ்து நமக்கு அருகில் அமர்ந்து, ‘அவர் இங்கேயே இருக்கிறார், எதிர்காலம் என்னவாக இருந்தாலும் இங்கே இருப்பார’ என்ற பார்வையை நாம் பெறத் தீவிரமாக முயற்சி செய்கிறார். என்று பாருங்கள். - லிசா கெல்லி, இனிகோ வாழ்வு வலைப்பதிவு

இயேசு கிறிஸ்து உங்களுள் செயலாற்றுகிறார் என உணராமலா இருக்கிறீர்கள்? —2 கொரிந்தியர் 13: 5

ஆண்டவரே, வாழ்க்கையின் சூழ்நிலைகளை வெளியிலிருந்து கருத்திற்கொள்ள எனக்கு அருள் தாரும். அவற்றை எல்லா கோணங்களிலிருந்தும் பார்க்கவும் அவற்றுள் உமது அழைப்பைத் தேடவும் உம் அருள் தாரும்.

--------- --------------- -------------

இன்றைய 27.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 26, 202102:15
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 26 இது தான் தருணம்!

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 26 இது தான் தருணம்!

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 26 இது தான் தருணம்!

மற்றவர்களுக்காக நாம் கிறிஸ்துவாக இருக்கக்கூடிய தருணங்கள் எத்தனை! இதோ இப்போது தான் அந்தப் பொன்னான நேரம். தாமதிக்க வேண்டாம். மணமகன் வருகிறார். விளக்குத் திரிகளைக் கிள்ளி விடுங்கள். இயேசுவின் தொடுதலுக்காகக் காத்திருப்பவர்கள் ஒருவேளை உங்களுக்கு அருகிலேயே இருக்கலாம். ஒருவேளை இப்போது உங்கள் மின்னஞ்சலைப் படிக்கலாம், ஒருவேளை உங்களுக்கு அடுத்து உறங்கிக் கொண்டிருக்கலாம். ஒருவேளை உங்களுடைய அடுத்த அறையில், ஒருவேளை வகுப்பறையின் மறுமுனையில், ஒருவேளை ஆடுகளத்தில் இருக்கலாம். அங்கே நீங்கள் மட்டும் தான் அவருக்கு கிறிஸ்துவாக அங்கே இருக்கிறீர்கள். உங்களது மட்டுமே கிறிஸ்துவின் கைகள், ஒரே குரல், ஒரே புன்னகை, ஒரே அரவணைப்பு. அவர் தேவையில் இருக்கும் தம் அன்புக்குரியவரைத் தொடுவதற்குப் பயன்படுத்தலாம். விழிப்பாய் இருங்கள்! இந்த நொடிப் பொழுது இனி மீண்டும் ஒருபோதும் வர வேண்டாம். கடவுள் உங்களிடம் என்று நம்புங்கள், அவர் செயல்படுவார். - டிம் முல்தூன், டாட் மாஜிஸ் வலைப்பதிவு

“… மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாக இருந்தவர்கள் அவருடன் திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே, விழிப்பாயிருங்கள்: ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.” மத்தேயு 25: 10-13

இன்று, கிறிஸ்து தொட வேண்டியவரைத் தேடுங்கள்!

--------- --------------- -------------

இன்றைய 26.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 25, 202102:29
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 25 ஆன்மிகப் பயிற்சிகளின் மகுடம்

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 25 ஆன்மிகப் பயிற்சிகளின் மகுடம்

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 25 ஆன்மிகப் பயிற்சிகளின் மகுடம்

தன் இறப்பு ஆன்மீகப் பயிற்சிகளின் முடிசூட்டு மகிமை ஆகும். தன்னையே வெல்வதை நோக்கமாகக் கொண்ட ஆன்மிகப் பயிற்சிகளின் வெற்றி ஆகும். ஒருவர் தன் அன்பு, தன் விருப்பம் மற்றும் தன் நலன் ஆகியவற்றை வென்று கிறிஸ்துவின் விருப்பத்திலும் ஆர்வத்திலும் அன்பிலும் ஒன்றிணைவது ஆகும். இதனை ஒரு சில தருணங்களுக்கு, சில மணி நேரங்களுக்கு, சில நாட்களுக்கு வாழும் போது நாம் செயலில் காட்சியாளர்கள் ஆகிறோம். எனவே இது உண்மையில் ஒரு இறை ஒன்றிப்பு (அனுபூதி) அருள். இதை நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள முடியாது, ஆனால் கடவுளை அன்பு செய்வதன் வழியாக அதற்காக நாம் ஆயத்தமாகலாம். - அந்தோனி டி மெல்லோ, சேச., எல்லா இடங்களிலும் கடவுளைத் தேடுங்கள்

முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே. நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். உன்னை நீ ஒரு ஞானி என்று எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு. அப்பொழுது உன் உடல், நலம் பெறும்; உன் எலும்புகள் உரம் பெறும். நீதிமொழிகள் 3: 5–8

ஆண்டவரே, நான் உம் மனதை அறிய விரும்புகிறேன். அதை எனக்குக் காட்டும். அதை அறியவும் அன்பு செய்யவும் எனக்கு அருள் தாரும்.

--------- --------------- -------------

இன்றைய 25.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 24, 202102:13
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 24 நமது வழித்தலைவி – நமது வழி அன்னை - வழித்துணை நாயகி – வழித்துணை அன்னை

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 24 நமது வழித்தலைவி – நமது வழி அன்னை - வழித்துணை நாயகி – வழித்துணை அன்னை

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 24 நமது வழித்தலைவி – நமது வழி அன்னை - வழித்துணை நாயகி – வழித்துணை அன்னை

இன்று இயேசு அவையினரின் பாதுகாவலரான ‘சாங்தா மரியா தெல ஸ்ட்ராதா’ என்னும் ‘நமது வழியின் தலைவி’ விழாவைக் கொண்டாடுகிறோம். இனிகோவும் அவரது இயேசு அவையினரும் மரியாவைப் பயணிகளின் பாதுகாவலராகப் போற்றி வணங்கும் நமது வழித் தலைவி பற்றன்பு முயற்சியால் ஈர்க்கப்பட்டனர். ஏனென்றால் அவர்கள் தங்களைப் பயணிகளாகவும் வழிப்போக்கர்களாகவும் கண்டார்கள், கிறிஸ்துவுக்குப் பணி செய்ய எங்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். உரோமில் உள்ள ‘நமது வழியின் தலைவி’ கோயில் தான் இயேசு அவைக்குக் கொடுக்கப்பட்ட முதல் கோயில் ஆகும். தற்போதைய இயேசு சபை தலைமைத் தாய்க் கோவிலான ஜெசூ பெருங்கோவில் 1568 இல் அந்த இடத்தில் கட்டப்பட்டது.

தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்கு நீர் போகும் இடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும், உண்மையும், வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்;. ” – யோவான் 14: 5–7

உங்கள் ஆன்மீக பயணத்தை நினைவுகூருங்கள். நீங்கள் கிறிஸ்துவுடன் பயணித்த பாதையை நினைத்துப் பாருங்கள். உங்கள் நினைவுக்கு வருவது என்ன? அந்த நினைவுகளுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.

--------- --------------- -------------

இன்றைய 24.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 23, 202102:11
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 23 இறையருளால் கனிந்தவர்கள் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 50/50.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 23 இறையருளால் கனிந்தவர்கள் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 50/50.

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 23 இறையருளால் கனிந்தவர்கள்

பிலிப் ஷெல்ட்ரேக் ‘இஞ்ஞாசியாரின் வழி’ என்ற நூலில் கூறுகிறார்: கடவுளின் கைகளில் தங்களையே முழுமையாகக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள. இவர்கள் தங்களையே இறையருள் வழிநடத்தக் கையளித்து விடுகிறார்கள். இவ்வாறு கையளிப்பதால் கடவுள் அவர்களைக் கொண்டு என்ன செய்வார் என்பதை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். அடர்த்தியான மற்றும் வடிவமற்ற அடி மரம் ஒருபோதும் தான் ஒரு சிலையாகும் என்று நம்புவதில்லை; பலரால் பாராட்டப்படும் என நினைப்பதில்லை; தன்னைப் பார்த்துக்கொண்டிருகும் சிற்பி தமது சிற்பத்திறமையால் அதனிடமிருந்து எதை வெளிக்கொண்டு வருவார் எனவும் அதற்குத் தெரியாது. சிற்பியின் உளியிடம் தன்னைக் கையளிக்கும் வரை… —

ஆயினும், ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை

நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்;

நாங்கள் அனைவரும் உமது கைவேலைப்பாடுகளே. - எசாயா 64: 8

இறை அருளால் நீங்கள் ஏற்கனவே எவ்வாறு வளர்ந்துள்ளீர்கள்? எப்படி இந்த வளர்ச்சி இன்னும் தொடரலாம்?

------ ------------- --------------- --------------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 50/50.

பணி. தனராசு சேச.

நம்பிக்கையாளரின் அருள் வாழ்விற்குத் துணையாகத் தூய ஆவியார் வரங்களை அருளுகிறார். திரு அவையின் வளர்ச்சிக்காக அருங் கொடைகளைத் தருகிறார். தூய ஆவியார் துணையாளர் என்பதால் அவருடைய தூண்டுதல்களுக்குச் செவி சாய்த்து வாழ்வோர் பல கனிகளைத் தருவர். அவற்றை நம்பிக்கையாளர் தூய ஆவியாருக்குக் காணிக்கையாக வழங்குகிறார் எனலாம்.

அன்பு, மகிழ்ச்சி, அமைதி என்பவை நம்பிக்கையாளரின் அருள் வாழ்வின் வளர்ச்சிக்கு அடிப்படை. அவற்றை அடைந்தவர் பிறர் நலப் பணியாளர் ஆவர். அப்போது அவரிடம் நன்னயம், பொறுமை, பரிவு என்ற கனிகள் பழுக்கும். அவற்றிலே நிலைத்திருந்தால் நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய கனிகளைத் தூய ஆவியாருக்குக் காணிக்கை ஆக்குவர்.

அக் கனிகளைக் கொண்டே ஒருவர் அருள் வாழ்வில் எந்த நிலையில் உள்ளார் என்று கணிக்கலாம்.

--------- --------------- -------------

இன்றைய 23.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 22, 202103:17
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 22 நம் இதயங்கள் நமது மடங்கள் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 49/50.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 22 நம் இதயங்கள் நமது மடங்கள் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 49/50.

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 22 நம் இதயங்கள் நமது மடங்கள்

ஒவ்வொரு இயேசு சபையாரும் நகரின் ஓசைகளுக்கு நடுவில் ஒரு துறவியைப் போல வாழ முடியும். அதாவது, நமது இதயங்களே நமது மடங்கள் ஆகும். ஒவ்வொரு செயலின் அடியிலும், ஒவ்வொரு சிந்தனையிலும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், அமைதி இருக்கிறது. அந்த அமைதி ஒருவர் கடவுளுடன் கொண்டுள்ள உறவுப் பகிர்வில் மட்டுமே எழும் அமைதி ஆகும். அடோல்போ நிக்கோலாஸ், எஸ்.ஜே., அவைத் தலைவர் உரைச் சுருக்கம் 2012

அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்! – திருப்பாடல் 46:10

கடவுளைக் காணக்கூடிய அமைதியான அந்த இடத்திற்குத் திரும்பிச் செல்ல உங்களுக்கு எது உதவுகிறது?

----------- ---------------- -------------------- ----------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 49/50.

பணி. தனராசு சேச.

திரு அவையின் வளர்ச்சிக்காக, பொது நலனை முன்னிட்டு, தூய ஆவியார் நம்பிக்கையாளர்களுக்கு அருங் கொடைகளை அளிக்கிறார். புனிதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய மடலில் சில அருங்கொடைகளைப் பட்டியல் இடுகிறார்.

ஞானம் நிறைந்த சொல் வளம், அறிவு செறிந்த சொல் வளம், நம்பிக்கை, பிணி தீர்க்கும் அருள் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்கு உரைக்கும் ஆற்றல், ஆவிக்கு உரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல், அப்பேச்சை விளக்கும் ஆற்றல் என்பன அவை (1கொரி 12 7-11).

~~பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது|| என்றும் அறிவுறுத்துகிறார். தொடக்கக் காலத் திரு அவையின் வளர்ச்சிக்குத் தேவையான கொடைகள் இவை. இன்றையத் திரு அவைக்கு வேறு பல ஆற்றல்கள் தேவையாகலாம். அவற்றை அளிக்கும் வல்லமை தூய ஆவியாருக்கு உள்ளது.

அக் கொடைகள் இயற்கை மீறிய ஆற்றல்கள். அவற்றைப் பொது நன்மைக்காகவே தூய ஆவியார் அருளுகிறார். ஆனால் அவற்றைச் சுய நலத்திற்காகவும் தற் பெருமைக்காகவும் பயன்படுத்தும் கடும் சோதனை தந்து அருங் கொடையாளரை வீழ்த்தச் சாத்தான் வஞ்சகமாக வலை விரிக்கும்;. ஆதலின் நோன்பிருந்து, விழித்திருந்து, செபித்து வெல்லும் திடம் அருங் கொடையாளருக்குத் தேவை.

--------- --------------- -------------

இன்றைய 22.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 21, 202103:31
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 21 துன்பம் உங்களை உலுக்காது & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 48/50.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 21 துன்பம் உங்களை உலுக்காது & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 48/50.

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 21 துன்பம் உங்களை உலுக்காது

நீங்கள் இயேசுவின் சொற்களின்படிச் செயல்பட்டால் (கேட்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைச் செயல்படுத்துங்கள்) நீங்கள் பாறையில் வீடு கட்டியவர் போல் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை சீராகவும், அசைக்க முடியாததாகவும் இருக்கும். நிலையானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் புயல்; எதையும் நீங்கள் சந்திக்க மாட்டீர்கள் என்று இயேசு சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். பாறையில் வீடு கட்டியவரும் புயல், காற்று மற்றும் மழையை எதிர்கொள்ள வேண்டும். கடவுளை நம்புவதும், இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதும் உங்கள் வாழ்க்கையில் துன்பம் வராது என்று உறுதிகொடுப்பவை அன்று. ஆனால், கடவுளுடைய சொற்களைப் பின்பற்றும் போது துன்பங்கள் உங்களை உலுக்காது என்பதாகும். – (ஜேம்ஸ் மார்ட்டின், எஸ்.ஜே., “கபினாவின் அறைகூவல்: ஏன் பாறையில் ஒரு வீட்டைக் கட்டுவது என்பது ஒருபோதும் புயல் அடிக்காது என்று பொருள்படாது, ஏன்?” தி ஹஃபிங்டன் போஸ்ட்)

“ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.” மத்தேயு 7:24

உங்களைக் குறிப்பாக இப்போது அடித்துக்கொண்டிருக்கும் புயல்கள் யாவை? இந்த “மழை, வெள்ளம் மற்றும் காற்று" உங்களை அசைக்காது என்று இறைவன் உறுதியளிப்பதைக் கேளுங்கள்.

----------- ---------------- -------------------- ----------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 48/50.

பணி. தனராசு சேச.

 பேதுருவிடம் பணிப் பெண் ஒருவர், ~~நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே|| என்றார். அவரோ, கற்பனையான அச்சத்தால்  ~~நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை|| என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். ஆனால் தூய ஆவியார் அவரை ஆட்கொண்ட பின் அச்சம் என்பதை எள்ளளவும் அறியாதவராய் விளங்கினார். 

பேதுரு பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரை இயேசுவின் பெயரால் குணமாக்கினார். தலைமைச் சங்கத்தார் பேதுருவையும் யோவானையும் அழைத்து, விசாரணை நடத்தினர். அப்போது பேதுரு ~~நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்|| (திப 4:10) என்று தயங்காமல் அவர்கள் மேல் குற்றம் சுமத்தினார்.

சீடர்களுக்குப் பதில் கூற இயலாத நிலையில் தலைமைச் சங்கத்தார் ~~இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது|| என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறு மொழியாக, ~~உங்களுக்குச் செவி சாய்ப்பதா? கடவுளுக்குச் செவி சாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்|| (திப 4:18-19) எனத் திடமாகப் பதில் இறுத்தனர். பயந்தோர் துணிந்தனர்; துணிந்தோர் பயந்தனர்!

--------- --------------- ------------- 

இன்றைய 21.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்- 

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms: 

 https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==     

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll    

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg    

https://anchor.fm/antony-inigo 

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss  

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com  

https://inigodevsj.blogspot.com  

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2  

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 20, 202104:07
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 20, இனிகோ போரில் காயமடைந்தார் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 47/50.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 20, இனிகோ போரில் காயமடைந்தார் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 47/50.

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 20 இஞ்ஞாசியார் போரில் காயமடைந்தார்

ஐநூறு ஆண்டுகளுக்கு முன், 1521 இல் இந்த நாளில், பிரெஞ்சு படைகளின் தாக்குதலில் இருந்து பாம்பலூனா நகரத்தைப் பாதுகாத்து இனிகோ லயோலா விழுப்புண் பெற்றார். நகரத்தின் பாதுகாவலர்கள், ஏறத்தாழ ஆயிரம் பேர்தான் இருந்தனர். அவர்கள் 12,000 வீரர்களைக் கொண்ட பிரெஞ்சு இராணுவத்தின் தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இனிகோ, “வெற்றி அல்லது வீர இறப்பு" என்று குரல் எழப்பி அவர்களை அணிதிரட்டினார், மேலும், அவர் காயமடையும் வரை பம்பலோனியர்கள் எதிர்த்தனர். அவர் விழுந்தவுடன், நகரம் சரணடைந்தது.

இனிகோவின் காயங்கள் மிகக் கடுமையாக இருந்தன. ஒரு பீரங்கி குண்டு அவரது வலது காலை உடைத்தது மேலும் இடது காலைக் காயப்படுத்தியது. பிரெஞ்சுக்காரர்கள், அவரது துணிச்சலைப் பாராட்டி, இனிகோவை அவரது மாளிகைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இரண்டு வலிமிகுந்த அறுவை சிகிச்சைகளைத் தாங்கிக் கொண்டார். அவர் நலமடைய ஓராண்டிற்கும் மேலானது. இந்தச் செயலற்ற நேரம் இனிகோவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடவுள் அவரது உள்ளத்தில் ஏற்படும் அசைவுகளின் வழியாக அவரை வழிநடத்தும் வழிகளை அவர் அறிந்து கொண்டார், இறுதியில் தமது வாழ்க்கையை கடவுளின் பணிக்காகக் கையளிக்க முடிவு செய்தார்.

எனவே, உங்கள் முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து விடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும். கடவுள் சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும். எபேசியர் 4: 22-24

கடவுளிடம் நீங்கள் கொண்டுள்ள உறவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொண்ட நேரத்தை நினைவுகூருங்கள். அந்த நினைவுகளை மகிழ்ந்து சுவைக்க, சிறிது நேரம் செலவிடுங்கள். அவைகளைப் பற்றிக் கடவுளிடம் பேசுங்கள்.

--------- ---------------------- --------------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 47. நம் ஆண்டவரின் சொல்லுக்கு ஏற்ப அன்னை மரியா தலைமையில் சீடர்கள் ஒன்றாய்க் கூடிச் செபத்தில் ஆழ்ந்திருந்தனர். பெருங் காற்று வீசும் ஓசை கேட்டது. நெருப்புப் பிழம்பு வடிவில் தூய ஆவியார் அங்கே கூடி இருந்த அனைவரையும் ஆட்கொண்டார்.

தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட உடனே சீடர்களின் பயம் விலகியது. மனத்தில் துணிவு பிறந்தது. உடனடியாகச் செயலூக்கம் பெற்றனர். அதனால் அவர்கள் வெளியே கூடி இருந்த மக்கள் முன் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சி பகன்றார்கள்.

முன்பு செபத்தில் உறங்கிய சீடர்கள் இப்போது உறங்கும் நேரத்தில் செபிக்கச் சென்றார்கள். தங்களிலே பெரியவர் யார், முக்கியப் பதவி யாருக்கு என்றெல்லாம் போட்டியில் இறங்கிய சீடர்கள் இப்போது தாங்கள் புரியும் நலனுக்கு இயேசுவைப் பொறுப்பாளி ஆக்கினார்கள். புற இனத்தாரை ஏற்றுக் கொள்ளும் பரந்த மனத்தைப் பெற்றனர். இயேசுவுக்காகத் துன்புறுவதில் இன்பம் கண்டனர்.

சீடர்கள் தூய ஆவியார் அளித்த வல்லமையால் இத் தகைய மாற்றத்தை அடைந்தார்கள். அதே தூய ஆவியார் நமக்கும் துணையாளர். அவரது தூண்டுதலை ஏற்றால் நாமும் இத் தகைய மாற்றங்களைப் பெற இயலும்.

--------- --------------- -------------

இன்றைய 20.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

May 19, 202104:50
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 19 கடவுள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 46/50.

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 19 கடவுள் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 46/50.

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 19 கடவுள் கனிவுடன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் இரக்கத் திருஅவை என்ற மடலில் இவ்வாறு கூறுகிறார். “கடவுளுடன் எப்படித் தங்கி இருக்கிறீர்கள்? நீங்கள் ஆண்டவரைப் பார்க்கும் போது, நற்கருணைப் பெட்டியைப் பார்க்கும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பேசாமல்… அமைதியாக… என்ன செய்கிறீர்கள்? “நான் பேசுகிறேன், நான் சொல்கிறேன், நான் சிந்திக்கிறேன், நான் தியானிக்கிறேன், நான் கவனிக்கிறேன்,’ இவையெல்லாம், மிக நன்று, ஆனால் நீங்கள் கடவுள் உங்களைப் பார்க்க, கனிவுடன் கண்ணோக்க விடுகிறீர்களா? நாம் நம்மைக் கடவுளால் பார்க்கப்பட விடுவோம். அவர் நம்மைப் பார்க்கிறார். இதுவே ஒரு வகை இறைவேண்டல். நீங்கள் கடவுள் உங்களைக் காண விடுகிறீர்களா? ஆனால், இதை எவ்வாறு செய்கிறீர்கள்? நீங்கள் நற்கருணைப் பெட்டியைப் பார்க்கிறீர்கள், உங்களைப் பார்க்கப்பட விடுகிறீர்கள்… மிக எளிதானது. “இது மிக சலிப்பானது. நான் தூங்கி விடுகிறேன்.” அப்படி என்றால் தூங்குங்கள். அப்போதும் அவர் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்றை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள், அவர் உங்களைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.”

வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப் படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்.” யோசு 1:9

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன? நீங்கள் கடவுளின் திருமுன் எவ்வாறு தங்கி இருக்கிறீர்கள்?

-------- -------------- -------------------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 46/50.

பணி. தனராசு சேச.

தூய ஆவியாரை நம் ஆண்டவர் பல பெயர்களைக் கொண்டு விளக்குகிறார். அவர் உன்னத்திலிருந்து வரும் வல்லமை, இயேசுவுக்கு உரியவற்றை யெல்லாம் அறிவிப்பவர், நினைவூட்டுபவர், நம்முள் இருந்தபடி கடவுளுக்கு உகந்த வண்ணம் செபிப்பவர், நம்முள் இருந்தபடி பகைவர்களை எதிர்த்துப் பேசுபவர், ஆறுதல் அளிப்பவர், துணையாளர் என்றெல்லாம் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

தூய ஆவியாரை நம் ஆண்டவர் தண்ணீருக்கும் காற்றுக்கும் நெருப்புக்கும்

ஒப்பிடுகிறார். இவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம் பூதங்களைச்

சேர்ந்தவை. ஐம் பூதங்கள் நமது அன்றாட வாழ்வுக்கு இன்றியமையாதவை. இவற்றில் ஒன்று இல்லை என்றாலும் நாம் வாழ இயலாது. அவ்வாறே தூய ஆவியாரும் நமது அருள் வாழ்விற்கு, நமது வாழ்வின் முழு நோக்கத்தை, முதன்மையான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இன்றி அமையாதவர்.

இறைவனை அறிவதற்கும், இறைவனின் திருவுளத்தை அறிவதற்குதம், செபிப்பதற்கும், திரு நூலைப் புரிந்து கொள்வதற்கும், எதிரிகளை எதிர் கொள்வதற்கும். வல்ல செயல்களை ஆற்றுவதற்கும், வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் துணையாளராகத் தூய ஆவியார் விளங்குகிறார். ஆகவே அவரை நம் ஆண்டவர் துணையாளர் என்று குறிப்பிடுகிறார். நாமும் அவரைத் துணையாளராகக் கொள்வோம்.

--------- --------------- -------------

இன்றைய 19.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

May 18, 202104:26
புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 18 நல்ல செயல்கள் செபத்தை மேம்படுத்தும் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 45/50.

புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 18 நல்ல செயல்கள் செபத்தை மேம்படுத்தும் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - விஜி போஸ் சே.ச. 45/50.

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 18

நல்ல செயல்கள் செபத்தை மேம்படுத்தும்

வழக்கமாக நாம் செய்வது போல், இறைவேண்டலில் கடவுளைத் தேடிய பின்னர், நல்ல செயலில் தேடுபவரைக் காட்டிலும், முதலில் நல்ல செயல்களில் கடவுளின் ஆவியைத் தேடி, பின்னர் அதைத் தன் இறைவேண்டலில் தேடுபவர் எளிதில் கண்டடைவர். கடவுளை நல்ல செயல்களில் எவரெல்லாம் தேடி அடைகிறார்களோ, அவர்களிடம், செபத்தில் மட்டுமே கடவுளைத் தேடுவோரை விட, நல்ல திண்ணமான வளர்ச்சி இருக்கும். எனவே இந்த வழியில் மார்த்தாவோடும், மரியாவோடும் அதாவது செயலோடும் செபத்தோடும் உங்கள் வாழ்க்கை அமையட்டும் - புனித பீட்டர் ஃபேபர், இஞ்ஞாசியாரின் திருப்பயணம், பீட்டர் ஸினெல்லர்

இது அன்பைப் பற்றி இஞ்ஞாசியார் கூறியதை எதிரொலிக்கிறது: “அன்பு சொல்லைவிட செயலில் எண்பிக்கப்படவேண்டும்”. அன்பு என்பது “பெற்றுள்ள நல்லவைகளை ஒருவருக்கொருவர் பரிபமாறிக் கொள்வதில் அடங்கியுள்ளது.” அன்பே செயல். அன்பே வாழ்க்கை.

உங்கள் வாழ்க்கையில் நல்ல செயல்கள் இறைவேண்டலை மேம்படுத்தி இருக்கின்றனவா? எப்படி இது நடந்தது?

---- ---------- ----------- ----------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 45/50.

பணி. தனராசு சேச

நம் ஆண்டவர் விண்ணேறிச் சென்ற நிகழ்ச்சி மிக அழகான நிகழ்ச்சி! சீடர்களுக்குத் தனிப்பட்ட அனுபவத்தைத் தந்த நிகழ்ச்சி!! உறுதியான மன மாற்றத்i;தத் தந்த நிகழ்ச்சி!!!

தாம் உயிர்த்தெழுந்த இரவில் திருத் தூதர்களுக்கு இயேசு காட்சி அளித்தார். அப்போது, ~~இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ் வல்லமையால் ஆட்கொள்ளப் படும்வரை இந் நகரத்திலேயே இருங்கள்" என்றார். அடுத்து அவர்களைப் பெத்தானியா வரை அழைத்துச் சென்றார். உலகெங்கும் சென்று படைப்புக்கெல்லாம் நற் செய்தியை அறிவியுங்கள் என்ற கட்டளையைத் தந்தார். பின்னர் அவர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து ~~அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார்||. சீடர்கள் மெய்ம் மறந்து நின்றார்கள்.

அப்பொழுதுதான் இயேசுவின் பெருமையை, அவரது உண்மை முகவரியைச் சீடர்கள் புரிந்துகொண்டார்கள். அது அவர்களது மனத்தில் மிக உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தியது. தங்களுள் யார் பெரியவர் என்ற பேச்சு அகன்றது. பதவி ஆசை நீங்கியது. அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள் (லூக் 24 49-53).

இயேசுவின் திருப் பாடுகளோ, இறப்போ, உயிர்த்தெழுதலோ ஏற்படுத்தாத மாற்றத்தை அவருடைய விண்ணேற்றம் சீடர்களிடம் ஏற்படுத்தியது. இதில் ஐயம் இல்லை.

--------- --------------- -------------

இன்றைய 18.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

May 17, 202104:12
புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 17, வழிகளை இலக்குக்கு ஏற்பப் பொருத்துங்கள் & உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 44/50. பணி. தனராசு சேச.

புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 17, வழிகளை இலக்குக்கு ஏற்பப் பொருத்துங்கள் & உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 44/50. பணி. தனராசு சேச.

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிகச் சிந்தனை, மே 17, வழிகளை இலக்குக்கு ஏற்பப் பொருத்துங்கள்

ஒவ்வொரு நல்ல தேர்விலும் நம்மைப் பொறுத்த மட்டில், நமது எண்ணம் எளிமையானதாகஇருத்தல் வேண்டும். நம் ஆண்டவராம் கடவுளைப் புகழவும், என் ஆன்மாவை மீட்கவும், படைக்கப்பட்டிருக்pன்றேன் என்ற நோக்கத்தை நான் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே, நான் எதை தெரிந்தெடுத்தாலும் அது நான் படைக்கப்பட்டதன் நோக்கத்திற்கு உதவ வேண்டும். குறிக்கோளை சாதனத்திற்கு அடிமைப்படுத்தாமல், சாதனத்தை குறிக்கோளுக்கேற்றபடி சீரமைத்துக்கொள்வேன். பலர் திருமணத்தை முதன்மையாகத் தெரிந்து கொள்கின்றனர்: அது ஒரு சாதனம். கடவுளின் ஊழியமே வாழ்வின் இறுதி நோக்கமாகவும், திருமண (வாழ்க்கை) நிலை அந்நோக்கத்தை அடைய சாதனமாகவும் அமைய வேண்டியிருக்க, பலர் இந்த ஒழுங்தைத் தழைகீழாக்கி, திருமணத்தைக் குறிக்கோளாகவும், கடவுளின் சேவையைச் சாதனமாகவும் தேர்ந்தெடுக்கின்றனர். அதன் பின்னர், அந்த மானியத்தில் கடவுளுக்குப் பணிபுரிய விழைகின்றனர். இத்தகையோர், நேரடியாக இறைவனிடம் செல்வதில்லை. ஆனால் தங்களின் தகாத பற்றுதல்களுக்கு முழுமையாக கடவுள் ஒத்தியங்குமாறு விரும்புகின்றனர். அதன் விளைவாக, அவர்கள் குறிக்கோளைச் சாதனமாகவும், சாதனத்தைக் குறிக்கோளாகவும் மாற்றி விடுகின்றனர். அதன் பயனாக எதை முதன்மையாகத் தேடவேண்டுமோ அதை இறுதியாகத் தேடுகின்றனர்.

ஆகவே எனது முதல் நோக்கம் இறைவனுக்குப் பணிபுரிவதை நாடுவதாய் இருக்கவேண்டும். அதுவே குறிக்கோள். அதற்குப் பின்னரே, எனக்கு நன்மை பயக்குமானால் மானியம் அடைவதையோ, திருமணம் செய்வதையோ தேடிக்கொள்ளலாம்: ஏனெனில் இவைகள் குறிக்கோளுக்குச் சாதனமாக உதவுகின்றன. – ஆன்மீகப்பயிற்சி எண் 169

இது நல்ல முடிவை எடுப்பதற்கான, இஞ்ஞாசியாரின் அடிப்படைத் தத்துவம். முதலில் கடவுளைத் தேடுங்கள். கடவுள் பணி நமது குறிக்கோளாக இருந்தால், நமது தேர்வுகளும் நன்றாக இருக்கும்.

நீங்கள் முக்கியமான முடிவுகளை எதிர்கொள்கிறீர்களா? கடவுளுக்குப் பணி செய்வதே நம் தலைசிறந்த முதன்மையான கருத்தாய் இருக்கவேண்டும் என்று செபியுங்கள்

------- ------------ ------------------ ---------------------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 44/50.

பணி. தனராசு சேச.

தாம் தந்தையிடம் இருந்து வந்ததையும் தந்தையிடம் திரும்ப வேண்டியவர் என்பதையும் நம் ஆண்டவர் இயேசு மனத்தில் இருத்தி இருந்தார். ~~தாம் இவ் வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார்|| (யோவா 13:1) என்று யோவான் குறிப்பிடுகிறார்.

கடவுள் மனிதனை மையமாக வைத்தே சிந்திக்கிறார் எனத் தெரிகிறது. மனிதனுக்காக இந்த உலகத்தைப் படைத்தார். மனிதனை மீட்கத் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இப்போது அந்தத் திரு மகன் விண்ணகம் செல்வது மனிதரை மையமாகக் கொண்டு செயல்படுவதாகத் தெரிவிக்கிறார். ~~நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்|| (யோவா 14:3) என்கிறார். ~~நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்|| (யோவா 16:7) என்பதும் மனிதரின் நன்மையை முன்னிட்டே அல்லவா?

கடவுள் மனிதனை மையமாகக் கொண்டு சிந்திக்கிறார், செயல் புரிகிறார். அப்படியானால் நன்றியுள்ள மனிதரும் கடவுளை மையமாகக் கொண்டல்லவா சிந்திக்க வேண்டும்? செயலாற்ற வேண்டும்?

மேலும் கடவுளே மனிதனை மையமாகக் கொண்டு செயலாற்றும்போது, மனிதன் மனிதனுக்கே கேடு செய்கிற கயவனாக வாழ்வதை என்ன என்று சொல்லலாம்?

--------- --------------- ------------- 

இன்றைய 17.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

May 16, 202102:59
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 16, எப்படி திருத்தந்தை வேண்டுகிறார்? & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - Sr. Arockia Mary FSAG 43/50

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 16, எப்படி திருத்தந்தை வேண்டுகிறார்? & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - Sr. Arockia Mary FSAG 43/50

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 16, எப்படி திருத்தந்தை இறைவனை வேண்டுகிறார்?

என்னைப் பொறுத்தவரை இறைவேண்டல் என்பது நினைவுகளின் இறைவேண்டல் ஆகும். என் வாழ்க்கையில், அல்லது அவரது திரு அவையில், அல்லது ஒரு குறிப்பிட்ட பங்கில் கடவுள் செய்தவற்றை முழுவதும் திருப்பிப்பார்த்து வேண்டுவதாகும். இது எனக்கு, புனித இஞ்ஞாசியாரின், முதல் வார ஆன்மீகப் பயிற்சியில், பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்ட இரக்கம் நிறைந்த ஆண்டவரை எதிர்கொள்வதை நினைவூட்டுகிறது. என்னை நான் கேட்டுக்கொள்கிறேன்: “நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்தேன்? நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்துகொண்டிருக்கிறேன்? கிறிஸ்துவுக்காக என்ன செய்யப் வேண்டும்?” இது இறையன்பை அடையக் காட்சி தியானத்தில் நாம் பெற்றுக்கொண்ட கொடைகளை நினைவுகூரச் சொல்லும் போது புனித இஞ்ஞாசியார் குறிப்பிடும் நினைவுகள் ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் என்னை நினைக்கிறார் என்று எனக்குத் தெரிகிறது. நான் அவரை மறந்தாலும் அவர் என்னை ஒருபோதும் மறப்பதே இல்லை. நினைவு என்பது இஞ்ஞாசியார் ஆன்மிகம் மற்றும் இயேசுசபையினரின் இதயத்திற்கு அடிப்படையான பங்கு கொண்டது; அருள் பற்றிய நினைவு, விவிலியத்தின் இணைச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள நினைவு, கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கையின் அடிப்படையாக அமையும் கடவுளின் செயல்கள் பற்றிய நினைவு ஆகும். இந்த நினைவே என்னை அவருக்கு மகனாக்குகிறது, மேலும், அதுவே என்னைத் தந்தையாகவும் ஆக்குகிறது. – திருத்தந்தை பிரான்சிஸ், கடவுளுக்காக திறக்கப்பட்டுள்ள பெரிய இதயம், அமெரிக்கா

ஆண்டவரையும், அவரது ஆற்றலையும் தேடுங்கள். அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள். அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள். அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும், நினைவில் கொள்ளுங்கள். – திருப்பாடல் 105 : 4 – 5

இன்று கொஞ்ச அதிக நேரம் எடுத்து நீங்கள் விரும்பித் திழைக்கும்; நினைவுகளை திருப்பிப் பாருங்கள். அவற்றில் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

-------------------- --------------------- -----------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 43/50.

பணி. தனராசு சேச.

உயிர்த்தெழுந்த இயேசு தம் சீடருக்கு உணவு சமைத்துப் பரிமாறிய பின் பேதுருவைத் தனியே தம்மிடம் அழைக்கிறார். பேதுரு தம் தலைவரை அறிந்ததே இல்லை என்று சத்தியம் பண்ணி மறுதலித்ததை எண்ணி எண்ணி மனம் குமுறியபடி இருக்கிறார். முன்பு போல இல்லை. ஒதுங்கி ஒதுங்கிச் செல்கிறார். அவருக்கு ஓர் உளவியல் சிகிச்சை நல்கும் எண்ணத்துடன் அவருக்காக நம் ஆண்டவர் ஒரு நாடகமே நடத்துகிறார்.

சாதாரணமாக நம் ஆண்டவர் பேதுருவைச் சீமோனே என்றுதான் அழைப்பார். இப்போது வம்படியாக ~~யோவானின் மகன் சீமோனே|| என்று அழைத்து, ~~நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?|| என்று கேட்டார். இவ்வாறு மும்முறை கேட்டார். மறுதலித்ததைச் சுட்டிக் காட்டாமல் பேதுருவே தம்மிடம் மற்ற அனைவரையும் காட்டிலும் பேரன்பு செலுத்துகிறவர் என்று அழுத்தம் திருத்தமாக உணர்த்துவதற்காக அப்படிக் கேட்டார். பின்னர் ~~என் ஆட்டுக் குட்டிகளைப் பேணி வளர்||, ~~என் ஆடுகளை மேய்||, ~~என் ஆடுகளைப் பேணி வளர்|| என்று அவரிடம் முந்தையப் பொறுப்புகளை மீண்டும் ஒப்படைத்தார்.

அத்துடன் நிறுத்தாமல் அவர் எதிர் காலத்தில் எப்படி தம் தலைவருக்காக உயிர்த் தியாகம் புரிவார் என்பதையும் எடுத்துச் சொல்லி அவரைத் தேற்றி முன்பு போலத் துடிப்பு உள்ளவராக மாற்றினார்.

நம் ஆண்டவர் நம் குறைகளை மறந்து, நிறைகளையே மனத்தில் நிறுத்தி வைப்பவர் என்பது தெளிவன்றோ?

--------- --------------- -------------

இன்றைய 16.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

May 15, 202104:46
புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 15, வாழ்வு கொடுக்கும் உறவுகள் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - Sr. Arockia Mary FSAG 42/50

புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 15, வாழ்வு கொடுக்கும் உறவுகள் & இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம், திண்டுக்கல் - உயிர்ப்புச்சிந்தனைகள் -  பணி. தனராசு சேச - Sr. Arockia Mary FSAG 42/50

வணக்கம்! புனித இனிகோ ஆன்மிக எண்ணங்கள், மே 15, வாழ்வு கொடுக்கும் உறவுகள்

கிறிஸ்தவ அருள்பணிகளையும்;, மறைப்பணிகளையும் ஒருபோதும் தனிமனிதர் ஒருவரின் முயற்சி என்று பார்க்க முடியாது. நாம் ஒருவர்க்கொருவர், கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர்களாகத் தொடர்பு கொள்கிறோம். நாம் கிறிஸ்துவோடும், மற்றவரோடும் உள்ள உறவின் அடிப்படையில் பணிபுரிகிறோம். வாழ்வையும், அன்பையும் பகிர்வதே அருள்பணியாகும். இஞ்ஞாசியாரின் வழியில் அருள்பணி என்பது, இயேசு கொடுத்த வாக்குறுதியான “இரண்டு, அல்லது மூன்றுபேர் என் பெயரால் எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் (மத்தேயு 18 : 20)” என்பதை அடிப்படையாகக் கொண்டது. – டேவிட் டு. பிலமிங் சே.ச., இஞ்ஞாசியாரின் ஆன்மீகம் என்றால் என்ன?

இனி நீங்கள் அன்னியர் அல்ல, வேறு நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள் கடவுளின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். – எபேசியர் 2 : 19

தற்போது, உங்கள் உடன் பணியாளருடன் நீங்கள் கொண்ட உறவில் உங்களைச் சிறப்பாகத் தொட்டது என்ன?

----------- ------------------- ----------------

உயிர்ப்புச் சிந்தனைகள் நாள் 42/50.

பணி. தனராசு சேச.

அற்புதமான வகையில் மீன் பிடித்த சீடர்கள் கரைக்கு வருகிறார்கள். அங்கே அவர்கள் கண்டது என்ன? கடவுளின் தாய்மையைக் கண்டார்கள். எப்படி?

படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், ~~நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்|| என்றார். பின்னர் இயேசு அவர்களிடம், ~~உணவருந்த வாருங்கள்|| என்றார். சீடர்களுள் எவரும், ~~நீர் யார்?" என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு வேறு வேலை இல்லையா? உணவு சமைப்பதும் பரிமாறுவதும் அவருடைய பெருமைக்கு இழுக்கு ஆகாதா?

கடவுளுக்கு ஒரே ஒரு வேலைதான் இருக்கிறது. அது மனிதருக்கு இடை விடாமல் நன்மை செய்துகொண்டே இருப்பதுதான்! அவருக்கு அதுதான் பெருமை! ~~மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" (மாற் 10:45) அல்லவா?

--------- --------------- -------------

இன்றைய 15.05.2021 பதிவுகள் கேளுங்க! புனித இனிகோ ஆன்மிக/உயிர்ப்புச்சிந்தனைகள்-

புனித இனிகோ ஆன்மீக மையம் - பெஸ்கி இல்லம் - திண்டுக்கல் -

Four platforms:

https://www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy80N2ZhOTUxNC9wb2RjYXN0L3Jzcw==

https://www.breaker.audio/ignatian-thoughts-punnnit-innnikoo-aannnmiikc-cintnnnaikll

https://open.spotify.com/show/4j1OYP8v6kB3V0gxk2uylg

https://anchor.fm/antony-inigo

My RSS Feed https://anchor.fm/s/47fa9514/podcast/rss

Bloggs: http://ignatianthoughts143812763.wordpress.com

https://inigodevsj.blogspot.com

Use the link to join channel in Telegram https://t.me/joinchat/V0dMQhlg99wmIuP2

Facebook page https://m.facebook.com/Inigo500/

May 14, 202103:22