Skip to main content
தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

By rams

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . .
படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!!
Update:
பொருள் கொடுக்க இயலாதவர்கள் ஊக்கம் கொடுக்கலாமே! உங்கள் பின்னூட்டத்தை (feedback) ஒலிவடிவில் பதிவிடுங்கள். . .
Available on
Google Podcasts Logo
Pocket Casts Logo
RadioPublic Logo
Spotify Logo
Currently playing episode

14. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்

தமிழ் சிறுகதைகள் , Tamil Short storiesMar 06, 2019

00:00
41:31
173. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

173. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

வெகு நாட்களாக படிக்க திட்டமிட்டு நான் சமீபத்தில் படிக்க தொடங்கியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன். அவர் எழுத்தில் நான் படித்த முதல் கதை கழிமுகம். மிகவும் வேறுபட்ட நடையில் அதிர வைத்த படைப்பு. பிறகு அவரது சிறுகதைகளை தேட ஆரம்பித்தேன். இந்த முத்து கிடைத்தது. கிணறும் நீச்சலும் கிராமங்களிலும் மறையத் தொடங்கியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு ஆவணப்படம் போல இந்தக் கதை. . .

Dec 24, 202320:43
172. அனாகத நாதம் - செந்தில் ஜெகன்நாதன்

172. அனாகத நாதம் - செந்தில் ஜெகன்நாதன்

பரம்பரைக் கலை கைவரவில்லையே என்று சாமிநாதனோடு நம்மையும் தவிக்க விடுகிறார் செந்தில் ஜெகன்நாதன். நாதஸ்வரத்திற்கு இணையாக பொங்கிப் பிரவாகித்து வரும் எழுத்துநடை. மென் உணர்ச்சிகளை பொருத்தமான ராகங்களோடு எடுத்தாண்டிருக்கிறார். சாமிநாதனுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட முடிவில் நீர் தளும்பி கண்ணெரிச்சல் வந்துவிடுகிறது.

Oct 04, 202338:46
171. தியாகம் - கு.அழகிரிசாமி

171. தியாகம் - கு.அழகிரிசாமி

சொல்லால் சுட்டுப் பொசுக்கும் மனிதனிடம் இத்தனை பெருங்கருணையா? மனதை இளக வைக்கிறார் கு.அழகிரிசாமி

Sep 19, 202320:54
170. காணிக்கை - ந.பிச்சமூர்த்தி
Mar 24, 202314:34
169. மனைவியின் நண்பர் - வண்ணநிலவன்
Feb 10, 202325:13
168. குருபீடம் - ஜெயகாந்தன்
Jan 15, 202323:37
167. அன்னங்களும் பட்சிகளும் - அம்பை

167. அன்னங்களும் பட்சிகளும் - அம்பை

நாம் அனைவருமே ஒரு நாள் நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருப்போம். பச்சிளம் குழந்தைக்கு கூட நினைவுகள் - தாயின் மொழி , புடவை. . .புலம்பெயர்ந்த குடும்பங்கள் மங்கலாகிப் போகும் நினைவுகளை தக்க வைத்துக்கொள்ள செய்யும் முயற்சிகள் அர்த்தமற்றவையாகின்றன அடுத்த தலைமுறைக்கு. . . நினைவுகளின் தொகுப்பாய் இந்தக் கதை. . .

அம்பை தமிழில் சிறுகதைகளும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதும் எழுத்தாளர். தமிழில் பெண்ணியம் சார்ந்து எழுதிய முதன்மைப் படைப்பாளி என விமர்சகர்களால் கருதப்படுபவர். பெண்ணியக் களச்செயல்பாட்டாளர். சமூகவியல் ஆய்வாளர். ஆங்கிலத்தில் C.S.Laksmi என்னும் இயற்பெயரில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவர்.

நான் பதிந்திருக்கும் அம்பையின் மற்ற கதைகள்.

118. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

Jan 08, 202314:58
166. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்

166. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்

சாதீய கொடுமைகள் முக்கியமாக இரண்டு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒன்று மேல்சாதியினரின் ஒடுக்குமுறைகள் ஏளனப்பேச்சுகள் கூனிக்குறுகச்செய்யும் இழிவுச் செயல்கள். மற்றொன்று மிகக்கொடிய சுயவிரக்கம் - எப்போதும் எங்கும் தன்னை தாக்கும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியேற முடியாத நிலைமை.

இது ஒரு நெடுங்கதை. ஆனால் படித்த / கேட்ட பிறகு உங்களுக்குள் எழும் கேள்விகளிடம் இருந்து தப்ப முடியாது . . .

நான் பதிந்திருக்கும் ஜெயமோகனின் மற்றைய கதைகள்

161. வணங்கான் - ஜெயமொகன்

147. தாயார் பாதம்

110. இங்கே , இங்கேயே

101. அப்பாவும் மகனும்

73. ஐந்தாவது மருந்து

54. பாடலிபுத்திரம்

27 - 2 . யானை டாக்டர் - இறுதி பகுதி

27 - 1 . யானை டாக்டர் - முதல் பகுதி

14. சோற்றுக்கணக்கு

8. மாபெரும் பயணம்

Jan 02, 202302:09:57
165.கண்ணாடிப் பரப்பு - கமலதேவி

165.கண்ணாடிப் பரப்பு - கமலதேவி

சில விஷயங்கள் நமக்கு பிடித்தவை சில பிடிக்காதவை. பிடிக்காதவற்றை பார்க்கும்போதும் எண்ணும்போதும் நிகழும் மனநிலை வெறும் ஒரு கண்ணாடி போலத் தான்.  இது புரியும்போது திரை விலகுகிறது புதிய பார்வைகள் வந்துசேர்கின்றன. பிடிக்காதவையும் மனதை தொடுகின்றன. . .

Dec 18, 202210:22
164. சௌந்தரவள்ளியின் மீசை - S. ராமகிருஷ்ணன்

164. சௌந்தரவள்ளியின் மீசை - S. ராமகிருஷ்ணன்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை.

அதோடு விடலைப் பருவ கவலைகளையும் சேர்ந்து கொண்டால்? அதிலும் கொடியது இதெல்லாம் நேர்வது ஒரு பெண்ணிற்கு. அம்மாவும் பெண்ணும் கட்டிக்கொண்டு அழுகையில் வாசகன் மனத்தை ஒரு பாறாங்கல் வந்து அடைக்கிறது.

அறிவியல் வாத்தியாரின் அறியாமை, அதனால் சீண்டப்பட்டு படிக்கும் வாய்ப்பையே இழக்கும் மாணவி. . .பெண்ணுக்கு என்று ஒரு இலக்கணம் வகுத்து அடைத்து வைக்கும் சமுதாயம், அவள் உடலில் ஏற்படும் பிறழ்தலுக்கும் அவளையே காரணமாக்கி ஏறி மிதிக்கிறது. . .என்னை மிகவும் பாதித்த கதை. . .

Dec 11, 202219:48
163. கடன் - அ. முத்துலிங்கம்

163. கடன் - அ. முத்துலிங்கம்

வயோதிகத்தோடு புலம்பெயர்ந்து செல்லவேண்டிய கட்டாயமும் சேர்ந்து கொண்ட கொடுமை. புதிய இடம், புதிய சூழல், வேறுபட்ட கலாசாரம் எல்லாம் ஒன்றாய் படுத்தும் பாடு. கணவன் மனைவியிடம் பட்ட கடன், மகன் தந்தையிடம் பட்ட கடன், முன்வினைக் கடன், தனிநபரிடம் அரசாங்கம் பட்ட கடன் ஒரு சிறுகதையில் இத்தனை பரிமாணங்களா? அ.முத்துலிங்கம் அசத்துகிறார்.

Dec 04, 202222:35
162. அனந்தசயனம் காலனி- தோப்பில் முகமது மீரான்

162. அனந்தசயனம் காலனி- தோப்பில் முகமது மீரான்

தோப்பில் முஹம்மது மீரான் ஒரு மிகச்சிறந்த யதார்த்தவாத இலக்கியவாதி. அவசர யுகத்தில் அக்கமபக்கம் யார் வசிக்கிறார்கள் என்றே தெரியாத இரக்கம் மனிதாபிமானம் என்ற மனிதத் தன்மையே மறந்துவிட்ட பட்டணத்து மேல்தட்டு மக்களை தலையில் குட்டும் கதை இது.

Nov 27, 202221:56
161. வணங்கான் - ஜெயமோகன்

161. வணங்கான் - ஜெயமோகன்

நமக்கு இரண்டு மூன்று தலைமுறைகள் முன்னால் சாதியின் பெயரால் நடந்த கொடுமைகள் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்தால் இட ஒதுக்கீடு ஏன் சரியானது என்று புரியுமோ?
நேசமணி என்ற பெருந்தலைவர் பற்றி தெரியாமலே போனதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் போல.
ஜெயமொகனின் இந்தக் கதையில் அவர் கையாண்டிருக்கும் பரிமாணங்கள் படிமங்கள் எத்தனை எத்தனை? நடுநடுவே புன்னகைக்க வைக்கும் நகைச்சுவையும் உண்டு. . .
Sep 12, 202201:04:34
160. கறிவேப்பிலைகள் - கி.ரா

160. கறிவேப்பிலைகள் - கி.ரா

படிக்க முடியாமல் தொண்டை அடைக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. கிராமத்து சூழல் அழிந்து வரும் ( அழிந்து விட்டதோ?) சொல்லாடல்கள் கொட்டிக்கிடக்கும் இந்தக்கதை நிலமற்ற விவசாயக் கூலிகளின் வாழ்க்கை போராட்டத்தை கண் முன் நிறுத்துகிறது. . .

Jul 06, 202221:45
159. முள்முடி - தி.ஜா

159. முள்முடி - தி.ஜா

ஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கதை.
குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளின் கணமேனும் காத்தல் அரிது எனும் குறளும் ஏனோ ஞாபகம் வருகிறது. . .

Apr 16, 202218:43
158. தனியொருவனுக்கு - அசோகமித்திரன்

158. தனியொருவனுக்கு - அசோகமித்திரன்

மனிதனின் இந்த அடிப்படைத் தேவையைப் பற்றி எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்?

Mar 06, 202213:10
157. சித்தி - மா. அரங்கநாதன்

157. சித்தி - மா. அரங்கநாதன்

நெடுந்தொலைவு ஓட்டக்காரர்களுக்கு ஒரு கதை!. ஓடும்போது ஏற்படும் மனநிலையை சரியாக படம்பிடிக்கும் அரங்கநாதன் நிச்சயம் அரை மராத்தனாவது ஓடியிருப்பார் !! 

Oct 15, 202112:55
156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன்

156. பேய்க்கொட்டு - நாஞ்சில் நாடன்

கிராமத்து திருவிழா கண்முன் விரிகிறது. கூடவே ஆழ் மனதின் வன்மங்களும் விடலைப்பருவத்தை ஏமாற்றுதலும். இசையும் ஓசையும். . .  நாஞ்சில் நாடனின் அருமையான சிறுகதை.

Aug 03, 202130:53
155. யோஷிகி - தி.ஜானகிராமன்

155. யோஷிகி - தி.ஜானகிராமன்

ஒரு சின்ன கதையின் மூலம் ஜப்பான் நாட்டின் கலாசாரத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் தி.ஜா.

Jun 27, 202125:25
154. பூர்வீகம் - அ.முத்துலிங்கம்

154. பூர்வீகம் - அ.முத்துலிங்கம்

வெவ்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு பின்புலங்களுடன் சிலர் சந்திக்கிறார்கள். நட்பு காதல் என்று எல்லா சாத்தியங்களோடும். இழக்கப் போவதை அடைய சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறி அடைய துடிக்கிறார் ஒருவர். . .அ.முத்துலிங்கம் மிளிர்கிறார் கதையின் முடிவில். . .

Jun 07, 202114:54
153. வேப்பமரம் - ந. பிச்சமூர்த்தி

153. வேப்பமரம் - ந. பிச்சமூர்த்தி

இந்த மரத்தின் கதை நாம் அனைவரும் கேட்டது தானோ? ந. பிச்சமூர்த்தியின் யதார்த்த நடையில் வேரூன்றி நிற்கிறது. . .

May 29, 202110:24
152. முனீரின் ஸ்பானர்கள் - அசோகமித்திரன்

152. முனீரின் ஸ்பானர்கள் - அசோகமித்திரன்

சிறு சிறு சம்பவங்களின் கோர்வை தானே வாழ்க்கை! இதை அழுத்தம் திரித்தமாக தன் யதார்த்தமான நடையில் சித்தரிப்பதில் வல்லவர் அசோகமித்திரன். இந்தக் கதையின் பல்வேறு பரிமாணங்கள் வியக்க வைக்கின்றன. .

May 26, 202125:05
151. கோமதி - கி.ரா

151. கோமதி - கி.ரா

கரிசல்காட்டு இலக்கியத்தின் தந்தை கி.ரா மே 17ம் தேதி திங்கள் கிழமை இரவு காலமானார்.

1964ம் ஆண்டு எழுதப்பட்டது இந்தக் கதை. பேசப்படக்கூடாத அருவருக்கத்தக்க கேவலமான ஒரு விஷயமாக கருதப்பட்ட  இத்தகைய கதையை எழுத எத்தனை துணிச்சல் ! 

May 23, 202123:56
150. ஹார்மோனியம் - செழியன்

150. ஹார்மோனியம் - செழியன்

 ‘ஹார்மோனியம்’ என்கிற இந்த சிறுகதைக்காக செழியன் ‘கதா’ விருது பெற்றிருக்கிறார். . 

தமிழின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செழியன். சிவகங்கையில் பிறந்தவர். பொறியியல் பட்டம் முடித்ததும், புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்ப்படங்களில் ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார். 

ஒரு இசைக்கருவியைப் பற்றி இத்தனை நுட்பமாக எழுத முடியுமா என்று ஆச்சரியப் பட வைக்கும் செழியன் இசை எனும் சுகானுபவத்தை எழுத்தால் கண் முன் நிறுத்துகிறார். . .

May 11, 202140:43
149.பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன்

149.பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன்

பாம்புகளைப் பேணி வாழ்ந்த ஒரு சமூகம் இப்போது காணாமலேயே போய்விட்டது. பாம்புகளை நேசிப்பவர்களுக்காகவே எழுதப்பட்டதாக உணர்கிறேன். . .நன்றி வண்ணநிலவன் .

Mar 10, 202109:38
148. பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா

148. பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா

எத்தனை எத்தனை கொடுமைகள் அன்றாட வாழ்வில் நமக்கு வெறும் செய்திகளாக வந்து சேருகின்றன? தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும்போது தான் அதன் தீவிரம் உறைக்கிறது. 

பலவீனமான இதயம் உள்ளவர்கள் இந்த உண்மைக்கதையை தவிர்ப்பது நல்லது.

Dec 16, 202045:47
147. தாயார் பாதம் - ஜெயமோகன்

147. தாயார் பாதம் - ஜெயமோகன்

அறம் தொகுப்பில் இருந்து மற்றுமொரு ஆழ்மனதை பிசைந்தெடுக்கும் கதை. பாட்டியை இழித்தவரை பேரன் பழிவாங்குகிறான். அந்தக் கால பெண்களின் நிலை இன்று நினைத்தாலே குலை நடுங்குகிறது. . .

Nov 01, 202026:43
146. பாவம், பக்தர் தானே - ஜெயகாந்தன்

146. பாவம், பக்தர் தானே - ஜெயகாந்தன்

சாதாரணமான கதை என்றாலும் ஜெயகாந்தனின் எழுத்தில் மிளிர்கிறது. ஊமைக் கிழவியின் பக்தி வெளிப்பாடு உருக்கமாய் சொல்லப்பட்டிருக்கிறது.

Oct 01, 202016:34
145. பள்ளம் - சுந்தர ராமசாமி

145. பள்ளம் - சுந்தர ராமசாமி

1979ல் வெளியான கதை. தந்தை மகனின் வேறுவேறான பாதைகள் பார்வைகள். சினிமா பைத்தியத்தால் நேர்ந்த விபத்து. . .

Sep 13, 202025:23
144. கனவுக்கதை - சார்வாகன்

144. கனவுக்கதை - சார்வாகன்

போன வாரம் அயோத்தியில் நடந்த கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கும் இந்த கதையின் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை, தற்செயலாக நிகழ்ந்தது என்றால் நம்ப மாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை :)



Aug 09, 202015:32
143. நுகம் - அ.எக்பர்ட் சச்சிதானந்தம்

143. நுகம் - அ.எக்பர்ட் சச்சிதானந்தம்

ஏசுவின் பேரால் அமைந்த மதம் எப்படி ஏழைகளை ஒதுக்குகிறது என்று காட்டும் கதை. அமைப்பு என்று ஒன்று ஏற்பட்டுவிட்டாலே லட்சியங்கள் மதிப்பிழந்துவிடுகின்றன என்பதையும் அரசியல் இல்லாத அமைப்பே இல்லை என்பதையும் பிரமாதமாகக் காட்டி இருக்கிறார். 

Jul 29, 202035:39
142. கோளறு பதிகம் - ரஞ்சகுமார்

142. கோளறு பதிகம் - ரஞ்சகுமார்

போர்க்கால சூழலை தமிழ் இனம் பட்ட பாட்டை கண் முன் கொண்டு நிறுத்துகிறார் இலங்கை எழுத்தாளர் ரஞ்சகுமார். பல பரிமாணங்களை காட்டும் இந்தக் கதை உள்ளத்தை பிசையக்கூடும் ஜாக்கிரதை!

Jul 14, 202032:59
141. பணம் பிழைத்தது-பி.எஸ். இராமையா

141. பணம் பிழைத்தது-பி.எஸ். இராமையா

மரண பயம் வரும்போது தான் நாம் செய்யாமல் விட்டது செய்திருக்க வேண்டியது பற்றி எல்லாம் நினைப்பு வருமோ? இருக்கப்போவது இன்னும் சில மணித்துளிகளே என்று ஆனால் எதைச் செய்வது எதை விடுவது? மனித மனத்தின் ஆழங்களை அதன் ஆசைகளை மணிக்கொடி எழுத்தாளர்களுக்கே உரிய நடையில் காட்டுகிறார் பி.எஸ். இராமையா.

Jun 30, 202021:10
140. நிலைநிறுத்தல் - கி.ரா

140. நிலைநிறுத்தல் - கி.ரா

அடிமை நிலையிலிருந்து சம நிலை அடைந்தததோடு நில்லாமல் அனைவரிலும் உயர்ந்து நிற்க வேட்கை கொண்டு அதையும் நிலைநிறுத்துகிறான் மாசாணம். . .வட்டார மொழிவழக்கில் மணக்கிறது தமிழ். . . 

Jun 24, 202034:14
139. அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார்

139. அக்ரஹாரத்தில் பூனை - திலீப்குமார்

தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழும் குஜராத்திகளின் வாழ்க்கைமுறை, நம்பிக்கைகள், கலாசாரம் இவற்றைப் பற்றி பல சிறுகதைகள் எழுதிவருகிறார் திலீப்குமார். எளிய கதைக் களன்களில் சாதாரண மக்களை  நன்கு சித்தரிக்கிறார்.

Jun 11, 202023:41
138. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்

138. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்

முதல் முறை படிக்கும்போதே ஏதோ நெருடியது. மறுமுறை படித்தபோது தெளிவானது போல் இருந்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை படித்தால் வேறு ஒரு கோணம் வெளிப்படுமோ? நிச்சயம் இது உலகத்தின் மிகச் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறும். அசர வைக்கும் அசோகமித்திரன்.
Jun 08, 202017:49
137. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்

137. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்

களங்கம் என்றால் பெண்ணுக்கு மட்டுமே என்றிருந்த நமது ஆணாதிக்க சமுதாயத்தில் இந்தக் கதை ஒரு இடி போல் இறங்கி உலுக்கி எடுத்தது.

Jun 06, 202050:41
136. பேயாண்டித் தேவரும் ஒரு கோப்பைத் தேநீரும் - கனிவண்ணன்

136. பேயாண்டித் தேவரும் ஒரு கோப்பைத் தேநீரும் - கனிவண்ணன்

அன்பான கிராம மனிதர்களின் உறவுப் பிணைப்புகளை பேசும் கதை. 

May 30, 202014:47
135. மாஞ்சு - சுஜாதா

135. மாஞ்சு - சுஜாதா

யாரை நொந்து என்ன பயன் என்ற கூற்று நினைவு வருகிறது. எல்லாத் தாயார்களுக்குமே தனது அறிவாளிப் பிள்ளையை விட அசட்டுப் பிள்ளையைத் தான் பிடிக்கும் போல. அழகான விதவை படும்பாடு, வசதிகளுக்காக குணங்களை மாற்றிக் கொள்பவர்கள், சோம்பலாலும் திமிராலும் சரிந்து போன பிராமண செல்வாக்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனித்தன்மையான திறமையை புறக்கணிக்கும் பொதுக்கல்வி முறை என்று பலவற்றை சிந்திக்க வைக்கிறது.

May 13, 202038:12
134. மைதானத்து மரங்கள் - கந்தர்வன்

134. மைதானத்து மரங்கள் - கந்தர்வன்

மரங்கள் மழை மட்டும் தருவதில்லை. எண்ணற்ற மக்களுக்கு அடைக்கலமும் ஆறுதலும் தருகின்றன. . .

May 10, 202017:06
133. சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - ஆதவன்

133. சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் - ஆதவன்

இரு இளைஞர்கள் - ஆணும் பெண்ணும். இருவருக்கும் தனக்கு வரப் போகும் வாழக்கைத் துணை பற்றிய ஒரு கற்பனை பிம்பம் அழுத்தமாக பதிந்துள்ளது. அந்த பிம்பத்துடன் ஒத்துப் பார்த்துக் கொண்டு ஒருவர் மற்றவரை சீண்டுகிறார்கள். இதில் மாயவலை அறுந்து காதலில் வீழ்கிறார்கள். . ஆதவன் கதைகளில் இருக்கும் ஆழமான உளவியல் ஆராய்ச்சி இந்தக் கதையிலும் பளிச்சிடுகிறது.

May 08, 202043:55
132. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி

132. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி

படிக்கும் காலத்தில் ஒழுங்காய் படிக்காமல் ஊரைச் சுற்றியதும் பிராமணனாய் பிறந்ததிற்கு பலனாகவாவது வேதங்களையும் படிக்காமல் உதவாக்கரையாய் சுற்றியவன் ராஜப்பா.ஐம்பது வயது வரை தாயார் உயிரோடு இருந்தவரை அண்ணனையும் அவன் குடும்பத்தையும் ஆதரித்த தம்பி இனிமேல் நீயே பார்த்துக்கொள் என்கிறான். கையால் உழைத்தறியாத ராஜப்பாவிற்கு வயிற்றால் உழைக்கும் வேலை கிடைக்கிறது. கஷ்ட ஜீவனம். ஒரு நாள், காலை காப்பிக்கே வழியில்லாமல் போக அவன் படும்பாடு. . .

May 06, 202024:26
131. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதிமணியன்

131. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதிமணியன்

அசைவ உணவு தயாரிப்பு விளக்கமாக சொல்லப்பட்டிருக்கும் இக் கதை சைவர்களுக்கு குமட்டலை ஏறுபடுத்தக் கூடும். ஆசையை அடக்கமுடியாமல் மருகுவது மகன் மட்டும் தானா?

May 04, 202021:43
130. பாற்கடல் - லா.ச.ரா

130. பாற்கடல் - லா.ச.ரா

இந்தக் கதை பற்றி லா.ச.ரா எழுதியது

கணவன் மனைவி இருவரும் தனித்தனி இடங்களில் வேலைக்குப் போய்க்கொண்டு, வீட்டில் விட்டுச் சென்ற குழந்தை, பக்கத்து வீட்டுப் பாஞ்சாலை, எதிர் வீட்டு எல்லம்மாளின் பொறுப்பிலும் இரக்கத்திலும் எடுப்பார் கைப்பிள்ளையாக வளர்ந்து உருவாகிக் கொண்டும் இருக்கும் இந் தலைமுறைக்கு, இந்தக் கதையில் சொல்லப்படும் வாழ்க்கை, வாழ்க்கைமுறை, வெறும் தகவல் ரீதியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - முக்குணங்களின் நிதர்சனம் கூட்டுக் குடும்ப வாழக்கை.

Dedicated, benevolent dictatorship க்கு எடுத்துக்காட்டு.


May 02, 202038:57
129. குடும்பத்தேர் - மெளனி

129. குடும்பத்தேர் - மெளனி

முன்னோடி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான மெளனியின் படைப்பு. தாயின் மரணம் உண்டாக்கும் வெற்றிடம், கலக்கம் வாட்டுகிறது. கிழவியானாலும் குடும்ப நிர்வாகத்தை திறனுடன் வழிநடத்திச் செல்லும் அந்தத் தாய் விட்டப் போனதும் தான் அவள் ஆற்றி வந்த பணிகளின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது. தலைமுறைகளை இணைத்தாள்; குடும்ப வரலாற்றை பதிவு செய்தாள்; தவறுகளை இடித்துரைத்தாள்; துவளும்போதெல்லாம் ஆறுதல் சொன்னாள். . .இந்தப் பொறுப்புகளை உணர்ந்து ஏற்கும்போது சோகம் மறைகிறது, நம்பிக்கை மிளிர்கிறது.

Apr 30, 202019:12
128. மாயமான் - ந.பிச்சமூர்த்தி

128. மாயமான் - ந.பிச்சமூர்த்தி

இங்கும் அங்கும் அலைபாயும் மனதின் ஓட்டத்தை எண்ணச் சிதறல்களை உடனிருந்து பார்க்கும்போது மலைப்பாகிறது. இப்படித் தான் நம்மில் பலரும் உழன்று கொண்டிருக்கிறோம். தத்துவ விசாரணைப் பிரியர்களுக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.

Apr 28, 202017:15
127. வெயிலோடு போய் - ச.தமிழ்செல்வன்

127. வெயிலோடு போய் - ச.தமிழ்செல்வன்

கிராமத்துப் பெண்ணின் உன்னதமான ஒருதலை காதலைப் பற்றிய கதை. கண்டுகொள்ளாத காதலன் வாழ்வு நன்றாக அமையவில்லையே என்று குமுறி அழும்போது நமக்கு ஏன் ஆத்திரம் வருகிறது?

Apr 26, 202014:35
126. ஸரஸாவின் பொம்மை - சி.சு.செல்லப்பா

126. ஸரஸாவின் பொம்மை - சி.சு.செல்லப்பா

குழந்தைகள் பெரியவர்கள் உறவுகளின் அடிப்படை உளவியலை கொண்டு எழுதப்பட்ட கதை. வெகு சாதாரணமான கதைபோல தோன்றினாலும் எழுதப்பட்ட காலகட்டத்தில் சிறுகதைகளுக்கான கட்டுப்பாடுகளை விதிகளை உடைத்து மீறி எழுதப்பட்டுள்ளது. நவீன சிறுகதைகளின் முன்னோடிகளில் நிச்சயமான இடம் இக்கதைக்கு உண்டு.

Apr 24, 202016:51
125. ஜீவரசம் - கல்கி

125. ஜீவரசம் - கல்கி

எளிய மொழியில் இனிய நகைச்சுவையுடன் எழுதிப் புகழ் பெற்ற கல்கியின் சிறுகதை இது. சிறுவர்களும் கேட்டு மகிழலாம்.

Apr 22, 202026:17
124. இரணிய வதம் - சா.கந்தசாமி

124. இரணிய வதம் - சா.கந்தசாமி

தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வேடம் போடும்போது அந்த பாத்திரத்தின் தீய குணங்கள் தொற்றிக்கொள்கின்றனவோ? இரணியன் வேடம் போடும் பெரும் கலைஞன் செய்யும் அநியாயங்கள் ஒரு முடிவிற்கு வருகிறது.

புயல் கதையில் ஏதும் செய்ய இயலாத கணவனைப் போல இன்றி இந்தக கதையின் நாயகன் பெண்மையை அவமதிப்பவனுக்கு பயங்கரமான தண்டனை கொடுக்கிறான். 

எளிய மக்களின் வாழ்க்கையை அவர்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களை தன் கதைகளில் காட்டும் மிகச் சில எழுத்தாளர்களில் சா.கந்தசாமியும் ஒருவர்.

Apr 20, 202022:27